Tuesday, March 30, 2021

வேக்ஸின் கல்யாண வைபோகமே !

பங்குனி உத்திரத்தன்று இறைவனடி சேர்வது ...மன்னிக்கவும் இறைவனடி  பணிவது சாலச்சிறந்தது என்று சைவ, வைணவ, கௌமார பக்தர்கள் ஒருங்கேற சொல்வதால் கோவிலுக்குச் செல்வது நல்லதென்று பட்டது.   வடக்கு ரத வீதியை அடைந்த எனக்கு அங்கிருந்தே கோவிலுக்கு வரிசை தொடங்குவது சற்று ஆச்சரியமாக  இருந்தது. இந்த கொரோனா காலத்தில் அவரவர்கள் வீட்டில் இருக்கக்கூடாதா, இப்படியா கூட்டம் சேர்வது என்று திட்டிக்கொண்டே வரிசையில் நின்றேன்.  நான் மட்டும் ஏன்  கோவிலுக்குப் போகிறேன் என்கிறீர்களா !  அது வந்து... வந்து.... வந்து.....


இறைவனை ஆழ்ந்து தியானிப்பதே நல்லது. கோவிலுக்கு செல்லும் நினைவு வந்ததிலிருந்து, தரிசனம் முடிந்து பிரசாதம் வாங்கும் வரை இறைவனைத் தவிர எந்த நினைப்பும் இருக்கக்கூடாது என்று நம்பும் எனக்கு வரிசையில் நின்றிருந்த மற்றவர்கள் மேல் கோபம் ! இருக்காதா பின்னே சள சளவெனப்  பேச்சு, சிரிப்பு, கும்மாளம்....  தேவைதானா !


வரிசை எவ்வளவு நீளமென  கேட்டேன்.... உங்கள் முறை வருவதற்கு நாலு மணி நேரமாகும் என்றார் முன்னிருந்த பேச்சாளி ! இருக்காதா பின்னே.... பங்குனி உத்திரம் கூட்டமென்றால் சாதாரணமா !


ஆண், பெண், ஏழை பணக்காரன் என்று ஜாதி  பேதமின்றி பலர் வரிசையிலிருந்தாலும்,  பலர் நீரில்லாமல்   பாழான  நெற்றியுடன்   இருந்தது சற்று உறுத்தலாக இருந்தது.  அது சரி, பக்தி மனதில் இருந்தால் சரி !  பேண்ட் ஷர்ட்டுடன் ஒரு ஜென்டில்மேன், முண்டு சட்டையில் ஒரு குஞ்சுமோன், பர்தாவில் ஒரு பேகம், சரிதாண்டா என ஒரு சர்தார்ஜி என சமத்துவம் நிறைந்த வரிசை !


"டாக்டர் சர்டிபிகேட் வச்சிருக்கியா"  பெரியவரே என்று கேட்டவரை  முறைத்தேன் ! 


உலகத்துக்கே வைத்தியம் பார்க்கும் வைத்தியநாத சுவாமியை பார்க்க வந்திருக்கும் எனக்கெதுக்கப்பா டாக்டர் சர்டிபிகேட் என்று  திருவிளையாடற்புராண சிவனாகக் கொதித்தேன் !

எனக்குப் பின்னாலிருந்தவர் என்னை அமைதிப்படுத்தி.... "மாமா ! டாக்டர் சர்டிபிகேட்  இல்லேன்னா ஊசி போடமாட்டாங்க" என்றார் 

ஊசியா ! என்ன எழவுடா சொல்றே என்று கொதித்தேன் 

முன்னாலிருந்த பாழும்  நெற்றிக்காரரர் ......."ஏ...பெருசு... வரிசைன்னா என்ன ஏதுன்னு கேக்கறது இல்லையா ! இது தடுப்பூசிக்கான க்யூ ! கோவில் தொறக்க மணிக்கணக்குல ஆகும் ! கோவில் அய்யரே நமக்கு முன்னால வரிசைல தான் நிக்குறாரு !  அவர் ஊசி போட்ட பொறவுதான் கோவில் நடையத் தொறக்கணும்"

'அடப்பாவி  எல்லாம் என் தப்பா! நாமதான் பக்தி முத்திப் போயி தப்பான கியூல நிக்குறோமா' என்று செந்தமிழில் இருந்து கடுந்தமிழுக்கு சிந்தனையின் ஃப்ரீக்வன்ஸியை மாற்றினேன் !

இதென்ன அத்திவரதர் தரிசன வரிசையை விட நீளமா இருக்கு. இந்த வரிசைல காத்திருந்தா கோவிட்  வராமலேயே மோக்ஷம் கிடைச்ச்சுடும் போல இருக்கே  ! 




நோயிலிரிருந்து  இந்த உலகத்தைக் காக்க பவரோக  வைத்தியநாதரை வேண்டலாம் என்று சந்நிதி சென்றடைந்தேன். கோவில் அர்ச்சகர் வேக்ஸின் (தடுப்பூசி ) வரிசையிலிருந்தாலும் புண்ணியவான் நடையை திறந்துவிட்டுப் போயிருந்ததால் சுவாமி தரிசனம் கிடைத்தது !  பாரதத்தையும் ஸர்வஜனங்களையும்  கொரோனாவிலிருந்தும் அதன் ஏகபோக உரிமையாளர் மற்றும் தயாரிப்பாளர் சீனாவிடமிருந்து காப்பாற்று என்று கும்புடு போட்டு விட்டுக்  கிளம்பினேன்!

சரியாக கிளம்பும்போது மொபைலில் அழைப்பு.  சென்னையிலிருக்கும் என் மகளிடமிருந்துதான் ..... சென்னையில் கொரோனா ரெண்டாவது இன்னிங்ஸ் ஆரம்பித்துவிட்டதாம். முதல்  இன்னிங்ஸ்  பிசுபிசுத்து  விட்டாலும், இந்தியக் கிரிக்கெட்  அணியைப் போல இரண்டாவது இன்னிங்ஸ் பலமாக இருக்குமாம் என்று பீதியைப் கிளம்பினாள்.  

இந்த தடவை ஆண்களுக்குத்த்தான் பாதிப்பு பலமா  இருக்குமாம்... அதுவும் அவிட்ட நட்சத்திரம்மூணாம்  நாலாம் பாதம் ரொம்ப கஷ்டம்னு ஐராவதநல்லூர் ரத்தினசபாபதி இண்ணைக்கு  காலைலதான் டிவில "கோட்சாரமும்,.  கோவக்சினும்" ங்கிற ப்ரோக்ராம்ல சொன்னார். நீ அவிட்ட நட்சத்திரமோல்லியோ அதான் உனக்கு உடனே ஃ போன் செய்றேன்.

"வெளிலே  வந்ததுதான் வந்தே அப்பிடியே வேக்சின்  போட்டுட்டே வந்துடு ! அம்மாகிட்டே நான் சொல்லிக்கிறேன் " என்று என் பதிலுக்கு காத்திராமல் அடுக்ககிக்  கொண்டே போனாள் .  ....."ஆதார் கார்ட் கைல இருக்கோல்லியோ! "

"நான் என்ன சொல்றேன்னா"  என்ற என் குரல் குறைப்பிரசவமாக முடிந்தது.

ஆண்  பெண் சம உரிமை வேண்டும் என்று இனிமேல் ஆண்கள் போராடவேன்டும் . நம் பேச்சை யாரும் கேட்பதில்லை !

வீட்டுக்கு லேட்டா வந்தா அர்ச்சனா சுவீட்டோடதான்  வரணும் என்ற பழைய விளம்பர பாணியில் நாம் வேக்சினேஷன் சர்டிபிகேட்டோட போனால் தான் வீட்டுக்குள் விடுவார்கள் என்று தோன்றியது .




அரசாங்க ஆஸ்பத்திரியில் வேக்சினேஷன் போட்டுக்கொண்டால்  அமெரிக்காவில் இருக்கும் என் பையனிடம் வாங்கிக்கட்டிக்கொள்ள வேண்டும். ப்ளடி கவர்ன்மெண்ட்  ஹாஸ்பிடல் என்று ஒன்றுக்கு 108  ஜபம் செய்வான் ! நம் கவர்ன்மெண்டை இந்தியாவில் இருக்கும் யார் திட்டினாலும் இந்த பித்த உடம்பு தாங்கிக்  கொள்கிறது. ஆனால் இந்தியாவை நிர்க்கதியாக விட்டு விட்டு வெளிநாட்டில் இருக்கும்  இந்தியர்கள் எவர் சொன்னாலும் பேதை மனம் படாதபாடு படுகிறது. 


இங்கு வேக்சினேஷன் போடப்படும் என்ற பெரிய பதாகையைப் பார்ததுவிட்டு அந்த தனியார் மருத்துவமனைக்குள் நுழைந்தேன். குளுகுளு ஏசி, பீட்டர் இங்கிலீஷ்  ரிசப்ஷனிஸ்ட், டெட்டால்  மணம்  எல்லாம் என் பர்ஸுக்கு  வரவிருக்கும் வேட்டு  பற்றி பறை சாற்றியது !

