முந்தைய அத்தியாயத்திலிருந்து
அப்படிப்படட கோலபதி நடராஜனால் துன்புறுத்தப்படட நாம் விதியின் கொடுமையால் அவரிடமே நம் Farewell பற்றி பேசத்தொடங்கினோம் !
படிப்பு சம்பந்தப்படாத சமாச்சாரமென்ற நாட்களில் மட்டும் தேர்தல் நேரத்து அரசியல்வாதி போல முஷ்டாக் "ப்ரஜன்ட்ஜார் " ஆகிவிடுவான் ! ஆகினான் அன்றும் !
வடகொரியாவின் Kim Jong-un போல தன்னைத் தானே farewell கமிட்டி தலைவராக தேர்ந்தெடுத்து க்கொண்டான். நாமும் வெட்ட ஆடு கிடைத்த சந்தோஷத்தில், கத்தியை சாணைபிடிக்கத் துவங்கினோம். இந்த ஆடு வேறு விதமாக ஆடும் என்று அப்போது தெரியாது !
கோலபதியிடம் போன நாம் Farewell meet பற்றி பேசத்தொடங்கியதும் எதோ 33,000v கரண்டுக் கம்பியில் கை கொடுத்தவர் போல பதறியவர், " என்ன GR இடம் பேசிவிட்டீர்களா, அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே " என்றார் . GR இடம் இதை பற்றி பேசாதற்கே மிரண்டவர், யாரையும் பற்றி கவலைப்படாமல் தேதியே குறித்து'விட்ட்து தெரிந்துவிடடால்,ஜன்னியே கண்டுவிடும் (அவருக்கு) என்று அவருக்கு தற்காலிக பிரிவுபசாரம் செய்து கழன்று கொண்டோம்.
ஜோசியரிடம் ஜாதகம் காண்பித்து அவர் சொல்வது போல் கேட்பது அந்தக்காலம். நாலு ஜோசியர்களை ஆலோசித்து யார் நமக்கு பிடித்தது போல் பலன் சொல்கிறார்களோ அவரை வைத்துக்கொண்டு, மற்றவர்களை அடியாட்களை வைத்து சிஸ்ருஷை செய்வது இக்காலம் (ராஜபக்ஷவில் துவங்கி அய்யா, தாத்தா, அம்மா, அக்கா எல்லோருக்கும் பிடித்த formula இதுதானே)
அதே winning formulaவில் , கணிதவியல் அப்பாவி ஆசிரியர்களிடம் ஆரம்பித்தோம். பட்டும் படாமல் வேதியியல் ஆசிரியர்களிடமும் சொன்னோம். அவர்கள் எல்லோரும் ஒரே பல்லவியை தாளம் தப்பாமல் பாடினார்கள்......Professor கிடட சொல்லிட்டிங்களா .Professor கிடட சொல்லிட்டிங்களா
நீ விடாக்கண்டன்னா நான் கொடாக்கண்டன் என்று நாமும் அனுபல்லவி பாடினோம் .
மகாபாரத தர்மரை அஸ்வத்தாமன் என்ற யானை என்று passive பொய் சொல்ல வைத்தது போல் , Professor சீதாராமன் இடம் சொல்லிவிட்டோம் என்று Professor என்ற வார்த்தையை சத்தமாக சொல்லி பூசி மொழுகினோம் .
farewell குழு தலைவராக ஆக்கியதால் முஷ்டாக் அடிக்கடி கல்லூரி பக்கம் நடமாட ஆரம்பித்தான். அவன் அட்டெண்டன்ஸ் திடீரென உயர்ந்ததால் பலருக்கு மாரடைப்பு. ஆறாவது செமெஸ்டரில் தான் அவன் அட்டெண்டன்ஸ் அதிகம் என்பதால் நாமும் பெருமை கொள்ளலாம்.
தலா இத்தனை ரூபாய் என்று (எத்தனை??) முடிவு செய்து வசூல் செய்தொம். அதிலும் சிலர் தலைமறைவு.
