Monday, September 19, 2016

மலரும் நினைவுகள் 2

Remembering the first chemistry assignment submitted to Chemistry Sitaraman.

When he was returning the papers, he specially picked up someone for a compliment.

Who is 1633? Kathiresan proudly stood up.

"You have referred some brilliant books, where did you get them. Our MC library does not allow access to  such books"

1633 said " science study center, old university building"

He said that is a great place and each student must use that infrastructure.

Until then i had not heard about it.

Next weekend i was there for sight seeing.  Impressive. But never again , but for some of the Jaycee committee meetings in their lawn

Monday, September 12, 2016

மலரும் நினைவுகள் கெமிஸ்ட்ரி சீதாராமன்

முதல் செமஸ்டர். அரை ட்ராயர் பையனில் இருந்து திடீரென்று முழு பாண்ட் போட்டதனால், ஏதோ எல்லாம் தெரிந்துவிட்டது போன்ற ஒரு எண்ணம்.(+2 வில் பேண்ட்தான் என்பது வேறு சமாசாரம்).

கெமிஸ்ட்ரி சீதாராமன் வகுப்பு.  அட்மின் ப்ளாக் முதல் மாடி  கோடி வகுப்பில் பாடம். ஏதொ பாடம் பற்றிபேசிக் கொண்டிருக்க்கும்போது சீதாராமன் முதல் வரிசையில் இருந்த ஒரு மாணவனின் எவர்ஸில்வர் டிபன் பாக்ஸை தொட அதன் சூடு அவரை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.

"Metals are a good conductor of electricity" என்றார்.

என் நாக்கில் அன்று(ம்) சனி.

"Sir, stainless steel is not a metal but an alloy".

என் மீது கடுப்ப்பானவராக,
" can you define how heat flows throw a body" என்று மடக்கினார்.

பட்ட பகலிலேயே ஏதோஅருந்ததி முதல் பல கோடி நட்சத்திரங்கள் ஆகாயத்தில் தெரிவதுபோல,  விண்ணை நோக்கினேன்.

1632 (தானே) ஜெய்சங்கர் எழுந்து " due to flow of electrons " என்றான்.

என்னை ஒரு ஏளனப்பார்வை பார்த்து சீதாராமன் பாடத்தைத் தொடர்ந்தார்.

மோதலில் தொடங்கி காதலில் முடிந்தது.

ஏதோ ஒரு காலகட்டத்தில் Sunday Indian expressல் " Schrödinger wave mechanics and its vedic connections" என்று ஒரு article வந்ததை காண்பித்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டேன்.

அவரும் என்னைப்போல் சுப்பிரமணிய புர சண்டியர் என்பதால் அடிக்கடி பார்ப்போம். கூழைக்கும்பிடு கட்டாயம் உண்டு.

என் வீட்டு மாடியில், உட்கார்ந்து மாலையில் குமுதம் முதலிய தமிழ்க்காவியங்களை படிப்பது வழக்கம். அவர் மாலை அவர் வீட்டு மொட்டைமாடியில் உலா வரும்போது, நான் படிப்பதைப் பார்த்து, அடுத்த நாள் (என்னை நல்லவன்ன்ன்ன்ன்ன்னு நம்ம்ம்பி ஏமாந்து பாராட்டினார்.

பாவம். எல்லா சீதாராமன்களும் அப்பாவிகள்தானோ.

Sunday, September 11, 2016

பிரிவுபசாரம் பிரியாவிடை - 2


முந்தைய அத்தியாயத்திலிருந்து

அப்படிப்படட கோலபதி நடராஜனால் துன்புறுத்தப்படட நாம் விதியின் கொடுமையால் அவரிடமே நம் Farewell பற்றி பேசத்தொடங்கினோம் !

படிப்பு சம்பந்தப்படாத சமாச்சாரமென்ற நாட்களில் மட்டும் தேர்தல் நேரத்து அரசியல்வாதி போல முஷ்டாக் "ப்ரஜன்ட்ஜார் " ஆகிவிடுவான் ! ஆகினான்  அன்றும் !