வேக்சினேஷன் செய்யவேண்டும் என்றததும் 'குழந்தை எங்கே' என்றாள். "

நான்தான் எங்கம்மாவுக்கு கடைசிக்கு குழந்தை, எனக்குத்த்தான்  வேக்சினேஷன்" என்ற என்னைப்  பார்த்து புன்னைகைத்தாள். 

அங்கிள் ! நாங்க DPT , போலியோ, சின்னம்மை, பெரியம்மைக்குத்தான் வேக்சினேஷன் போடுவோம். நீங்க எங்க போர்டுஐ தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க என்றாள் 


ஏம்மா! ஊர் என்றால் உறையூர், மலரென்றால் தாமரை என்பது பழமொழி . அதுபோல இந்த கொரோனா காலத்தில வேக்சின்னு  சொன்னா கோவிட்  வேக்சின்னுதான் அர்த்தம் என்ற என்னை "ஜெயம்" திரைப்பட நாயகி பாணியில் வார்ததையில்லாமல் சைகையால் துரத்தினாள்.



அடுத்து கண்ணில் பட்டது முன்னாள் அமைச்சரின் ஒன்று விட்ட சித்தப்பா பையனின் ஏழு விட்ட கொழுந்தியாள் மருத்துவமனை. முன்னாள் மாண்புமிகுவின் பினாமி என்று நீங்களே கற்பனை செய்துகொண்டு என்னை மாட்டிவிடாதீர்கள் !.


ஆஸ்பத்திரியின் ஜாதகத்தைத்  தெரிந்து வைத்துக் கொண்டிருந்தால்  முதலில் ஊசி போட  பணம் எவ்வளவு என்று கேட்டுக்கொண்டேன். அரசாங்கம் சொன்ன 250 ரூபாய் தானாம் ! ஒரு பைசாகூட அதிகம் இல்லையாம் !


அதே குளுகுளு ஏஸி , அதே டெட்டால் மணம் , அதே பீட்டர் இங்கிலீஷ்  ரிஸப்ஷனாளினியை  தாண்டி தடுப்பூசி போடும் நர்ஸை அணுகினேன். முதலில் ஒரு அலுவலரைப் பார்த்து, ஃபார்ம்  எழுதி, பணம் கட்டி பின்னர் வரச்சொன்னார் . 

அந்த உதவியாளர்  ஆதார் கார்டைக்  கேட்டார். வாங்கியதும் ஷாக் அடித்ததுபோல கார்டை என்னிடமே தெருப்பிக் கொடுத்தார் ! உங்களுக்கெல்லாம் வேக்சின் போட முடியாது என்கிறார் 

ரேஷன் கார்டுலதான் சர்க்கரை கார்டுக்கு அரிசி தரமாட்டேன் என்பார்கள். ஆதார் கார்டுல வேக்சின் பத்தியெல்லாமா எழுதியிருக்கு ! 2000 ரூபாய் நோட்டிலே  மைக்ரோ சிப் மாதிரி ஆதார் லேயும் ஏதாவது தகிடுதத்தம் இருக்குமோ என்று  மோடியை எதற்கெடுத்தாலும் திட்டும் சராசரி 2021 தமிழனாக சந்தேகித்தேன் 


சார் அப்படியெல்லாம் இல்லே ! உங்களுக்கு இன்னும் 60 வயசு ஆகலே . உங்க உருவத்தைப் பார்த்து எங்க பெரியப்பா வயசு 65-70  இருக்கும் நெனச்சேன் உங்களுக்கு 58 தான் ஆகுது.  அடுத்த ரவுண்டுல நீங்க வரலாம் !


அவனை சொல்லி குத்தமில்லை ......முன் வழுக்கை, பின்வழுக்கை,நlடு வழுக்கைன்னு முப்பெரும் வழுக்கையோட இருந்தா 80 வயசுன்னு கூட எண்ணத்தோன்றும். 


என் கல்லூரித் தோழர் கணேஷ்குமார் அடிக்கடி சொல்லும் வசனமிது !

"அண்ணே ஒரு விக் வாங்கி மாட்டுங்க, உங்க முகத்துக்கு நல்லாயிருக்கும்" (அவர் சொல்லாமல் விட்ட வசனம் / மைண்ட் வாய்ஸ்:  "கூட வரும்போது என்னையும் வயசானவன்னு நினைக்கிறாங்க" ! ... பாவம் !அவர் கஷ்டம் அவருக்கு !)

ஏதோ  என் மேல் பரிதாபப்பட்ட  ஹாஸ்பிடல் உதவியாளர் ஏதேனும் வழியில் எனக்கு உதவ நினைத்து   என்னை இண்டர்வியூ பண்ணத் தொடங்கினார் 


போகட்டும் ....உங்களுக்கு டயாபடீஸ்  இருக்கா ?

         இல்லை ! (இது .காலரைத் தூக்கி விட்டு  கொண்டு நான் சொன்னது) 

கொலஸ்டிரால் ????? அதாங்க ரத்தக் கொழுப்பு ?????

        இல்லை ????

பைபாஸ் சர்ஜரி பண்ணியிருக்கீயளா ?????

       பைபாஸ் ரோட்டுக்கு கூட போனதில்லைப்பா !!!!

ரத்தக் கொதிப்பு ?????

       இப்படியே கேள்வி மேல கேள்வி கேட்டா இனிமேல் வரும் 

கிட்னி ட்ரான்ஸ்பிளான்ட் ?????

      இல்லை !!

இது எதுவும் இல்லேன்னா உங்களுக்கு வேக்சின்  கிடையாது .....  

வியாதி  இல்லைங்கிறது ஏதோ  கொலைக்  குத்தம் போல பார்த்தார் !

"சரி போனாப்  போகுது ! எங்க ஹாஸ்பிடல்ல அவுட் பேஷண்டா 3 மணி நேரத்துக்கு அட்மிட் ஆகுங்க. உங்களுக்கு எல்லா செக்கப்பும் எடுத்துட்டு எங்க டாக்டர் உங்களுக்கு வியாதி இருக்கிறது மாதிரி சர்ட்டிகிபிகேட்  கொடுப்பார் . அதை வச்சு உங்களுக்கு வேக்சின்  கொடுக்கலாம் . வேக்சின் வெறும் 250 தான்.!


அவுட் பேஷண்ட்  சார்ஜ், ப்ளட் டெஸ்ட், ஸ்கேன் , எம்.ஆர். ஐ, எல்லாம் 20% தள்ளுபடியோட வெறும் 24,000 த்துல முடுஞ்சுடும். வேக்சின் போட்டதுக்கப்பறம் ஒரு அரை மணி நேரம் முற்றிலும் இலவசமா இங்கேயே தங்கலாம். எதுவும் இல்லேன்னா வீட்டுக்குப் போகலாம். எதுவும் பிரச்சனைன்னா ஒரு ரெண்டு நாள் தங்கி எல்லா டேஸ்டும் பண்ணிப் பார்த்துடலாம் ! 


ஆம்னி பஸ்  அத்வான மோட்டலுள் நுழையும்போது  சர்வர்  மாஸ்டரை தோசைக்கல் காயப்  போடச்சொல்வது   போல் ஆஸ்பத்திரி ஊழியர்கள் என்னை பலிகடா போல் பார்த்தது என்னை மிரள வைத்தது !


ஆஸ்பத்திரி முதலாளி  என்பவர் முன்னாள் கசாப்புக்  கடைக்காரர் என்பது ஏனோ  அபசகுனமாக நினைவுக்கு வர, இந்த தள்ளாத வயதிலும் (ரஜினி அரசியலை விட்டு ஓடியது போல ) குதித்து எஸ்கிப்பினேன் !


 நமக்கெல்லாம் அரசே கதியென்று தோன்ற அரசு மருத்துவனைக்கு நடையைக் கட்டினேன். 


எதிர்பார்த்ததற்கு மாறாக,  தடுப்பூசி மையம் சுத்தமாகவே இருந்தது !  பினாயில்  மணம்  சற்று மூக்கைத் துளைத்தது. டெட்டால் மணத்துக்கு  ஆசைப்பட்டு பினாமி ஆஸ்பத்திரியில் சொத்தை இழப்பதற்கு பினாயில் நாற்றத்தை தாங்கிக் கொள்ளலாம் என்று தோன்றியது.



