Wednesday, March 24, 2021

"ராமேஸ்வரம் போனாலும் சனைச்வரம் விடாது"




ஆயிரக்கணக்கான மைல்களை கடந்து அர்த்த ராத்திரி மும்பை சேர்ந்து விடி காலை விடுதி சேர்ந்து தொலைக்காட்சியைத்தட்டி விட்டால் புத்தம் புதிய ஹிந்தி திரைப்படம் . நேரம் மறந்து பார்க்க தொடங்கியதும் நன்கு தெரிந்த ஒரு விளம்பர நடிகை ! நடிகைகள் எல்லா மொழியிலும் நடிப்பது சகஜம் என்று மனதை சமாதனம் செய்த மறு நிமிடம் இன்னொரு தெரிந்த முகம்.......பிரஷாந்த்.... ஏதோ தீய்ந்த வாடை அடிப்பது போலிருந்தது ... மறு நிமிடம் தெளிவானது . பார்த்துக்கொண்டிருக்கும் திரைப்படம் ....." உளியின் ஓசை", ..... 

இல்லை...இல்லை ...."பொன்னர் சங்கர்". 

ஹிந்தியில் ...... முருகா ....இதைத்தான் "ராமேஸ்வரம் போனாலும் சனைச்வரம் விடாது" என்று சொல்வார்களோ! என்னே ஒரு தீர்க்க தரிசிகள் நமது முன்னோர்கள் !

No comments:

சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா

  முருகேசன் : மாப்பிள்ளை... பல பேரு பல விதமா சொல்ராங்ய ... இந்த வருஷம்  சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா ?....நம்பலாமா நம்பக்கூடாதா ? அதுக்கு ஏ...