வடகொரியாவின் Kim Jong-un போல தன்னைத் தானே farewell கமிட்டி தலைவராக தேர்ந்தெடுத்து க்கொண்டான்.   நாமும்  வெட்ட ஆடு கிடைத்த சந்தோஷத்தில், கத்தியை சாணைபிடிக்கத் துவங்கினோம். இந்த ஆடு வேறு விதமாக ஆடும் என்று அப்போது தெரியாது !


கோலபதியிடம் போன நாம் Farewell meet பற்றி பேசத்தொடங்கியதும் எதோ 33,000v கரண்டுக் கம்பியில் கை கொடுத்தவர் போல  பதறியவர், " என்ன GR இடம் பேசிவிட்டீர்களா, அவருக்கு இதெல்லாம் பிடிக்காதே " என்றார் .  GR இடம் இதை பற்றி  பேசாதற்கே மிரண்டவர், யாரையும் பற்றி கவலைப்படாமல் தேதியே  குறித்து'விட்ட்து தெரிந்துவிடடால்,ஜன்னியே  கண்டுவிடும் (அவருக்கு) என்று  அவருக்கு தற்காலிக பிரிவுபசாரம் செய்து கழன்று  கொண்டோம்.

ஜோசியரிடம் ஜாதகம் காண்பித்து அவர்  சொல்வது போல் கேட்பது அந்தக்காலம். நாலு ஜோசியர்களை ஆலோசித்து யார் நமக்கு பிடித்தது போல் பலன் சொல்கிறார்களோ அவரை வைத்துக்கொண்டு, மற்றவர்களை அடியாட்களை வைத்து சிஸ்ருஷை செய்வது இக்காலம் (ராஜபக்ஷவில் துவங்கி அய்யா, தாத்தா, அம்மா, அக்கா எல்லோருக்கும் பிடித்த formula  இதுதானே)

அதே winning formulaவில் , கணிதவியல் அப்பாவி ஆசிரியர்களிடம் ஆரம்பித்தோம். பட்டும் படாமல் வேதியியல் ஆசிரியர்களிடமும் சொன்னோம். அவர்கள் எல்லோரும்  ஒரே பல்லவியை தாளம் தப்பாமல் பாடினார்கள்......Professor கிடட சொல்லிட்டிங்களா .Professor கிடட சொல்லிட்டிங்களா 

நீ விடாக்கண்டன்னா நான் கொடாக்கண்டன் என்று நாமும்  அனுபல்லவி பாடினோம் .

மகாபாரத தர்மரை அஸ்வத்தாமன் என்ற யானை என்று passive பொய் சொல்ல வைத்தது போல்  , Professor சீதாராமன் இடம் சொல்லிவிட்டோம் என்று Professor என்ற வார்த்தையை சத்தமாக சொல்லி  பூசி மொழுகினோம் .

farewell குழு தலைவராக ஆக்கியதால் முஷ்டாக்  அடிக்கடி கல்லூரி பக்கம் நடமாட ஆரம்பித்தான். அவன் அட்டெண்டன்ஸ் திடீரென உயர்ந்ததால் பலருக்கு மாரடைப்பு.  ஆறாவது செமெஸ்டரில் தான் அவன் அட்டெண்டன்ஸ் அதிகம் என்பதால் நாமும்  பெருமை கொள்ளலாம்.

தலா இத்தனை ரூபாய் என்று (எத்தனை??) முடிவு செய்து வசூல் செய்தொம். அதிலும் சிலர் தலைமறைவு.

அந்த சுபதினமும் வந்தது. முஷ்டாக் சொன்னதை வைத்துப் பார்த்ததில், கல்லூரி முதல்வர், துறைத்தலைவர்கள், PG துறைத்தலைவர்கள் முதல், மதுரை மேயர் வரை எல்லோரும் வருவார்கள் என்று நம்பினோம். கடைசியில் முதலுக்கு மோசமானது போல GR ஏ LKG அட்மிஷன் குழந்தை போல வர அடம் பிடித்தார்.