 அரசனுக்கு ஆசைப்பட்டு புருஷனை பிடிக்காமல் போனது போல எல்லோரும் தனியார் ஆஸ்பத்திரி போனது எனக்கு சவுகரியமாகப்  போய்விட்டது . இங்கு அதிக கூட்டம் இல்லை.  பினாமி ஆஸ்பத்திரியில் இழந்த நம்பிக்கை இங்கு மீட்டெடுக்கப்பட்டது .  மத்திய அரசின்  திட்டம் என்பதாலும், தேர்தல் சமீபிப்பதாலும் ஒவ்வொரு மையத்திலும் 4-5 அலுவலர்கள், ஒரு டாக்டர், இலவச வேக்சின் , இலவச மாத்திரைகள், ஏகப்பட்ட கேள்விகள் என்று ஒரே உபசரிப்பு. 


இப்பிறவிக்கு பெருமை சேர்க்க, மறுமையை எளிதில் எட்ட, பெயர் சொல்லும் படி எந்த வியாதியும் இல்லாத காரணத்த்தால் மீண்டும் நிராகரிக்கும் நிலைக்கு வந்தேன். அரசு அலுவலகங்களில் எல்லாவற்றிற்கும் ஒரு குறுக்கு வழி  உண்டு என்பதால் ,  ஏதாவது ஒரு வியாதி இருப்பதாக ஒரு ஃ பார்மில் எழுதிவிட்டு தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதித்தார்கள். அன்பளிப்பு ஏதும்  எதிர்பார்க்காமல் !


உங்களுக்கு கோவிஷீல்டு வேணுமா இல்லை கோவாக்ஸின் வேண்டுமா ?????

    எனக்கு கோவாக்ஸின் தான் வேண்டும் 


எங்ககிட்ட கோவிஷீல்டு ஸ்டாக் தான் இருக்கு ! அதுதான் போடமுடியும் 

      பின்னே எதுக்கு எது வேணும்னு கேட்டீங்க 


இது மத்திய அரசு உத்தரவு .... பேஷண்ட் கிட்ட கேட்டுட்டு அதுக்கப்புறம் எது ஸ்டாக் இருக்கோ அந்த  ஊசி போடணும்னு ! (போங்கடா அப்ரசண்டிக்களா  என்று மனதுக்குள் திட்டினேன் )

சரி சரியென்று ஒரு வழியாக ஊசி போடும்  ஆண்  நர்ஸ் முன்னால்  உட்க்கார்ந்து கொண்டேன். எல்லாத்துக்கும் கொடுப்பினை வேணும்... நமக்கெல்லாம் ஸ்நேகாவா ஊசி போட வருவா... பேஷ் பேஷ் ரொம்ப நன்னாயிருக்குன்னு உசிலை மணியோ ஊசிப்போன போண்டா மணியோ தான் !


ஊசி போடணும்னா பேண்ட் கழட்டணுமா ??? கேட்டது நான் !

பேண்ட் கழட்டுறதும் கழட்டாததும் உங்க இஷடம்  ..... நான் கைலதான் ஊசி போடுவேன் ..... விவேக் சமேத டாக்டர் மாத்ருபூதம் நினைவுக்கு வந்தார் !

ஊசி போட்டுக்கொண்ட பிறகு ஒரு அரை மணி அவர்களது கண்காணிப்பில் காத்திருக்கவேண்டியிருந்தது. என்னுடன் இருந்த சக காத்திருப்பாளர்கள் பல விதத்தில் பீதியைக் கிளப்பினார்கள். அவர்கள் வாட்ஸெப்ப்பால்  அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது புரிந்தது.

        கோவிஷீல்ட் போட்டுக்கொண்டால்  காது மந்தமாயிடுமாமில்லே !

        முதல் டோஸ் போடும்போது வலியில்லேன்னா மருந்து வேலை செய்யலைன்னு                        அர்த்தமாம் ! வேறே வாக்சின் போடணுமாம் !

    முதல் டோஸைவிட இரண்டாவது டோஸ்தான் பக்கவிளைவுகள், வலி ஜாஸ்தியா         இருக்குமாம் !

ஊசி வலியை விட வதந்திகள் அதிக தொந்திரவு செய்ததனால் மௌனம் கலைத்த்தேன்

        ஒண்ணு புரிஞ்சுக்கோங்க ! இது வரைக்கும் யாருக்குமே ரெண்டாவது         டோஸ் கொடுக்கவே ஆரம்பிக்கல . அப்படி இருக்கும்போது 2வது டோஸ்         அதிகம் வலிக்கும்னு சொல்றது புருடான்னு புரியலையா !

நான் சொன்னது உரைத்ததோ இல்லையோ  எல்லோரும் படபடவென நான் சொன்ன தகவலை தங்களது சொந்தக் கண்டுபிடிப்பாக உடனே வாட்ஸெப்பில் அனுப்பி  ஜென்ம சாபல்யம் பெற்றார்கள்!

செலவில்லாமல் தடுப்பூசி போட்டுக் கொண்ட பெருமையில்  போரில் வென்ற மாவீரனைப்போல் பூரித்து வீட்டுக்கு வந்த எனக்கு ஆச்சர்யம்  காத்த்திருந்தது. வீட்டு வாசலில் என்னை வரவேற்க கையில் ஆரத்தித் தட்டுடன் என் மனைவி. 


ஆனாலும் ஒரு வேக்ஸின் போட்டுக் கொண்டதற்கு ஆரத்தி, வரவேற்பு எல்லாம் கொஞ்சம் ஓவர் என்ற எனக்கு கைமேல் மூக்குடைப்பு கிடைத்தது.


ஆரத்தி ஒண்ணுதான்  குறைச்சல். பீட்ரூட் நறுக்கின தண்ணியை வாசல்ல இருக்கிற செடிக்கு ஊத்தலாம்னு வந்தேன் ! 

"அதெல்லாம் போகட்டும். இப்போ முனிசிபாலிட்டிலேயிருந்து வந்தாஙக. இல்லதரசிஙகளெல்லாம் கஷ்டப்படக்கூடாதுன்னு வீட்டுகே வந்து வேக்சின் போட்டுட்டுப் போனாங்க. 10 க்ரோசின் மாத்திரை ஃப்ரீயா கொடுத்துட்டு போனாங்க !

ரெண்டு நாளைக்கு ஜுரம் வரலாமாம். அதுனால நான் சமைக்க மாட்டேன். நீங்களே சிம்பிளா சமைச்சிடுங்க ! ஸ்விக்கியோ, போக்கியோ அதில் ஆர்டர் பண்ணி பணத்தை கரியாக்காதீங்க.. நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறேன்!

ஆண்டவா இதென்ன சோதனை... கஷ்டமே படாதவங்க  ரெஸ்ட் எடுக்கிறதும், கஷ்டப்பட்டு வந்த ஆண்கள் மீண்டும் மீண்டும்  துவைக்கப்படுறதும் ! 

இதுக்கு ஒரு முடிவே இல்லையா !

அஅஅஅவ்வ்வ்வ் !




























Wednesday, March 24, 2021

"ராமேஸ்வரம் போனாலும் சனைச்வரம் விடாது"




ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து அர்த்த ராத்திரி மும்பை சேர்ந்து விடி காலை விடுதி சேர்ந்து தொலைக்காட்சியைத்தட்டி விட்டால் புத்தம் புதிய ஹிந்தி திரைப்படம் . நேரம் மறந்து பார்க்க தொடங்கியதும் நன்கு தெரிந்த ஒரு விளம்பர நடிகை ! நடிகைகள் எல்லா மொழியிலும் நடிப்பது சகஜம் என்று மனதை சமாதனம் செய்த மறு நிமிடம் இன்னொரு தெரிந்த முகம்.......பிரஷாந்த்.... ஏதோ தீய்ந்த வாடை அடிப்பது போலிருந்தது ... மறு நிமிடம் தெளிவானது . பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ....." உளியின் ஓசை", ..... 

இல்லை...இல்லை ...."பொன்னர் சங்கர்". 

ஹிந்தியில் ...... முருகா ....இதைத்தான் "ராமேஸ்வரம் போனாலும் சனைச்வரம் விடாது" என்று சொல்வார்களோ! என்னே ஒரு தீர்க்க தரிசிகள் நமது முன்னோர்கள் !

No Doubt Delhi has a "Cough Minister"

Delhi is an amazing place with all four seasons, lovely roads, greeneries and an outstanding place to eat. Not to talk of the people, who represent the various states of the country and bring with them their own culture.


No doubt, I was looking forward to visiting Delhi last week, a city about which I have very pleasant memories, given that I spent 5+3 years there. The city was (is ??) very well designed and had an old world charm.


My happiness was shortlived and lasted only till the aircraft entered the city limits. Even at 12 noon, nothing was visible. Smoke, smog, whatever you call it.






Drive to the city in the car was even worse, with the smell of burnt garbage chasing you wherever you go. I was shocked to see....believe me or not, A MOUNTAIN OF GARBAGE,within city limits.


I am attaching pictures, a video and a google map link for you to see what I am saying.


In the heart of the city, they are burning garbage, but are complaining about neighbours UP, Haryana and Punjab for burning agricultural wastes. I could not believe my my eyes when I saw this mountain of burning garbage, when the whole city is choking of smoke.


