பிரிவுஉபசாரம் பிரியாவிடை
(மறதி அதிகமாகிவிடடபடியால் முழுக்கதையும் உடனடியாக நினைவுக்கு வரவில்லை. திரைக்கதையில் இதுவரை உதவி செய்த Dr மெமரி ப்ளஸ் மோகனுக்கும், 1633 என்று எண்கணிதப்படி விளித்தால் சுட்டெரிக்கும் கதிரேசனுக்கும், இந்த முதல் பதிப்பில் விட்டுப்போயிருக்கும் கிளைக்கதைகளை பின்பு நினைவு படுத்தவிருக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி)
முன்னொருகாலத்தில் (பிரும்மா ஸரஸ்வதி தம்பதியரின் உலகமாகிய ) பிரும்மபுரத்தில் வித்யாபதி என்னும் ஒரு ஊமை, செவிட்டு , கல்வியறிவு இல்லாத பக்தன் கோலமிட்டுக் கொண்டிருந்தான். காதால் கேட்கமுடியாவிட்டாலும் வாணி மிகுந்த கோபமாக இருப்பதையும் பிரும்மா (எல்லாக் கணவன்மார்கள் போல் ) முகவாய்க்கட்டையை தடவிக்கொண்டு அமைதியாக இருப்பதையும் உணரமுடிந்தது.
வாணி: என்ன ஆணவம் இருந்தால் என்னை உதாசீனப்படுத்தி விட்டு செல்வமும் வீரமும் தான் உயர்ந்தது என்று சொல்வார்கள்! உலகத்தில் சிறந்தது கல்விதான் என்று நிரூபிப்பேன். பிறப்பிலேயே குறைகளோடு பிறந்த வித்யாபதியை நான் பூலோகம் அனுப்பி கல்விதான் சிறந்ததென நிரூபிப்பேன். இதோ ,உடனேயே பேசும் திறமையைத் தந்தேன்_ (வித்யாபதி, அகர வரிசையைத் தொடங்கினான்)
வித்யாபதியின் ஆடையில் ஒரு microchip பதித்து அனுப்புகிறேன், அது அவனுக்கு ஆயக்கலைகள் 62ம் வந்து துணைநிற்கும் (வாசகர்கள் புலம்புவது கேட்கிறது. Actually, ஆயக்கலைகள் 64 தான். அவனுக்குத்தான் பேச்சு, கோலமிடுதல் என்ற இரு கலைகள் ஏற்கனவே தெரிந்தனவைதானே . பாக்கி 62 , கணக்கு சரிதானே !?!?)
கலைமகளை வணங்கி வித்யாபதி பூவுலகம் செல்லத் தயாரானான் . பூவுலக மங்கைகளின்
பாண்டியனுக்காக கால்மாறி ஆடி திருவிளையாடல் புரிந்த ஆலவாய் நகருக்கு வித்யாபதியை அனுப்பவிருப்பதால், ஐயனை போற்றும் விதமாக சரஸ்வதி தேவி வித்யாபதிக்கு *ஆடலரசு* என தமிழ்ப்பெயர் சூட்டினாள்.
கலைமகள் கொடுத்த 62 கலை microchip பிரும்மபுரத்திலே ஆணியில் இருந்த ஆடையிலேயே இருந்துவிட்டது.
வித்யாவாணி அன்னையின் ஆசியில் மதுரை வந்த "2"கலை வித்யாபதி அன்னையின் பெயர்கொண்ட வித்யாநகரில் உள்ள மதுரைக்கல்லூரியில் வேதியியல் துறையில் பணியில் அமர்ந்தார் (நம் கல்லூரிக்கு வித்யா நகர் என்ற பெயர் இருப்பது கல்லூரி ஆண்டுவிழா மலரைப் பார்த்தே தெரிந்துகொண்டேன் )
ஆடலரசு என்ற பெயர் சற்று கரடுமுரடாக இருந்ததால், தமிழ்ப் பெயர் தேடினான் ( ஆடலரசு தமிழ்ப்பெயர்தானே என்னும் நேயர்களுக்கு ஒரு சிறிய flashback
சென்னையில் ஒரு டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தேன் . "_ நேராப் போனா ஒரு பாலம் வரும், அப்புறம் இடதுபக்கம் திரும்பி அரை கி. மீ போயி அப்புறம் வலதுபக்கம் நாலாவது தெரு_ " என்று வழி காட்டினேன். Maths Prof / NCC master ராகவன் போல ஒரு முறை முறைத்த டாக்சி டிரைவர் பி லெப்ட் , ரைட்டுன்னு தமிழ்ல்ல சொல்லு சார் என்று நவீன அகத்தியனானான்!)
வித்யாபதியிடம் microchip இல்லாததால், இரண்டே இரண்டு கலைகள் மட்டுமே கையிருப்பு. வித்யாபதி நடராஜனாக தமிழ்ப்படுத்தப்பட்டு Inorganic Chemistry ஆசிரியராக கல்லூரியில் தனக்குத் தெரிந்த கோலத்தை கரும்பலகையில், கரடுமுரடான பேச்சை அள்ளித்தளித்தும் நம் தலையில் கட்டப்பட்டார்
(62 கலை மைக்ரோசிப்புடன் வேறு ஒரு வித்யாபதி சரஸ்வதி சொல்படி நடந்து இறையருட்ச்செல்வர் பட நாயகனானார் )
அப்படிப்படட கோலபதி நடராஜனால் துன்புறுத்தப்படட நாம் விதியின் கொடுமையால் அவரிடமே நம் Farewell பற்றி பேசத்தொடங்கினோம் !
படிப்பு சம்பந்தப்படாத சமாச்சாரமென்ற நாட்களில் மட்டும் தேர்தல் நேரத்து அரசியல்வாதி போல முஷ்டாக் "ப்ரஜன்ட்ஜார் " ஆகிவிடுவான் ! ஆகினான் அன்றும் !
வடகொரியாவின் Kim Jong-un போல தன்னைத் தானே farewell கமிட்டி தலைவராக தேர்ந்தெடுத்து க்கொண்டான். நாமும் வெட்ட ஆடு கிடைத்த சந்தோஷத்தில், கத்தியை சாணைபிடிக்கத் துவங்கினோம். இந்த ஆடு வேறு விதமாக ஆடும் என்று அப்போது தெரியாது !
-தொடரும்-
No comments:
Post a Comment