தேர்தலுக்கு  வாக்காளர்களை ரிக்ஷா, சைக்கிள் , ஸ்ட்ரெச்சர் போன்ற உபகரகணங்களில்  அள்ளிப் போட்டுக் கொண்டு வருவது போல ஒவ்வொருவராக சேகரித்தோம்.  சூர்யோதயத்துக்கு திடடமிடட farewell,  சூரியன் வெறுத்து உச்சிக்கு வந்து வறுத்த போது ஒரு வழியாக தொடங்கியது.

விமானநிலையத்தில்  48வது முறையாக "last &and ; final boarding call " கூவிய பின்பு,      எல்லா பயணிகளும் வந்த பிறகு air -hostess, நொந்து போய் கதவை அடித்து மூடுவது போல் , ஒரு வழியாக ZB-1 கதவை அடைத்து துவங்கினோம்.

அதிலும் Prof சீதாராமன் absent . பின்னே ........3 வருடம் நாம் அவருக்கு போக்கு காட்டினோம் . பரீட்சை நாள் தவிர என்றாவது 23 பேரை ஒன்று சேர்ந்து பார்த்திருக்கிறோமா ? இன்று அவர்  முறை .

எதிர்பாராத வருகை PG Maths Prof  ராமகிருஷ்ணன் . அவர் எப்போதும் ஒரு blazer (கோட்) போட்டே தரிசனம் கொடுப்பார். நாங்களெல்லாம் கேலி செய்வோம்.  "ஓடிப்பிடித்து" விளையாட்டில் அவரை யாரும் வெல்ல முடியாது. ஆட்டம் ஆரம்பித்ததும் கோட்டை கழற்றிவிடுவார், யாருக்கு அடையாளம்  தெரி யும்.! 

MC  controlling  department  என்ற முறையில் முதல் மரியாதை, பரிவட்டம்,  வீரவாள்,  செங்கோல் எல்லாம்.   கிடைக்கப் போகிறது என்று இருந்த நம் தலைவர் GRக்கு tungsten filament பல்ப் கொடுத்த்தார் Ramakrishnan . எப்படி..... இப்படித்தான் 

முதலில் கடவுள் வாழ்த்து...  மறைந்த நண்பன் சங்கர சுப்பிரமணியம் பாடினான் (நமது groupல் முதலிலிருந்தே இருக்கும் நண்பர்களுக்கு பகிர்ந்திருக்கிறேன். அதிலிருந்து copy & paste )


ஓம் பூர்ணமதபூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம்அது முழுமை (பூர்ணம்). இதுவும் முழுமைமுழுமையிருந்து முழுமை தோன்றியுள்ளது.முழுமை யிலிருந்து முழுமையை எடுத்தும் முழுமையே எஞ்சி நிற்கிறது.
 Once prayer recitation  was complete , Prof Ramakrishnan asked the student whether he knows the meaning. I am not sure about the response from the student. Prof Ramakrishnan said this sloka is nothing but an epitome of the Infinite Numbers and series. He elaborated:

  •           What is the sum of all natural numbers: 1+2+3….+…. ?

    •                      Answer: Infinity 

  •           What is the sum of the series of odd numbers 1+3+5+7…..+….?

    •                      Answer : Infinity 

  •          From the series of natural numbers take out all odd numbers What are you left with? 

    •                      We are left with 2+4+6+8……..

  •        What is the sum of this series?

    •                     Answer: Infinity 

That means from Infinity (POORNA) you take out Infinity (POORNA) you are left with Infinity ( POORNA)

Does this not communicate the meaning of the Sloka, he asked?

Needless to say, we were dumbstuck.

Prof ராமகிருஷ்ணன் இந்த விளக்கம் அளித்ததோடு கணிதத்தின், வேத தொடர்பு குறித்தும் கிடடததடட 20நிமிடம் பேசினார். அவர் ஒரு அப்பாவி, Politics க்கு அப்பாற்பட்டவர், நல்லது என்று தோன்றிய ஒரு தகவலை ஆவலுடன் பகிர்ந்து கொண்டார்.

நமது வகுப்பை (maths & chemistry  என்று சொல்லவிருப்பமில்லாமல்) Chemistry & Maths  என்றே சொல்ல விரும்பும் GR அவர்களை அடுத்து பேச அழைத்தோம்.