Map: Link to Mountain of Garbage: https://goo.gl/maps/DBs4ow44uoT2


Video: https://youtu.be/sTcMJ0JQYqw


I was also surprised to see a line up of at least 50,000 kites and eagles, for at least half a kilometre from this site. Where eagles dare, you know what is available for their prey !

Terrible. Sad. This is not Delhi


It is said that in Kaliyuga, punishment is instant. No doubt, they now have a "COUGH MINISTER"

பாவக்கா மண்டகப்படி

 


அறியாமையில் ஒரு கேள்வி....மதுரை சித்திரைத்திருவிழா நாட்களில் சொல்லபடும் "பாவக்கா மண்டகப்படி" பெயர் வரக் காரணம் என்ன தெரியுமா? மதுரை மண்ணின் மைந்தர்கள் தயவை நாடுகிறேன்!


பின்னாளில் கிடைத்த பதில்: சகோதரர் Ramakrishnan Ramaswamy (நன்றி)அவர்களிடமிருந்து வந்த தகவல்...


பாவகழுவாய் மண்டபம் என்று பெயர். ஐராவதம் என்னும் யானை தன்னுடைய பாவத்தை கழுவி சாப விமோசனம் பெற்றதை குறிக்கும் திருவிழா. நான்காம் நாள் சித்திரை திருவிழாவில் அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரரை தரிசித்து நாம் செய்த பாவங்களை கழுவி விமோசனம் பெற நடைபெறும் திருவிழா. அந்த மண்டபம் காலப்போக்கில் பாவக்கா மண்டபம் என மாறியது.

Mahatma Gandhi lives only in "our" hearts.




National newspapers have long forgotten him. Why will they remember him...after all he doesn't belong to the family that has made good use of his Well-deserved surname.


A couple of years back I instantly withdrew my subscription to an All India Newspaper which boasts of being the Numero Uno by circulation, for the reason that on a Gandhi Jayanthi day there was no mention about Gandhi in any part of their newspaper.


This morning I realized that Chennai's top newspaper is not far behind( Hey Ram !). There were no first page mentions about this great man....none until you reached the sixth page, but that was about the erstwhile ruling family and not THE Mahatma.


Where do I find Mahatma in Newspapers ?Will mentions about him be only in the half page Government advertisements?


What will the Gen-Next get to know about his contributions and World-acclaimed Ahimsa.


I must curse myself for depending on Newspapers to talk about the Mahatma.


Long live Mahatma, but only in our hearts and Govt advertisements !

திருவாளர் “புயல் கஜா” தமிழகம் வருகை



திருவாளர் “கஜா” தமிழகம் வருகை


(இது வானிலை அறிக்கை அல்ல)


வானத்தில் ஒரு சிறு மேகம் வந்துவிட்டால் போதும் ! உடனே செல்போனும் கருத்துமாக வந்துவிடுவார்கள். அவர்களை முந்திக்கொண்டு அவர்களது கருத்துக்கள் இங்கே!


• பதினாலாம் தேதி புயல் வரும் என்று பத்து வருடம் முன்பே கொட்டாம்பட்டி பாம்பு பஞ்சாங்கத்தில் எழுதியிருக்கிறார்கள். இதோ இந்தப்படத்தில் சிவப்பு வட்டமிடப்பட்ட இடத்தைப் பார்க்க !


• வத்தலக்குண்டு பாபா அவர்கள் இந்த வருடம் தீபாவளி காலையில் கொண்டாடப்படும் என்று சொல்லியிருந்தார்! மேலும் சென்னையில் கட்டப்பட்ட வெள்ளவடி நீர் வாய்க்கால் (storm water drain) இந்த வருடமும் அடைத்துக் கொள்ளும் என்று ஞான திருஷ்ட்டியில் சொல்லியிருந்தார். அவர் சொன்ன எல்லா பலன்களும் பலித்த நிலையில் கஜா புயலைப் பற்றி அவர் சொன்ன ஞானதிருஷ்டி வீடியோ யு டியூபில் பார்க்கவும். இதுவரை மூன்று மில்லியன் முறை பார்க்கப்பட்டு விட்ட்து.(ஏண்டா புயலுக்கு பேர் வச்சே மூணு நிமிஷம் தானேடா ஆச்சு !)


o வத்தலக்குண்டு பாபாவின் வாக்குப்படி சென்னையில் வெள்ள நீர் திருநீர்மலை மேல் கோபுரத்தைத் தொடும் !


• மாதத்துக்கு 100 ரூபாய்க்கு ஜியோ போனில் டேட்டா வாங்கமுடியாதவன் கூட, டேட்டா கடன்வாங்கி "அமெரிக்க நேவி சொல்லியிருக்கான் கஜா என்பது அதிதீவிர புயலாம்ப்பா ! நுங்கம்பாக்கம் ராமசந்திரன் டிவியில சொல்றதெல்லாம் வேஸ்ட்" என்று பீட்டர் விடுவான் !


• பள்ளி மாணவர்கள் "சோட்டா பீம்" பார்ப்பதை தியாகம் செய்துவிட்டு, வானிலை அறிவிப்பு பார்ப்பார்கள் ( பள்ளி விடுமுறையா இல்லையா என்பதுதான் அவர்களுக்கு வேண்டியது ). மழை விடுமுறையை ஈடு செய்ய பின்னாளில் எல்லா சனிக்கிழமைகளும் பள்ளிக்குப் போகவேண்டுமென்ற கவலையைப் பின்னால் பட்டுக் கொள்ளலாம் !


• இந்த நர்ஸரி ஸ்கூல் கடங்காரன், மழை காரணமாக மூணு மணிக்கே குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு போகச்சொல்லாமல் இருக்கணும் என்று வேலைக்குப் போகும் தாய்மார்கள் பிரார்த்தனை செய்வார்கள் !


மாநகராட்சி புதுக் காரணங்களுக்காக சாலையைத் தோண்டுவார்கள்


• பாதியில் நிறுத்தப்படட "வெள்ளநீர் வடி வாய்க்கால்கள்" மழை நீர் சேமிப்பு திட்ட்ங்களாக பரிணாமவளர்ச்சி அடையும்.


• மியான்மர் போகவிருந்த கஜா புயலை தமிழகத்திற்கு திசை திருப்பி கஜேந்திர மோடி தமிழகத்திற்கு துரோகம் செய்து விடடார் என்று ட்வீட்டர், பேஸ்புக் , மீம் கூறும் நல்லுலகம் புலம்பும்.


• புயல் சென்னையைக் கடந்து ஒரு மாமாங்கம் ஆகி, கார்ப்பரேஷன் ஆட்கள் கூட விழுந்த மரங்களை அப்புறப்படுத்தி விடட நிலையில், சென்னை வானிலை நிலையத்தில் இருந்து (நாற்காலியில் பின்னால் ஒரு டர்கி டவல் புடை சூழ ) 40 டிவி மைக்குகளுடன் "கஜா புயலால் சென்னைக்கு மழை வர வாய்ப்பு இருப்பதாக" வானிலை பின்னறிவிப்பு பகருவார்கள் .


கடைசியாக . ஒரு பின்குறிப்பு ... நான் படித்த படிப்பு கற்றவித்தை எல்லாவற்றையும் கற்பனையோடு கலந்து இப்படி ஒரு பதிவு போட்டாஉடனேயே “நீ சுஜாதா மாதிரியே எழுதியிருக்கிறே ! சொந்த ஸ்டைல் ல எப்போ எழுதுவேன்னு” ஒருத்தன் கமெண்ட் போட்டு வெறுப்பேத்துவான் !


முக்கியமான உபதேசம்: புயல் மழை பற்றி விவரம் அறிய நம்பகமான அறிக்கைகளை மடடுமே படிக்கவும்/ பகிரவும். வதந்திகளை நம்பாதீர்கள். தகவல்களை பகிருமுன் ஒன்றுக்கு இருமுறை சரிபார்த்து பின் பகிரவும் !

Dear Election Losers ..... May I help you ??

 


With NDA/BJP projected to return to power hands down, UPA may need support from people like us in helping them come out with lame excuses to hide their loss. My democratic duty to come out with arguments in favour of UPA.

1) EVMs were programmed to help BJP in the constituencies they won. However, UPA's win cannot be attributed to EVM hacking.

2) (Mother of all excuses) Press any button in the EVM, the vote will go for Lotus.

3) Stretching the elections to several phases and over two months, gave undue advantage to NDA.

4) The constituencies where UPA lost , the sun was too hot for the UPA supporters to vote. UPA voters who used an umbrella while in the hot sun, were denied voting, as Umbrella represented an independent candidate's symbol.

5) In Muslim dominated constituencies the EC deliberately chose the fasting month of Ramadan, so that the Muslim brethren will have no energy to queue up at the polling booths and vote for UPA. (However it is to be forgotten that Voters in Gujarat have consistently voted for Modi)

6) While UPA voters were denied votes, NDA voters were allowed multiple votes. In some cases it was witnessed that some voters had voted 20 times, evidenced by Indelible ink in their ten fingers as well as ten toes.