அந்த சுபதினமும் வந்தது. முஷ்டாக் சொன்னதை வைத்துப் பார்த்ததில், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், PG துறைத்தலைவர்கள் முதல், மதுரை மேயர் வரை எல்லோரும் வருவார்கள் என்று நம்பினோம். கடைசியில் முதலுக்கு மோசமானது போல GR ஏ LKG அட்மிஷன் குழந்தை போல வர அடம் பிடித்தார்.
தேர்தலுக்கு வாக்காளர்களை ரிக்ஷா, சைக்கிள் , ஸ்ட்ரெச்சர் போன்ற உபகரகணங்களில் அள்ளிப் போட்டுக் கொண்டு வருவது போல ஒவ்வொருவராக சேகரித்தோம். சூர்யோதயத்துக்கு திடடமிடட farewell, சூரியன் வெறுத்து உச்சிக்கு வந்து வறுத்த போது ஒரு வழியாக தொடங்கியது.
விமானநிலையத்தில் 48வது முறையாக "last &and ; final boarding call " கூவிய பின்பு, எல்லா பயணிகளும் வந்த பிறகு air -hostess, நொந்து போய் கதவை அடித்து மூடுவது போல் , ஒரு வழியாக ZB-1 கதவை அடைத்து துவங்கினோம்.
அதிலும் Prof சீதாராமன் absent . பின்னே ........3 வருடம் நாம் அவருக்கு போக்கு காட்டினோம் . பரீட்சை நாள் தவிர என்றாவது 23 பேரை ஒன்று சேர்ந்து பார்த்திருக்கிறோமா ? இன்று அவர் முறை .
எதிர்பாராத வருகை PG Maths Prof ராமகிருஷ்ணன் . அவர் எப்போதும் ஒரு blazer (கோட்) போட்டே தரிசனம் கொடுப்பார். நாங்களெல்லாம் கேலி செய்வோம். "ஓடிப்பிடித்து" விளையாட்டில் அவரை யாரும் வெல்ல முடியாது. ஆட்டம் ஆரம்பித்ததும் கோட்டை கழற்றிவிடுவார், யாருக்கு அடையாளம் தெரி யும்.!
MC controlling department என்ற முறையில் முதல் மரியாதை, பரிவட்டம், வீரவாள், செங்கோல் எல்லாம். கிடைக்கப் போகிறது என்று இருந்த நம் தலைவர் GRக்கு tungsten filament பல்ப் கொடுத்த்தார் Ramakrishnan . எப்படி..... இப்படித்தான்
முதலில் கடவுள் வாழ்த்து... மறைந்த நண்பன் சங்கர சுப்பிரமணியம் பாடினான் (நமது groupல் முதலிலிருந்தே இருக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்திருக்கிறேன். அதிலிருந்து copy & paste )
ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம். அது முழுமை (பூர்ணம்). இதுவும் முழுமை. முழுமையிருந்து முழுமை தோன்றியுள்ளது.முழுமை யிலிருந்து முழுமையை எடுத்தும் முழுமையே எஞ்சி நிற்கிறது.
Once prayer recitation was complete , Prof Ramakrishnan asked the student whether he knows the meaning. I am not sure about the response from the student. Prof Ramakrishnan said this sloka is nothing but an epitome of the Infinite Numbers and series. He elaborated:
- What is the sum of all natural numbers: 1+2+3….+…. ?
- Answer: Infinity ∞
- What is the sum of the series of odd numbers 1+3+5+7…..+….?
- Answer : Infinity ∞
- From the series of natural numbers take out all odd numbers What are you left with?
- We are left with 2+4+6+8……..
- What is the sum of this series?
- Answer: Infinity ∞
That means from Infinity (POORNA) you take out Infinity (POORNA) you are left with Infinity ( POORNA)
Does this not communicate the meaning of the Sloka, he asked?
Needless to say, we were dumbstuck.
Prof ராமகிருஷ்ணன் இந்த விளக்கம் அளித்ததோடு கணிதத்தின், வேத தொடர்பு குறித்தும் கிடடததடட 20நிமிடம் பேசினார். அவர் ஒரு அப்பாவி, Politics க்கு அப்பாற்பட்டவர், நல்லது என்று தோன்றிய ஒரு தகவலை ஆவலுடன் பகிர்ந்து கொண்டார்.