தனது கடிகாரத்தை ஒரு சம்பிரதாயமாகப் பார்த்தவர், மத்திய உணவு நேரமாகி விட்டது, இனியும் தொடர்ந்தால் சாப்பாட்டுக்கு நேரமாகிவிடும் . Let us disperse  என்று நடிகர் திலகம் போல் நவரசமும் காட்டி, விடு விடுவென நடையாக காட்டினார். மற்ற வேதியியல் ஆசிரியர்கள் பற்றி கேட்கவா வேண்டும். குதித்து ஓஓஓஓடினார்கள். 

என் நினைவில்,  சராசரி மனிதர்களான கெமிஸ்ட்ரி சீதாராமன், திருவேங்கடம் மரியாதை நிமித்தமாக சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தார்கள்.

இதற்கிடையில் கொரிக்க ஏதோ  கொடுத்ததாக நினைவு. கதிரேசன் (1633) ஐஸ் க்ரீம் வாங்கி வந்திருந்தான். நாமெல்லோரும் அதை milk shake ஆகக் குடித்தோம்.

காலேஜ்  மாணவர்கள் மூளை வளர விரும்பி சுவைக்கும்  மது மதிய உணவு காலேஜ் ஹவுஸ் உணவு ..... டிங் டிடிங்  என்ற விளம்பரத்திற்கேற்ப காலேஜ் ஹவுசில்   lunch . 

அப்போதே  23ல்  சிலர்  missing .

சாப்பிட்டு பின் "ஷா " தியேடடரில் ஒரு ஆஸ்கார் பரிசை ஒரு மயிரிழையில் தவறவிட்ட ஒரு காதல் காவியம்  பார்த்தோம் . படம் பெயர் "சாட்டை இல்லாத பம்பரம்" . படத்தை தயாரிப்பாளரின் மனைவி கூட பார்க்க மறுத்தாராம். அன்று படத்தை துணிந்து பார்த்த போது வந்த spondilytis  பின்னர்  இறங்கி , 1996ல் எனக்கு முதுகுத்தண்டு அறுவைசிகிக்ச்சை வரை போய்விட்டது . 

அறுவைசிகிச்சை என்றால் என்ன என்று 1983லேயே காட்டிய மகான் தான் இந்த பட இயக்குனர்.

அன்று இரவு வீடு சென்ற முஷ்டாக்  , "என்னை விட்டுடுங்க, இனிமே நான் காலேஜ் ஒழுங்கா போறேன், நல்லாப் படிக்கிறேன் " என்று தூக்கத்தில்  கதறியதை அவன் வீட்டார்கள் என்னிடம் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொண்டார்கள் . 

ஊரையே மேய்க்கிற தாசில்தார் அப்பா செய்ய முடியாததை ஒரு 3 மணி நேர திரைப்படம் செய்ததை நன்றியுடன் பாராட்டினர் 

இதற்கு நடுவில் முஷ்டாக் ஒரு அரிய பணியை, பொறுப்பை தியாகி கதிரேசனிடம் ஒப்படைத்தான். ஒரு quarter பிராந்தி ஒரு பாக்கெட் சிகரெட் இரண்டையும் கொடுத்து, என் கண்களையே என்னிடம் ஒப்படைக்கிறேன், சினிமா முடியும் வரை பத்திரமாக வைத்திரு என்று ராமன் கணையாழியை அனுமனிடம் கொடுத்தது போல் கொடுத்தான்.

அவனுக்கு வேணும்னா அவனே வச்சுக்கட்டுமே, நீங்க ஏன் இந்த பாவமூட்டையை சுமக்குறீங்க என்று அவனுக்கு, நம் மற்றோரு நண்பரிடமிருந்து  திட்டு வேறு.

கருமமே கதிரேசனார் ! இதற்கெல்லாம் கலங்கவில்லை. பின் இருக்கையில் இருப்பவர் திரை மறைக்கிறது என்று சொல்லச் சொல்ல, பரதன் ராமன் பாதரக்ஷைகளை ஆராதிப்பது போல் சிரமேற்கொண்டான்.

எங்கேயோ உட்க்கார்ந்திருந்த நான் இதற்காகவே பக்கத்து இருக்கை தேடியது, censor செய்ய வேண்டிய காட்சி.