7) In Bengal every visit of Amit shah resulted in violence for which only BJP is to be blamed. It is immaterial that each one of Amit shah's rallies in other states were peaceful.

8) Vigilant central protection forces denied booth capturing, thereby denying our dues. If elections were held on a single day throughout the country, such forces could not have effectively controlled us. (Sob...Sob)

9)Pre-election Opinion Polls sponsored by our party should have been used to decide strength in the Parliament. By that way precious resources could have been saved by way of election expenses.

10)We have few more excuses but the throat is choking. If we can't win despite teaming and scheming, casting aspersions without basis on the ruling party, in 2024 we will be in single digits.

( The above is not to discredit the EC. EC deserves appreciation for smooth conduct of elections as in previous occasions)

Hat-trick B.Kalyanasundarm

 



Advantages of falling sick include more opportunities to think of God as well as about events of yester-decades. In one of such recent days, I was keen to know how the popular cricketers of the seventies looked like today and one cricketer who came to my mind instantly was Kalyanasundaram, pace-spearhead for Tamil Nadu, Kerala and South Zone. I read an interesting article on him and how he came up against all odds(link provided). First on my experiences in sighting Kalyanasundaram !


Those days we knew cricketers only by what is read in the newspapers and what is heard from the radio commentators. Occasionally you see pictures in Indian Express, but you can’t make much out, as none of the pictures used to have any clarity. One day the picture will say “Gavaskar drives”, but the next day the same pic will be reproduced with the caption “Amarnath hooks”. You could seldom differentiate. As a developing fast bowler I was keen to see Kalyanasundaram bowl.

I got an opportunity to see Kalyanasundaram in flesh & bones, when he came to play at the Madura College Cricket ground (one ground which even in those days was of a good standard, including a nice gallery…..which our English lecturer Krishnamurthy used to say is the abode of  “Subramaniapuram Somberikal”).

Kalyanasundaram represented LMW, Coimbatore, a powerful team, which also had a good budget to spend on players and matches. When they play there will also be a couple of crates of “Colours” meaning  beverages like Fanta, Coke, which were beyond the reach of commoners. Madurai cricketers were of the “Dharumi” kind and some of us used to comment, we should atleast buy a crate of “mappillai Vinayagar Colour” even if it means to sell our neighbour’s bicycle.

Going by my benchmark for a pace-bowler that the person should be tall, well built, aggressive, and dark, I could not sight any Kalyanasundaram in the playing eleven. I was looking for a Wes Hall, Kapil Dev and Rajamannar (local hero) and all the three fitted well into my benchmark including the right shade of skin. Alas I could not locate Kalyanasundaram anywhere in the ground.

One of my more knowledgeable friends ( he arrived ten minutes ahead of me and should have gone though the very same experience until some one who reached the ground 10 mts earlier clarified him) pointed out to a fragile looking man, skinny, medium height, not so dark, heavy-spectacles held in position with an elastic band, a pronounced adam’s-apple and more encomiums which will disqualify him to be a fast bowler in my court-of-law.

In disbelief I yelled at my friend (with my acid tongue)… “Idhu Kalaynasundaram illadaa…Edho Kaamala Sundaram”.

Kalayasundaram did not waste much time in proving me absolutely wrong when he ran with the cherry from a fairly longer run up and made his deliveries do all the talking.

For probably the first time I realized in life that looks can be very deceptive….only performances matter.

Now read on to know more about how him. My apologies to him for my caustic remark and My best wishes for a long and healthy life.

Link to the article:  https://prtraveller.blogspot.com/2011/08/kalli-b-kalyanasundaram.html

கோடரிக்காரன் கதை -2021

 


கோடரியை குளத்தில் தவறவிட்டு, கடவுள் அருளால் (தங்க, வெள்ளி, மற்றும் மரத்தாலான) மூன்று கோடரியையும் பெற்றவனின் கதையின் இக்கால திரிபு பல வருடங்களிற்குப் பிறகு மீண்டும் படிக்க நேர்ந்தது. புதுக்கதை படித்திராதவர்களுக்கு ....இதோ >>> ஒரு திருவிழாவிற்கு சென்ற, மனைவி மீது பாசம் கொண்ட ஒரு ஏழை, கூட்டத்தில் மனைவியை தொலைத்துவிட்டான். கடவுளிடம் முறையிட, கடவுள் தோன்றினார். பழைய கதையைப்போல சோதிக்க எண்ணிய இறைவன், முதலில் ஹேமமாலினியைக் காட்டினார். நம் நண்பர் உடனே இந்த கனவுக்கன்னியே என் மனைவி என்றார். கடவுள் அவனது பேராசையைக் கடிந்து, சபிக்க, ஏழை பணிந்து கடவுளிடம் " நான் செய்ததற்கு காரணம் உண்டு. முதலில் நீ ஹேமமாலினியைக் காட்டுவாய், நான் இல்லையென்பேன் ! பின்பு ஸ்ரீதேவியைக் காட்டுவாய் நான் இல்லையென்பேன் ! கடைசியாக என் மனைவியைக் காட்டுவாய், நான் ஆம் என்பேன் நீ உச்சி குளிர்ந்து என் நேர்மையை மெச்சி மூன்று பெண்களையும் என்னிடம் விட்டுவிட்டு மறைந்து விடுவாய் ! ஏழை நான் என்ன செய்வேன் ! கோடரிக்காரன் கதை தெரிந்தவனாயிற்றே நான் "
கோடரியை குளத்தில் தவறவிட்டு, கடவுள் அருளால் (தங்க, வெள்ளி, மற்றும் மரத்தாலான) மூன்று கோடரியையும் பெற்றவனின் கதையின் இக்கால திரிபு பல வருடங்களிற்குப் பிறகு மீண்டும் படிக்க நேர்ந்தது. புதுக்கதை படித்திராதவர்களுக்கு ....இதோ >>>

ஒரு திருவிழாவிற்கு சென்ற, மனைவி மீது பாசம் கொண்ட ஒரு ஏழை, கூட்டத்தில் மனைவியை தொலைத்துவிட்டான். கடவுளிடம் முறையிட, கடவுள் தோன்றினார். பழைய கதையைப்போல சோதிக்க எண்ணிய இறைவன், முதலில் ஹேமமாலினியைக் காட்டினார். நம் நண்பர் உடனே இந்த கனவுக்கன்னியே என் மனைவி என்றார். கடவுள் அவனது பேராசையைக் கடிந்து, சபிக்க, ஏழை பணிந்து கடவுளிடம் " நான் செய்ததற்கு காரணம் உண்டு.

முதலில் நீ ஹேமமாலினியைக் காட்டுவாய், நான் இல்லையென்பேன் ! பின்பு ஸ்ரீதேவியைக் காட்டுவாய் நான் இல்லையென்பேன் ! கடைசியாக என் மனைவியைக் காட்டுவாய், நான் ஆம் என்பேன் நீ உச்சி குளிர்ந்து என் நேர்மையை மெச்சி மூன்று பெண்களையும் என்னிடம் விட்டுவிட்டு மறைந்து விடுவாய் ! ஏழை நான் என்ன செய்வேன் ! கோடரிக்காரன் கதை தெரிந்தவனாயிற்றே நான் "

மனப்பக்குவம்

 


மனப்பக்குவம் என்பது என்ன?? எம்பெருமான் படம் முதலில் இருந்தாலும், முதலில் உங்கள் கண்களில் தட்டுப்பட்டது வலது பக்கம் இருக்கும் லட்டு என்றால், உங்களுக்கு மனப்பக்குவம் வரவில்லை என்பதாகிறது. உண்மையைச் சொல்கிறேன். நான் முதலில் பார்த்தது கடைசியில் பார்க்கவேண்டியதே!!! பயிற்சி போதாது.


For the sake of friends who donot follow Tamil, I am translating the post.

"What is Mental Maturity ?"

Picture of Lord Balaji is the first picture given below but if one had sighted Laddu "FIRST", then he/she may not have achieved mental maturity.

I failed in this test; the one i should have sighted last is the one I sighted first. Long way to go.....😃😃🤣

How fast are the planets moving ?