நமது வகுப்பை (maths & chemistry என்று சொல்லவிருப்பமில்லாமல்) Chemistry & Maths என்றே சொல்ல விரும்பும் GR அவர்களை அடுத்து பேச அழைத்தோம்.
தனது கடிகாரத்தை ஒரு சம்பிரதாயமாகப் பார்த்தவர், மத்திய உணவு நேரமாகி விட்டது, இனியும் தொடர்ந்தால் சாப்பாட்டுக்கு நேரமாகிவிடும் . Let us disperse என்று நடிகர் திலகம் போல் நவரசமும் காட்டி, விடு விடுவென நடையாக காட்டினார். மற்ற வேதியியல் ஆசிரியர்கள் பற்றி கேட்கவா வேண்டும். குதித்து ஓஓஓஓடினார்கள்.
என் நினைவில், சராசரி மனிதர்களான கெமிஸ்ட்ரி சீதாராமன், திருவேங்கடம் மரியாதை நிமித்தமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.
இதற்கிடையில் கொரிக்க ஏதோ கொடுத்ததாக நினைவு. கதிரேசன் (1633) ஐஸ் க்ரீம் வாங்கி வந்திருந்தான். நாமெல்லோரும் அதை milk shake ஆகக் குடித்தோம்.
காலேஜ் மாணவர்கள் மூளை வளர விரும்பி சுவைக்கும்
அப்போதே 23ல் சிலர் missing .
சாப்பிட்டு பின் "ஷா " தியேடடரில் ஒரு ஆஸ்கார் பரிசை ஒரு மயிரிழையில் தவறவிட்ட ஒரு காதல் காவியம் பார்த்தோம் . படம் பெயர் "சாட்டை இல்லாத பம்பரம்" . படத்தை தயாரிப்பாளரின் மனைவி கூட பார்க்க மறுத்தாராம். அன்று படத்தை துணிந்து பார்த்த போது வந்த spondilytis பின்னர் இறங்கி , 1996ல் எனக்கு முதுகுத்தண்டு அறுவைசிகிக்ச்சை வரை போய்விட்டது .
அறுவைசிகிச்சை என்றால் என்ன என்று 1983லேயே காட்டிய மகான் தான் இந்த பட இயக்குனர்.
அன்று இரவு வீடு சென்ற முஷ்டாக் , "என்னை விட்டுடுங்க, இனிமே நான் காலேஜ் ஒழுங்கா போறேன், நல்லாப் படிக்கிறேன் " என்று தூக்கத்தில் கதறியதை அவன் வீட்டார்கள் என்னிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டார்கள் .
ஊரையே மேய்க்கிற தாசில்தார் அப்பா செய்ய முடியாததை ஒரு 3 மணி நேர திரைப்படம் செய்ததை நன்றியுடன் பாராட்டினர்
இதற்கு நடுவில் முஷ்டாக் ஒரு அரிய பணியை, பொறுப்பை தியாகி கதிரேசனிடம் ஒப்படைத்தான். ஒரு quarter பிராந்தி ஒரு பாக்கெட் சிகரெட் இரண்டையும் கொடுத்து, என் கண்களையே என்னிடம் ஒப்படைக்கிறேன், சினிமா முடியும் வரை பத்திரமாக வைத்திரு என்று ராமன் கணையாழியை அனுமனிடம் கொடுத்தது போல் கொடுத்தான்.
அவனுக்கு வேணும்னா அவனே வச்சுக்கட்டுமே, நீங்க ஏன் இந்த பாவமூட்டையை சுமக்குறீங்க என்று அவனுக்கு, நம் மற்றோரு நண்பரிடமிருந்து திட்டு வேறு.
கருமமே கதிரேசனார் ! இதற்கெல்லாம் கலங்கவில்லை. பின் இருக்கையில் இருப்பவர் திரை மறைக்கிறது என்று சொல்லச் சொல்ல, பரதன் ராமன் பாதரக்ஷைகளை ஆராதிப்பது போல் சிரமேற்கொண்டான்.
எங்கேயோ உட்க்கார்ந்திருந்த நான் இதற்காகவே பக்கத்து இருக்கை தேடியது, censor செய்ய வேண்டிய காட்சி.