(இதற்கு நடுவில்,, கதிரேசன் பாட்டிலில் பாதியை இருட்டில் காலி செய்து தண்ணீரை நிரப்பி விட்டான் என்று  ஒரு விஷமி பரப்பிய  வதந்தியை நம்பாதீர்கள். நான் அதை வன்மையாக கண்டிக்கிறேன். வெள்ளையா இருக்கிறவன் பொய் சொல்லமாட்டேன் ! )

சினிமா முடிந்து கழுத்து அறுபட்டு ரத்தகாயமான நண்பர்களுக்கு, முதலுதவி செய்து வீடு திரும்ப எத்தனித்தோம்.

ஆனால் அதற்க்கு முன் ஒரு முக்கிய கடமை இருக்கிறதே ! அது இல்லாமல் பிரிவுபசார விழா நிறைவுறாதே ! 

அனுமன் காத்த கணையாளியும் , பரதன் போற்றிய பாதரக்ஷைகளும் !

எல்லாம் பார்த்துக்கோங்க ! நானும் ரௌடிதான் ! நானும் ரௌடிதான்  என்று Bunsen பர்னர் ஏற்றத்தெரியாதவர்கள் எல்லாம் அம்மி பறக்கும் காற்றில் சிகரெட் பற்றவைத்தோம் . 

ஒரு quarter (175ml ) பிராந்தி வாய் கொப்பளிக்கக் கூட போதாதது என்று இன்று சொல்லும் தமிழ்குடிமகன்கள், கிடடததடட ஒன்றரை டஜன் பேர் சேர்ந்து, ஒரு 175 ml பாட்டிலை பகிர்ந்துகொண்டோம், ரோட்டில் நடந்து கொண்டே. 

பாட்டில் மூடியில் பெருமாள் கோவில் தீர்த்தம் போல் பிராந்தி  குடித்ததை நினைத்து இன்றும் சோமசுந்தரம் இடிச்சிரிப்பு சிரிக்கிறான். அவன் பேரிலே "சோம " வைத்துக் கொண்டு நல்லவன் வேடம் போடுகிறான் 

திருவிளையாடல் மட்டுமே கண்ட நம்முள் சிலர் இந்த தெருவிளையாடலை தாங்க முடியாமல், நடுவில் PRC பஸ் வருவதையும் கண்டு பயப்படாமல், குதித்து எதிர் platform தாவினார்கள். என் நினைவில் pole வால்ட் தாண்டியவர்களில் ஒருவர் மோகன், மற்றோருவர் மு.க . சுப்ரமணியன்.

துர்வாவாசத்தை க் கண்டு துர்வாசரான சிலர் "தூர "வாசர்கள் ஆனார்கள்.

நான் தாவி ஓடவில்லை என்பதிலிருந்தே நானும் ஒரு மூடி பிராந்தி குடித்த ரௌடிதான் என்பது புரிந்திருக்கும். SMSம்  ஒரு மூடி பார்ட்டிதான் . மற்ற ஒரு மூடி பார்ட்டிகள் மரியாதையாக ஒத்துக்கொள்ளவும்.

அந்த தாவி ஓடியவர்களை மட்டுமல்ல மற்ற பலரையும் பல வருடங்களாக பார்க்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை 

ஆவலுடன் தொடங்கிய பிரிவுபசார விழா சப்பென முடிந்தது. 

இல்லை எதிர்பார்த்த படி நடந்திருந்தால் இந்த வித்தியாசமான் அனுபவம் கிடைத்திருக்குமா ?

எல்லாம் இன்பமயம் !

நகைச்சுவையாக எழுதுவதாக நினைத்துக்கொண்டு, உரிமையிடன் சிலர் பெயரை இழுத்திருக்கிறேன். எல்லை மீறியிருந்தால் மன்னிக்கவும். யார் யாரிடம் உரிமை மீறவில்லையோ அவர்கள் உரிமை மீறவிருக்கும் நாட்களுக்கு காத்திருக்கவும் .