 



Many of us may already know this, but each time I read, it is mindboggling and pushes me to a philosophical mode, that we are not even a small nano particle in the creation of God. Earth revolves around itself and the rotational speed measurable at the Equator is 460 metres per second or 1600 kms per hour The speed at which the earth goes around the sun is at a staggering 30km/sec Or 108,000 kms per hour Then the solar system goes around the milky way at 828,000 kms/ Hour and it takes 230 million years to go once around the milky way. Then the milky way, this and that. Next when time when you drive at 100plus kms speed in the highway, don't think too much of your speeding skills 😆😆

Sanskrit equivalents for titles of relatives

 


With the arrival of Mahalaya, a holy phase during which we remember and make offerings to departed souls in the family, extended family and even to friends, knowing the Sanskrit equivalent of relations will help. Some are given below:

English Sanskrit Transliteration

Mother माता Mātā
Father पिता Pitā
Maternal Grandfather मातामहः Mātāmahaḥ
Paternal Grandfather पितामहः Pitāmahaḥ
Maternal Grandmother मातामही Mātāmahī
Paternal Grandmother पितामही Pitāmahī
Husband पतिः Patiḥ
Wife पत्नी Patnī
Daughter पुत्री Putrī
Son पुत्रः Putraḥ
Elder Brother ज्येष्ठभ्राता Jyeṣṭhabhrātā
Younger Brother कनिष्ठभ्राता Kaniṣṭhabhrātā
Elder Sister ज्येष्ठभगिनी Jyeṣṭhabhaginī
Younger Sister कनिष्ठभगिनी Kaniṣṭhabhaginī
Maternal Uncle मातुलः Mātulaḥ
Paternal Uncle पितृव्यः Pitṛvyaḥ
Wife of Maternal Uncle मातुलानी Mātulanī
Wife of Paternal Uncle पितृव्या Pitṛvyā
Father-in-Law श्वशुरः Śvaśuraḥ
Mother-in-Law श्वश्रूः Śvaśrūḥ
Wife’s Brother श्यालः Śyālaḥ
Wife’s Sister श्याली Śyālī
Husband’s Brother (Elder) ज्येष्ठभ्राता Jyeṣṭhabhrātā
Husband’s Brother (Younger) देवरः Devaraḥ
Husband’s Sister ननान्दा Nanāndā
Grandson पौत्रः Pautraḥ
Granddaughter पौत्री Pautrī
Daughter’s Son दौहित्रः Dauhitraḥ
Daughter’s Daughter दौहित्री Dauhitrī

आवुत्त m. Avutta brother-in-law
सखि m. sakhi brother-in-law
जामातृ m. jAmAtR brother-in-law
श्याल m. zyAla brother-in-law [wife]
देवन् m. devan brother-in-law
स्याल m. syAla brother-in-law [wife's brother]
श्वशुर्य m. zvazurya brother-in-law

"கொரோனா கொசுக்கடியால் பரவுமா


"கொரோனா கொசுக்கடியால் பரவுமா" அல்லது "ஈமெயிலால் கொரோனா தாக்குமா" என்று இந்தப் பதிவுக்கு தலைப்பு வைக்கலாம் என்று இருந்தேன். மூன்று மணி நேரம் வேர்க்க விறுவிறுக்க எழுதி ஒரு பதிவு போட்டால், எழுதினவனத் தவிர யாரும் படிக்கிறதில்லை.

(முந்தைய பதிவு: http://scribblingsofark.blogspot.com/2020/04/blog-post_8.html)

பத்திக்கிற மாதிரி ஒரு தலைப்பு கொடுத்தா, விழுந்தது விழுந்து படிக்கிறாங்க. ஆனால் கமெண்ட்ஸ்ல துப்பிட்டு போயிடுவாங்க (அதுக்குத்தான் யுடியூப்ல பலர் கமெண்ட்ஸை டிசேபிள் செய்ராங்களா ?) ஐயையோ துப்புவது என்பதை அரசு தடை செய்திருக்கிறதே... அதைப் பத்தி பேசலாமா? கூடாதா? ....நாம பேசுவோமே !.

இந்த சீசன் ஸீக்வல் சீசன் .... நாட்டுல சினிமாப் படத்துக்கு ஒரு காலத்திலே கதை பஞ்சம் . மற்ற மொழிக் கதையை திருடினாங்க ...அப்புறம் பழைய கால திரைப்படப் படப் பெயரைத் திருடினாங்க/ உபயோகிச்சாங்க. பின்னர் அதுவும் போரடிச்சுப் போய் அவங்க படப் பெயரையே (ஒளவையார் மாதிரி) ஒன்று இரண்டு என்று வரிசைப் படுத்தி நம்மையும் படுத்தினார்கள். ஹிந்திப்படமான ஹவுஸ்புல் ஐந்து குட்டி போட்டுவிட்டதாம் (ஆமாம் பெயர்தான் ஆங்கிலம், திரைப்படம் ஹிந்தி) .... எதற்கும் நடுவில் சம்பந்தாசம்பந்தம் இல்லாமல் ஹிந்தி ஒழிக என்று ஒரு முறை கூவிவைப்போம், இல்லையென்றால் நம்மை மற(த்)தமிழன் என்று யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்

எல்லாப்படங்களுக்கும் சீக்வல் வந்துவிட்டது நாமும் நம் கொரோனா பதிவிற்கு சீக்வல் ஒன்று போடலாம். (அப்படியாவது நமது முந்தைய பதிவைப் படிப்பார்கள் என்ற நப்பாசைதான்). சமூக வலைகளில் வரும் பதிவுகளுக்கு சாகித் அகாதமியில் தனிப் பரிசு ஒன்று நிறுவும் போது உபயோகமாக இருக்கும்.

எப்படியும் கொரோனா விடுமுறை-1, விடுமுறை-2 (அதுக்கும் சீக்வலா? ) முடியும் போது முகசவரம் செய்யாமல் தாடி கால் கிலோ மீட்டர் வளர்ந்திருக்கும் .... காய்கறி வாங்க எடுத்துச் செல்லும் ஜோல்னாப் பை வேறு நமக்கு ஒரு அறிவாளி தோற்றத்தைக் கொடுக்கும். பேரையும் கொரோனாதாசன் அல்லது கிருமிநாசன் என்று தாறுமாறாக தமிழ்ப்படுத்தி விட்டால் சாகித்ய அகாதமி விருது நமக்குத்தான் ! ஜனாதிபதியிடம் இருந்து விருது பெரும் கண்கொள்ளாக் காட்சி ....ம் ம்

சரி கற்பனை உலகை விட்டு பூவுலகுக்கு வருவோம் .....

கொரோனா நமக்கு கற்றுக்கொடுத்த முதல் பாடம் "துப்பு" . துப்பு என்றால் உமிழ்வது என்பது மாத்திரமே பலருக்குத் தெரிகிறது. ஆனால் துப்பு என்பதற்கு (ஒன்றல்ல, இரண்டல்ல) 29 பொருட்களை தமிழ் நமக்கு அளிக்கிறது. வள்ளுவரின் ஓர் குறள்

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை

மழையின் சிறப்பைப் பற்றி கூறும் போது வள்ளுவர் "துப்பு" என்ற அருமையான வார்த்தையின் பல பொருட்களை ஒன்றாகக் கோர்த்து சொல்மாலையாக அருளியிருக்கிறார் .

("துப்பு" என்ற வார்த்தையின் பொருள்: ஒரு சில...... விக்கிப்பீடியாவிலிருந்து....

உளவடையாளம், உணவு, நெய், சத்து, வலிவு, சாமர்த்தியம், செம்மை

உதவி, சகாயம், வலிமை, அறிவு,திறமை,ஆராயச்சி, முயற்சி,பெருமை, துணை, ஊக்கம்,பொலிவு,நன்மை,பற்றுக்கோடு,தன்மை, தூய்மை,உளவு, பகை, பவளம், அரக்கு,சிவப்பு,நுகர்ச்சி,நுகர்பொருள். உணவு,துரு,உமிழ்நீர்,நெய், ஆயுதப்பொது)

28 நல்ல பொருட்களையும் விடுத்து நம்மில் பலர் சிரமேற்கொள்ளும் ஒரே பொருள் துப்புவது (உமிழ்வது). நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் "துப்பி துப்பியே நம்ம நாட்டை ஒரு வியாதி நாடாக மாற்றிவிட்டீர்கள்" என்று சொன்னது இன்று உறுத்துகிறது!

"து" என்ற ஒரே வார்த்தையை வைத்து அருணகிரிநாதர் வில்லிபுத்தூர் ஆழ்வாரை வென்றார் என்று வரலாறு கூறுகிறது. அவரது பாடல் (பொருள் வலைத் தளத்தில் எளிதில் கிடைக்கிறது)

திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா

திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா

திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து

திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே

"து" என்ற வார்த்தையை ஆக்கபூர்வமாக பயன்படுத்த ஆயிரம் வழிகளிருக்கும்போது நாம் ஏன் அழிவுக்குப் பயன்படுத்த வேண்டும்.

தமிழ் நாட்டில் ஓரளவு பரவாயில்லை. வட, கிழக்கு மாநிலங்களில் , உமிழ்வது மிக மிக அதிகம். கொரோனா அச்சத்தால், ஓரளவு குறையலாம், அரசு கடுமையான நடவடிக்கையெடுத்தால் !