(இதற்கு நடுவில்,, கதிரேசன் பாட்டிலில் பாதியை இருட்டில் காலி செய்து தண்ணீரை நிரப்பி விட்டான் என்று ஒரு விஷமி பரப்பிய வதந்தியை நம்பாதீர்கள். நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன். வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டேன் ! )
சினிமா முடிந்து கழுத்து அறுபட்டு ரத்தகாயமான நண்பர்களுக்கு, முதலுதவி செய்து வீடு திரும்ப எத்தனித்தோம்.
ஆனால் அதற்க்கு முன் ஒரு முக்கிய கடமை இருக்கிறதே ! அது இல்லாமல் பிரிவுபசார விழா நிறைவுறாதே !
அனுமன் காத்த கணையாளியும் , பரதன் போற்றிய பாதரக்ஷைகளும் !
எல்லாம் பார்த்துக்கோங்க ! நானும் ரௌடிதான் ! நானும் ரௌடிதான் என்று Bunsen பர்னர் ஏற்றத்தெரியாதவர்கள் எல்லாம் அம்மி பறக்கும் காற்றில் சிகரெட் பற்றவைத்தோம் .
ஒரு quarter (175ml ) பிராந்தி வாய் கொப்பளிக்கக் கூட போதாதது என்று இன்று சொல்லும் தமிழ்குடிமகன்கள், கிடடததடட ஒன்றரை டஜன் பேர் சேர்ந்து, ஒரு 175 ml பாட்டிலை பகிர்ந்துகொண்டோம், ரோட்டில் நடந்து கொண்டே.
பாட்டில் மூடியில் பெருமாள் கோவில் தீர்த்தம் போல் பிராந்தி குடித்ததை நினைத்து இன்றும் சோமசுந்தரம் இடிச்சிரிப்பு சிரிக்கிறான். அவன் பேரிலே "சோம " வைத்துக் கொண்டு நல்லவன் வேடம் போடுகிறான்
திருவிளையாடல் மட்டுமே கண்ட நம்முள் சிலர் இந்த தெருவிளையாடலை தாங்க முடியாமல், நடுவில் PRC பஸ் வருவதையும் கண்டு பயப்படாமல், குதித்து எதிர் platform தாவினார்கள். என் நினைவில் pole வால்ட் தாண்டியவர்களில் ஒருவர் மோகன், மற்றோருவர் மு.க . சுப்ரமணியன்.

துர்வாவாசத்தை க் கண்டு துர்வாசரான சிலர் "தூர "வாசர்கள் ஆனார்கள்.
நான் தாவி ஓடவில்லை என்பதிலிருந்தே நானும் ஒரு மூடி பிராந்தி குடித்த ரௌடிதான் என்பது புரிந்திருக்கும். SMSம் ஒரு மூடி பார்ட்டிதான் . மற்ற ஒரு மூடி பார்ட்டிகள் மரியாதையாக ஒத்துக்கொள்ளவும்.
அந்த தாவி ஓடியவர்களை மட்டுமல்ல மற்ற பலரையும் பல வருடங்களாக பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை
ஆவலுடன் தொடங்கிய பிரிவுபசார விழா சப்பென முடிந்தது.

இல்லை எதிர்பார்த்த படி நடந்திருந்தால் இந்த வித்தியாசமான் அனுபவம் கிடைத்திருக்குமா ?
எல்லாம் இன்பமயம் !
நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு, உரிமையிடன் சிலர் பெயரை இழுத்திருக்கிறேன். எல்லை மீறியிருந்தால் மன்னிக்கவும். யார் யாரிடம் உரிமை மீறவில்லையோ அவர்கள் உரிமை மீறவிருக்கும் நாட்களுக்கு காத்திருக்கவும் .
மலரும் நினைவுகளை நினைவு கூர்வதில் உதவி செய்த , memory பிளஸ் மோகன் , கதிரேசன் மற்றும் சினிமா தியேட்டர் பெயரை (மட்டும்) நினைவு வைத்திருக்கும் சுதாகருக்கும் நன்றி

No comments:
Post a Comment