மலரும் நினைவுகளை நினைவு கூர்வதில் உதவி செய்த , memory பிளஸ் மோகன் , கதிரேசன் மற்றும் சினிமா தியேட்டர் பெயரை (மட்டும்) நினைவு வைத்திருக்கும் சுதாகருக்கும்  நன்றி 







Thursday, September 8, 2016

பிரிவுஉபசாரம் பிரியாவிடை

பிரிவுஉபசாரம் பிரியாவிடை 


(மறதி அதிகமாகிவிடடபடியால் முழுக்கதையும் உடனடியாக நினைவுக்கு  வரவில்லை. திரைக்கதையில் இதுவரை உதவி செய்த Dr மெமரி ப்ளஸ் மோகனுக்கும், 1633 என்று எண்கணிதப்படி விளித்தால் சுட்டெரிக்கும் கதிரேசனுக்கும், இந்த முதல் பதிப்பில் விட்டுப்போயிருக்கும் கிளைக்கதைகளை பின்பு நினைவு படுத்தவிருக்கும் மற்ற நண்பர்களுக்கும் நன்றி)

முன்னொருகாலத்தில்  (பிரும்மா ஸரஸ்வதி தம்பதியரின் உலகமாகிய ) பிரும்மபுரத்தில் வித்யாபதி என்னும் ஒரு ஊமை, செவிட்டு , கல்வியறிவு இல்லாத பக்தன் கோலமிட்டுக் கொண்டிருந்தான். காதால் கேட்கமுடியாவிட்டாலும் வாணி மிகுந்த கோபமாக இருப்பதையும் பிரும்மா (எல்லாக் கணவன்மார்கள் போல் ) முகவாய்க்கட்டையை தடவிக்கொண்டு அமைதியாக  இருப்பதையும் உணரமுடிந்தது.

வாணி: என்ன ஆணவம் இருந்தால் என்னை உதாசீனப்படுத்தி விட்டு செல்வமும் வீரமும் தான் உயர்ந்தது என்று சொல்வார்கள்! உலகத்தில் சிறந்தது கல்விதான் என்று நிரூபிப்பேன்.  பிறப்பிலேயே குறைகளோடு பிறந்த வித்யாபதியை நான் பூலோகம் அனுப்பி கல்விதான் சிறந்ததென நிரூபிப்பேன். இதோ ,உடனேயே பேசும் திறமையைத் தந்தேன்_   (வித்யாபதி, அகர வரிசையைத் தொடங்கினான்)

வித்யாபதியின் ஆடையில் ஒரு microchip பதித்து அனுப்புகிறேன், அது அவனுக்கு ஆயக்கலைகள் 62ம் வந்து துணைநிற்கும் (வாசகர்கள் புலம்புவது கேட்கிறது. Actually, ஆயக்கலைகள் 64 தான். அவனுக்குத்தான் பேச்சு, கோலமிடுதல் என்ற இரு கலைகள் ஏற்கனவே தெரிந்தனவைதானே . பாக்கி 62 , கணக்கு சரிதானே !?!?)


கலைமகளை வணங்கி வித்யாபதி பூவுலகம் செல்லத் தயாரானான் . பூவுலக மங்கைகளின் அரிதாரப்பூச்சுத் திறமைகளை அழகைப் பற்றி கேள்விப்பட்டிருந்ததால் அவர்களை மயக்க நல்ல ஆடை ஆபரணங்களுடன் செல்ல வேண்டுமென எண்ணி பூவுலகின் பேராபரணமான iphone 7S plus  ஒன்று தயார் செய்து கொண்டான். Trendyஆக லீவைஸ் ஜீன்ஸ்ஸும் , முழங்கையில் இருக்கும் அம்மைத்தழும்பு தெரியுமாறு ஒரு Ralph Lauren Polo மேற்(அ )சட்டையும்  அணிந்துகொண்டான் .

பாண்டியனுக்காக கால்மாறி ஆடி திருவிளையாடல் புரிந்த ஆலவாய் நகருக்கு வித்யாபதியை அனுப்பவிருப்பதால், ஐயனை போற்றும் விதமாக சரஸ்வதி தேவி வித்யாபதிக்கு *ஆடலரசு* என தமிழ்ப்பெயர் சூட்டினாள்.


