Saturday, April 5, 2025

சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா


 


முருகேசன்: மாப்பிள்ளை... பல பேரு பல விதமா சொல்ராங்ய ... இந்த வருஷம்  சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா ?....நம்பலாமா நம்பக்கூடாதா ?

அதுக்கு ஏதாச்சும் அறிகுறி இருக்கா ?




சரவணன்:  முருகேசாஆ ஆ .... சனிப்பெயர்ச்சிய ஒரு சில அறிகுறியை வச்சு கண்டுபிடிக்கலாம் .

முதல்ல டீவியை தட்டி விட்டு, எந்த சேனலை வச்சாலும் நெத்தி நிறைய குங்குமம், மஞ்சள், கரும்போட்டு, செம்போட்டு, ருத்திராட்சம், கிரிஸ்டல், தாமரை மணி மாலையின்னு கழுத்த நிரப்பி ஒருத்தன் பேசிகிட்டு இருப்பான் 




 முருகேசன்: இருக்கான்பா... 

சரவணன்:  நான் உன்னைக் கேட்டேனா 

 முருகேசன்: இல்லை 

சரவணன்: கோட்டு  சூட்டோட ஒருத்தன், நாப்பது அம்பது துணை நடிகர்களை கூட்டி  வச்சுக்கிட்டு "நீயா நாயா " ங்கிற பேருல ஒரு ஷோவப்  போட்டு, குறுக்கையும் நெடுக்கையும் நடந்துகிட்டு இருப்பான் ...



முருகேசன்: இருக்கான்பா... 

சரவணன்:  நான்  கேட்டேனா 

 முருகேசன்: இல்லை ...

சரவணன்:மூடு வாய !

சரவணன்:: அஸ்வினி, பரணி , கார்த்திகைல ஆரம்பிச்சு ரேவதி வரைக்கும் 27 நட்சத்திரங்களுக்கும் கேடு காலம்னு சொல்லிட்டு குறைகேசநல்லூர் சாகேதராமன், அமுதம் பக்தியின் கொல்வின்னு வரிசையில நிற்பார்கள் ..


முருகேசன்: நிக்குறாங்யப்பா நிக்குறாங்ய  ... 

சரவணன்:  நான்  கேட்டேனா 

முருகேசன் இல்லை ...

சரவணன்:மூடு வாய !


சரவணன்: எல்லா சர்ச்சுலயும் ஜேசுப்பெயர்ச்சி, பரிகாச...இல்லையில்லை ... பரிகார தோத்திரம் / ஜெபம்னு கலக்குவாங்க


முருகேசன் : கலக்கிட்டாங்கப்பா ..

சரவணன்:  பக்தி அமுதம், சக்தி வடக்கன்ல தொடங்கி அம்புலிமாமா, கோகுலம் வரைக்கும் எல்லாரும் சனியை சந்திக்க சானியாவின் எளிய பரிகாரங்கள்னு இலவச இணைப்பு விடுவாங்க ...




முருகேசன்: விட்டுட்டாங்யாப்பா விட்டுட்டாங்ய  ... 

சரவணன்:  நான்  கேட்டேனா 

முருகேசன்: இல்லை ...

சரவணன்: மூடு வாய !

சரவணன்:  540 ரூபாய்ல பரிகார பூஜைன்னு நேரு வைஸ்ட் கோட்டு  போட்ட ஒரு மண்டைப்  பெருத்தவன், துரோகம் ராஜ  துரோகம்னு சொல்லிக்கிட்டு வந்து டீவி  வழியா வந்து கண்ணைக் குத்துவான் .... 



முருகேசன்:குத்திட்டாப்பா ...ஏஏ ஏ ன் 

சரவணன்: நோ கிராஸ்  கொஸ்டின்ஸ் 

முருகேசன்: சரி 

சரவணன்: நீ , வேலையே செய்றதில்லை .... இந்தக் கம்பெனியில  வேலையில்லன்னுட்டு உன் பாஸ் உனக்கு டிஸ்மிஸ்ஸல்  லெட்டரோட கிளம்புவான் 



முருகேசன்: கெளம்பிட்டாம்பா ...கெளம்பிட்டான் 


உன் நெலமையைப் பார்த்து உன் கூட வேலை பார்க்கிற பொம்பளை கெக்க புக்கன்னு சிரிப்பா !



சரவணன்: ரிப்பப்ளிக்  டிவியில "The  nation wants  to  know "ங்கிற பெயரிலே, "நீ நிஜமாக இந்த வருஷம் பெயருகிறாயா இல்லையா" என்று கேள்வி கேட்டு, பதிலே சொல்ல விடாம தானே கத்தி கூப்பாடு போட்டு,  அர்ணாப் ராமஸ்வாமி சனி பகவானையே விரட்டுவான் 




முருகேசன்: வெரட்டீட்டாம்பா வெரட்டீட்டான் ......





No comments:

சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா

  முருகேசன் : மாப்பிள்ளை... பல பேரு பல விதமா சொல்ராங்ய ... இந்த வருஷம்  சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா ?....நம்பலாமா நம்பக்கூடாதா ? அதுக்கு ஏ...