கொரோனாவால் இந்தியாவின் சுகாதாரம் மேம்படுமென நம்பலாம். ஸ்வச்பாரத் என்ற முனைப்பாட்டால், மேலைநாட்டிற்கொப்பான அளவு இல்லாவிட்டாலும், கணிசமான அளவு தூய்மை ஆகியிருக்கிறது என்று "தமிழ் கூறும் நல்லுலகு தவிர்த்து" மற்ற உலகங்கள் ஒத்துக் கொள்கின்றன. கொரோனாவால் ஏற்பட்ட விழிப்புணர்வோ (அல்லது "பீதியோ") தூய்மையை சிறிது மேம்படுத்தும்.

நான் வசிக்கும் கிராமத்தில் இருக்கும் படிப்பறிவில்லாத குடும்பங்கள் கூட கொரோனா அறிவிப்பு வந்ததும் வாங்கிய முதல் பொருள் "கைகழுவும் டெட்டால் சோப் ". அவர்களது குடும்பத்தின் அடுத்த தலைமுறை சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் என நம்பலாம்.

பிரபலமில்லாத ஆலய தரிசனங்களுக்காக நான் பல சிற்றூர்கள், குக்கிராமங்கள் தேடிப் போன போது, பல கிராமங்களில் கண்ட அறிவிப்புப் பலகை சற்று பெருமைப்பட வைத்தது .... " திறந்த வெளி மலஜலம் தவிர்த்த கிராமம்" . ஆங்காங்கே ஓரிரு தவறுகள் நடந்தால் கூட, இயற்கையின் அழைப்பின் போது என்ன செய்யக்கூடாது என்ற விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது !

மேலை நாடுகளை பார்க்கும்போது இந்தியா பரவாயில்லை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருக்கிறது என்றே தோன்றுகிறது. கட்டுக்குள் இருக்கிறதா அல்லது கட்டுக்குள் வைக்கப்பட்டு இருக்கிறதா என்பதை காலம்தான் சொல்லவேண்டும்.

ஏகப்பட்ட கெடுபிடிகள், கட்டுப்பாடுகள், போலீஸ் தரும் "பின்" விளைவுகள் போன்ற எதற்கும் பலர் கவலைப்படுவதாகத் தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க அவசியமான பிரயாணங்கள் தவிர இளைஞர்களின் மாப்பிள்ளை "ஊர்வலம்" சற்று கவலை அளிக்கிறது .... "மாமியார்" வீட்டில் வைத்து "மாமா" வால் கவனிக்கப்பட்டால் தான் சரியாகுமோ !

கொரோனாவால் பல இடையூறுகள், பணநஷ்டம், பணக்கஷ்டம் (குறிப்பாக தினக்கூலி வேலை பார்ப்பவர்கள், புலம்பெயர்ந்து வேலை செய்யும் காண்டிராக்ட் தொழிலாளர்கள், மூன்றாம் பாலினத்தைச் சேர்ந்தவர்கள்). அதையும் மீறி சில நன்மைகள், நடந்தவை, நடக்க இருப்பவை ..... கீழே வரிசைப்படுத்தப்பட்டவை எவர் மனதையும் புண்படுத்த அல்ல . எது நன்மை எது நன்மையல்லாதது என்று நான் சொல்ல மாட்டேன் !

மிக மிக அத்தியாவசிய தேவை தவிர யாரும் மருத்துவனை செல்வதில்லை . இதிலிருந்து தெரிவது நாம் மருத்துவனை செல்லும் பல சந்தர்ப்பங்கள் தவிர்க்கக் கூடியவையே

வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் குடும்பத்துடன் செல்லும் சங்கீதா, தலப்பாக்கட்டி போன்ற உணவகங்கள் செல்லாமல் இருந்தால் உயிர் போய் விடாது (சரவண பவன் சில பல வருடங்களாகவே க்வாரன்டைன்) .

பியூட்டி பார்லர் போகாத முகங்கள் முன்னிருந்தது போல் தான் இருக்கின்றன. அதாவது...முன்பு இருந்தது போலவே அசிங்கமாக இருக்கின்றன ! ( சட்டியில் இருந்தால் தானே அகப்பையில் வரும்) .

என் பதிவை பெண்களும் படிக்கலாமென்பதால் அவர்களை மகிழ்ச்சிப் படுத்த இதையும் சொல்லிவிடுகிறேன் ..... ஆண்கள் சவரம், ஹேர்கட் செய்யாததினால் குடும்ப வருமானம் அதிகரிக்கும், முக்கியமாக பஸ் ஸ்டாப்பில் நிற்கும்போது...... .
ஒரு கருப்புக் கண்ணாடி போட்டுக் கொண்டால் கலெக்ஷன் இன்னும் அமோகப்படும் !

நம்முள் இருக்கும் இறைவனை நாடாமல், கோவிலில் இருக்கும் இறைவனை மட்டுமே துதிப்பதா என்பது சிந்திக்க வேண்டிய விஷயம். கடந்த 21 நாட்களாக கோவில் பக்கம் தலை வைத்துக் கூட படுக்கவில்லை என்று இறைவன் நம்மை சபிக்கவோ தண்டிக்கவோ இல்லை. கோவிலுக்குப் போவதால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பு மாறி "இறைவனை நினை.... அதற்கும் மேலே அவன் மெச்சும் படி நல்லவனாக இரு, நல்ல செயல்களைச் செய்" என்ற சிந்தனை உயர்வு ! (கடந்த 21 நாட்களில் குட் ஃப்ரைடே, ஈஸ்ட்டர் சண்டே, உகாதி, குடி படுவா போன்ற நிகழ்வுகள் அவரவர்கள் வீட்டிலிருந்தோ, இண்டர்நெட் மூலமாகவே இனிது நடந்தேறியிருக்கின்றன )

என் மச்சான் முக நூலில் கூறியது போல, கொரோனாவால் மாசு குறைந்திருப்பதால் சென்னையிலிருந்து மகாபலிபுரம், ஜலந்தர் தெரிவது மட்டுமல்ல, அவரவர் பக்கத்து வீட்டுக்காரர் கூடத் தெளிவாகத் தெரிகிறார் ! (இது வரை காணாத பக்கத்து வீட்டுக்காரர்)

திருமணங்கள் வருங்காலத்தில் (குறைந்தது அடுத்த ஒரு வருடத்திற்கு) மிகவும் சிறு அளவிலேயே நடத்தப்படும்.

கைகுலுக்குவது, கட்டித்தழுவுவது போன்ற மேலை நாட்டுப் பழக்கங்கள் தவிர்க்கப்படாவிட்டாலும் குறைக்கப்படும்.

அசைவ உணவு குறையலாம் . அய்யமாருங்கல்லாம் மீன் சாப்பிடறதுனால மீன், கறி விலை ஏறிடுச்சு என்ற வசனம் குறையலாம்.

காய்கறி விலை ஏ(எகி)றும்.

வீட்டுக்கு வருபவர்கள் முக சலிப்புடன் வரவேற்கப்படலாம்.

முதலில் சோப் போட்டு கை கழுவினால்தான் குடிக்க தண்ணீர் என்பது எழுதப்படாத விதியாகலாம்

இரு குழந்தைகளுக்கு இடையே போதிய இடைவெளி என்ற பழமொழி போய் இரு மனிதர்களுக்கு இடையில் போதிய இடைவெளி தேவை என்ற வாசகம் பஸ், கழிப்பிடம் போன்ற இடங்களில் எழுதப்படும்

மாதாந்திர மளிகை கடை லிஸ்டில் புது மாப்பிள்ளையாக சானிடைசர், டெட்டோல் இடம்பிடடிக்கும்

கை கழுவ சானிடைசர் என்றது போய் "காய்" கழுவ சானிடைசர் வாங்கலாமா என மனம் அலைபாயும்

அலுவலக வீடியோ கான்பரன்ஸ் முடிந்த பின்புகூட கைகழுவதோன்றும் .

சானிடைசர் நிஜமாகவே சானிடைசர் தானா எனவும் சந்தேகம் வரும்

பக்கத்தில் இருப்பவர் இருமினால், இந்த ஆள் இருமல் வந்தால் மனதுக்குள் இருமக்கூடாதா எதுக்கு சத்தமா இருமுகிறார் என்று நம் மனம் சலித்துக் கொள்ளும்

"அழும் பிள்ளைக்குத் தான் பால் கிடைக்கும்" என்ற பழமொழி போய் "இருமும் ஆளுக்குத்தான் லீவு கிடைக்கும்" என்ற புதுமொழி அரங்கேறும்

கார், பைக்கில் யாருக்கும் லிஃப்ட் கொடுக்க முன் தயங்குவோம்

ஓரிரு திருமணங்கள், முன்பு நிச்சயிக்கப்பட்ட தேதியில் குறைந்த அளவு உறவினர்கள் முன்னிலையில் நடந்தேறி இருக்கிறது. மகிழ்ச்சி. ஆரவாரம், ஆடம்பரம் என்ற பெயரில் நடக்கும் பல அனாவசிய செலவுகள் தவிர்க்கப் பட்டிருக்கின்றன ! வட்டம், மாவட்டம் போன்றவர்களின் பிறந்த நாள் விழாக்கள் இல்லாததால் காது ஜவ்வு சற்று ஓய்வெடுக்கிறது.