கலைமகள் கொடுத்த 62 கலை microchip பிரும்மபுரத்திலே ஆணியில் இருந்த ஆடையிலேயே இருந்துவிட்டது.

வித்யாவாணி அன்னையின் ஆசியில் மதுரை வந்த "2"கலை வித்யாபதி அன்னையின் பெயர்கொண்ட வித்யாநகரில் உள்ள மதுரைக்கல்லூரியில் வேதியியல் துறையில் பணியில் அமர்ந்தார் (நம் கல்லூரிக்கு வித்யா  நகர் என்ற பெயர் இருப்பது கல்லூரி ஆண்டுவிழா மலரைப் பார்த்தே தெரிந்துகொண்டேன் )

ஆடலரசு என்ற பெயர் சற்று கரடுமுரடாக இருந்ததால், தமிழ்ப் பெயர் தேடினான் ( ஆடலரசு தமிழ்ப்பெயர்தானே என்னும் நேயர்களுக்கு ஒரு சிறிய flashback

சென்னையில் ஒரு டாக்ஸியில் போய்க்கொண்டிருந்தேன் . "_ நேராப் போனா ஒரு பாலம் வரும், அப்புறம் இடதுபக்கம் திரும்பி அரை கி. மீ போயி அப்புறம் வலதுபக்கம் நாலாவது தெரு_ " என்று வழி காட்டினேன்.  Maths Prof / NCC master ராகவன் போல ஒரு முறை முறைத்த டாக்சி டிரைவர் பி லெப்ட் , ரைட்டுன்னு தமிழ்ல்ல சொல்லு சார் என்று   நவீன அகத்தியனானான்!)


வித்யாபதியிடம் microchip இல்லாததால், இரண்டே இரண்டு கலைகள் மட்டுமே கையிருப்பு. வித்யாபதி நடராஜனாக தமிழ்ப்படுத்தப்பட்டு Inorganic Chemistry ஆசிரியராக கல்லூரியில் தனக்குத் தெரிந்த கோலத்தை கரும்பலகையில், கரடுமுரடான பேச்சை அள்ளித்தளித்தும் நம் தலையில் கட்டப்பட்டார்

(62 கலை மைக்ரோசிப்புடன் வேறு ஒரு வித்யாபதி சரஸ்வதி சொல்படி நடந்து இறையருட்ச்செல்வர் பட நாயகனானார் )

அப்படிப்படட கோலபதி நடராஜனால் துன்புறுத்தப்படட நாம் விதியின் கொடுமையால் அவரிடமே நம் Farewell பற்றி பேசத்தொடங்கினோம் !

படிப்பு சம்பந்தப்படாத சமாச்சாரமென்ற நாட்களில் மட்டும் தேர்தல் நேரத்து அரசியல்வாதி போல முஷ்டாக் "ப்ரஜன்ட்ஜார் " ஆகிவிடுவான் ! ஆகினான்  அன்றும் !

வடகொரியாவின் Kim Jong-un போல தன்னைத் தானே farewell கமிட்டி தலைவராக தேர்ந்தெடுத்து க்கொண்டான்.   நாமும்  வெட்ட ஆடு கிடைத்த சந்தோஷத்தில், கத்தியை சாணைபிடிக்கத் துவங்கினோம். இந்த ஆடு வேறு விதமாக ஆடும் என்று அப்போது தெரியாது !


-தொடரும்-



Wednesday, September 7, 2016

மேற்படிப்புக்கு முயற்சித்த காதை

மேற்படிப்புக்கு முயற்சித்த காதை 


நம்மில் பலர் ஆடிக்காற்றில் சுழற்றியடிக்கப் பட்டு இன்று ஏதோ ஒரு ஜந்துவாக, மாமிசப் பிண்டங்களாக அலைந்து கொண்டிருக்கிரோம் (சொல் உபயம் : சென்ட்ரல்  பஸ்ஸடி சர்ச் .......நினைவிருக்கலாம்......ஏ  பாவிகளே, மாமிசப் பிண்டங்களே  ! கர்த்தர் இயேசு  வருகிறார் )

நாம் படிக்க நினைத்து ஒன்று ! படித்தது ஒன்று !

வேலை பார்க்க நினைத்தது ஒன்று,! ஆனால் பார்க்கும் வேலை வேறு !

