Wednesday, March 24, 2021

'அக்மார்க் ராஜதந்திரி பி.வி. நரசிம்ஹராவ்'.

 




இட்லிக்கடை ஆயாவிடம் எட்டு இட்லி சாப்பிட்டுவிட்டு இரண்டு தான் சாப்பிட்டேன் என்று சொல்பவர்களுக்கெல்லாம் 'ராஜதந்திரி' பட்டம் கொடுக்கும் இந்தக் காலத்தில் 'அக்மார்க் ராஜதந்திரி பி.வி. நரசிம்ஹராவ்'.


கவிழ்த்துப் போட்ட அண்டா அளவு தொப்பையுடன் கமிஷனுக்காக லைசன்ஸ் விநியோகம் செய்த அமைச்சர்கள் கையிலிருந்து லைசன்ஸ் ராஜைப் பிடுங்கி சைலன்ஸ் ராஜ் செய்தவர். நாட்டை தாராளமயமாக்கல் கொள்கைக்கு எடுத்துச் சென்றவர்! பொருளாதாரத்தில் பாரதத்தை உலகம் நிமிர்ந்து பார்க்கச் செய்தவர் என்பதில் 90% இந்தியர்களுக்கு மாற்றுக் கருத்து இருக்காது.

நித்தியகண்டம் பூர்ண ஆயுசாக ஒரு அரசை முழு ஐந்து ஆண்டு நடத்தியவர். குறைகள் சில இருந்திருந்தாலும், நிறைகள் அவற்றை மறக்கடிக்கச் செய்யும்.

அவரது நூற்றாண்டு துவங்குகிறது. நன்றியுடன் அவரை நினைவு கொள்வோம் !


No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...