அரசியல்வாதிகளின் பிறந்த நாளை ஒட்டி ஒரு சந்தேகம்......

தமிழ், தமில் , தமிள் என்று தமிழை பாடாய்ப் படுத்திக் கொண்டிருக்கும் அரசியல்வாதிகளுள் எவரேனும் ஒருவர், ஒருவர், ஒரே ஒருவர், தனது பிறந்த நாளை (ஆங்கில கணக்குப்படி ஆகஸ்ட் 12 என்று இல்லாமல்) தமிழ் காலண்டர்படி ....சித்திரை 3, ஆடி 32அன்று கொண்டாடினார் என்று சரித்திரம், பூகோளம் இருந்தால் எனக்குத் தெரிவிக்கவும் !

கடந்த 21 நாட்கள் (வரக்கூடிய 15 + நாட்கள்) வீட்டிலேயே அடைபட்டுக் கிடந்ததால் சட்டை பித்தான் எப்படிப் போடுவது, சாக்ஸ் எப்படி மாட்டுவது போன்ற ஆயக்கலைகள் மறந்து போயிருக்கின்றன. யூடியூப் உதவியின்றி இவையெல்லாம் நம்மால் செய்யமுடியுமா என்று தெரிய வில்லை எப்படியிருந்தாலும் அலுவலகத்திற்கான வழி கூகுள் மேப் உதவியுடன்தான்!

கொரோனா விடுமுறை-1, விடுமுறை-2 முடிந்து அலுவலகம் செல்வதற்கு முன் சக ஊழியர்களின் புகைப்படத்தை முகநூலில் ஒரு முறை பார்த்துவிட்டுப் போகவேண்டும். ஜாடை மாறியிருக்கக் கூடும் !

இந்திய சரித்திரத்தில் நாடு முழுக்க அடைக்கப்பட்டது இதுவே முதல் முறை. இன்று வரை 21 நாட்கள்..... வரும் நாட்களில் இன்னும் எத்தனை நாட்களுக்கோ என்று தெரியாது........ இந்தத் தகவலில் இருந்து இந்நோயின் வில்லத்தனம், வீரியம் புரிந்திருக்கும். அடக்கி, அடங்கி வாசிப்பது நமக்கும் நல்லது, நம் நாட்டிற்கும் நல்லது

கொரோனா போன்ற பல தடைகளைத் தாண்டியே இவ்வுலகம் வந்துள்ளது.... பரிணமித்துள்ளது, இன்னும் இவ்வுலகம் வளரும் என்ற நம்பிக்கையில் நம்மை நாமே காத்துக் கொள்வோம் . மருத்துவ வல்லுநர்கள், அரசாங்கம் சொல்படி நடப்போம். (தேவைப்பட்டால் மட்டும்) வெளியில் செல்லும்போது கட்டாயம் மாஸ்க் அணிந்து செல்வோம் !

நாளை தமிழ்ப் புத்தாண்டு. அனைவருக்கும் இந்த சார்வரி ஆண்டு நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வத்தையும் தரட்டும் என என்னுள், உங்களுள் "24 X 7 X 365" கோவில் கொண்டுள்ள இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் !

Sanskrit and Mathematics

 Sanskrit and Mathematics 


Reposting the greatness of this sloka  and its link to Mathematics. As the earlier post had a picture of a God prominently displayed, it is likely that some people (like me) may have missed.


ॐ पूर्णमदः पूर्णमिदं पूर्णात्पूर्णमुदच्यते । पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ॥

 ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே ஓம். 


அது முழுமை (பூர்ணம்). இதுவும் முழுமை. முழுமையிருந்து முழுமை தோன்றியுள்ளது. முழுமை யிலிருந்து முழுமையை எடுத்தும் முழுமையே எஞ்சி நிற்கிறது.


 An interesting explanation to this Sloka was given the HoD of Mathematics (PG) Department Prof Ramakrishnan. We, the final year students of Mathematics& Chemistry at Madura College had assembled for our Farewell function. One of the students Late Sankara Subramanian rose up and recited the above sloka. Once he was done, Prof Ramakrishnan asked the student whether he knows the meaning. I am not sure about the response from the student.

Prof Ramakrishnan said this sloka is nothing but an epitome of the Infinite Numbers and series. He elaborated: 

• What is the sum of all natural numbers: 1+2+3….+…. ? 

o Answer: Infinity ∞ 

• What is the sum of the series of odd numbers 1+3+5+7…..+….? 

o Answer : Infinity ∞ 

• From the series of natural numbers take out all odd numbers What are you left with? 

o We are left with 2+4+6+8…….. 

o What is the sum of this series? 

o Answer: Infinity ∞ That means from Infinity (POORNA) you take out Infinity (POORNA) you are left with Infinity ( POORNA) Does this not communicate the meaning of the Sloka, he asked? Needless to say, we were dumbstruck

For all those who believe Mathematics is an European import and it is Britishers who educated India.

Even while the western world was punishing people who said earth is NOT flat, Indian temples had 2 millennia old sculptures of Varaha Avathara with the spherical shaped globe carried by the tusks !

Chanakya of the Millennium

 P.V. Narasimha Rao....




Clearly, the greatest turning point in the history of India in the 20th Century. The Man who put India into a different orbit, ably assisted by Manmohan Singh and a few other colleagues of his.


Sadly, his own spineless colleagues bent backwards to deny him the honour he deserved. When his body was brought to the Congress headquarters for the public to pay the last respects, apparently, not only permission was denied, but the doors of the Congress HQ were locked !


A person who preferred to speak less, one of his replies to a news reporter on why no action was taken on the Babri Masjid subject, was epic. His mercurial reply was "Not taking an action, is an action by itself" !


https://timesofindia.indiatimes.com/india/pm-hails-scholar-and-freedom-fighter-p-v-narasimha-rao/articleshow/76680584.cms

உள்ளம் பெருங்கோயில்

 


உள்ளம் பெருங்கோயில், ஊன் உடம்பு ஆலயம்

வள்ளல் பிரானார்க்கு வாய் கோபுர வாசல்
தெள்ளத் தெளிந்தார்க்குச் சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலன் ஐந்தும் காளா மணிவிளக்கு'

இறைவன் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கிறான். கோவிலுக்குச் சென்று தான் வழிபட வேண்டுமென்பது இல்லை.

இன்றைய சூழலில் வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள், ரயில் போக்குவரத்து போன்ற சமாசாரங்கள் "ஜனத்தொகை குறைய வழி" தவிர வேறொன்றுமில்லை.

நம்முள் இருக்கும் இறைவனை நாம் இருக்கும் இடத்திலேயே வழிபடுவோம் !

நாம் "வீட்டிலேயே இருந்து" கொரோனா கட்டுப்படுத்துவதில் அரசுக்கும், மருத்துவர்களுக்கும் உதவுவது தான் நாம் இவ்வுலகிற்கும், ஆண்டவனுக்குச் செய்யும் மிகப் பெரிய சேவை !

"இருக்கும் இடத்தைவிட்டு இல்லாத இடம்தேடி எங்கெங்கோ ஏன் அலையவேண்டும்"

'அக்மார்க் ராஜதந்திரி பி.வி. நரசிம்ஹராவ்'.

 




இட்லிக்கடை ஆயாவிடம் எட்டு இட்லி சாப்பிட்டுவிட்டு இரண்டு தான் சாப்பிட்டேன் என்று சொல்பவர்களுக்கெல்லாம் 'ராஜதந்திரி' பட்டம் கொடுக்கும் இந்தக் காலத்தில் 'அக்மார்க் ராஜதந்திரி பி.வி. நரசிம்ஹராவ்'.


கவிழ்த்துப் போட்ட அண்டா அளவு தொப்பையுடன் கமிஷனுக்காக லைசன்ஸ் விநியோகம் செய்த அமைச்சர்கள் கையிலிருந்து லைசன்ஸ் ராஜைப் பிடுங்கி சைலன்ஸ் ராஜ் செய்தவர். நாட்டை தாராளமயமாக்கல் கொள்கைக்கு எடுத்துச் சென்றவர்! பொருளாதாரத்தில் பாரதத்தை உலகம் நிமிர்ந்து பார்க்கச் செய்தவர் என்பதில் 90% இந்தியர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது.

நித்தியகண்டம் பூர்ண ஆயுசாக ஒரு அரசை முழு ஐந்து ஆண்டு நடத்தியவர். குறைகள் சில இருந்திருந்தாலும், நிறைகள் அவற்றை மறக்கடிக்கச் செய்யும்.

அவரது நூற்றாண்டு துவங்குகிறது. நன்றியுடன் அவரை நினைவு கொள்வோம் !


குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...