காதலியாக நினைத்ததோ உதயசந்த்ரிகா ! ஆனால் கிடைத்ததோ முனியம்மா !

எல்லாம் விதிப்படிதான் நடக்கும் ! ஹூம்ம் ம்  !

(நண்பர்கள்: டேய்  அ .ரா.கி  (ARK ) உனக்கு எதுக்குடா தத்துவவியல் எல்லாம் ....உனக்குத் தெரிந்ததெல்லாம் காமெடிதான்

போய்  makeup ஐ  மாத்தி  காமெடி ஸ்கிரிப்ட் எழுதிட்டு வா!

அராகி   : ஆமென் .....ததாஸ்த்து.....  )

இதுவரை அராகி முகத்தில் இருந்த 7 வாட் பிலமென்ட் பல்ப் வெளிச்சம் போய்  40 W LED  வெளிச்சம். 

சாரங்கி பின்னணி இசை *வாதன் * மாறி கதன குதூகலத்தில் வேணுகானம் . அதானேப்பா நம்மூரு திரைப்பட ஸம்ப்ரதாயம் !

1985 கடைசி செமஸ்ட்டர் .... நானெல்லாம் MSc கெமிஸ்ட்ரி   படித்து பெரிய வக்கீலாகவோ , டாக்டராவோ ,எஞ்சினீயராவோ  ஆவேன்னு தெளிவா இருந்த காலம்.

பிப்ரவரி மாத சமீபத்தில் 1614 SMS ஒரு நாள் என்னிடம்

" வாடா, நாம ரெண்டு பேரும் கேண்டீன்ல  போய்  MBA  அப்ளை பண்றது பத்தி பேசலாம்னு "கூப்பிட்டான் . 

காலை பசிமயக்கம். வடை + காஃபி  வாங்கித்தரத்தத்தான் கூப்பிடறான்னு  நம்ம்ம்பிபி , தேங்க்ஸ்  என்றபடி  அவனுக்கு முன்னால் கேன்டீன் நோக்கி .  இதுக்கெல்லாம் எதுக்கு தேங்க்ஸ் , படிப்பு பத்தின சமாசாரந்தானே என்று அவன் சொன்னது என் ஈயம் காய்ச்சி ஊற்றப்படட காதுக்கு கேட்கவில்லை.

என்ன இன்னைக்கு TREAT ....என்றவனை...... கோவிலில் செருப்பை கடித்து ஓட எத்தனிக்கும் நாயைப் பார்ப்பது போல்  ஒரு லுக் விட்டான் SMS .

முதல் பத்தியில் சொன்னதுபோல, நந்தகுமார்  ஆனா நான் நொந்தகுமார் ஆனேன் 

ஓரே டோக்கன் வாங்கி, ஒன்-பை -டூ காபி  , என்று என்னுடன் "டூ " விட்டான். அரை கப் காபி குடித்ததும் அடைத்த காது  ரிலீஸ்  ஆனது. .

(ஒரு பிளாஷ் பேக் : ஒரு நான், SMS , மற்றும் யாரோ ஒருவர் கேன்டீன் போனோம். 3 காபி டோக்கன் வாங்கிய பிறகு அந்த 3வது  நபரைக் காணோம் எதையும் தாங்கும் இதயமான எங்களுக்கு இதைத் தாங்க முடியாதா என்ன ?சர்வரிடம், த்ரீ -பை - டூ  என்றோம். சரி என்று காபி கலக்க போனவருக்கு ஒரே குழப்பம் . 1/2  சரி, .....ஒரு காப்பியை இரண்டு  கப்பில் ஊற்றலாம் .  ஆனால்  மூன்று காப்பியை எப்படி இரண்டு  கப்பில் ஊற்றுவது, கொட்டி வழியாதா  என்று வேலையை ராஜினாமா செய்யும் அளவுக்கு போனார் .


வழியாமல் எப்படி 3/2 செய்வது என்று நாங்கள் அவருக்கு சொல்லிக் கொடுத்தோம். ஹி   ஹி   ஹி   ஹி   ஹி  !!!!
பிளாஷ் பேக்  முடிவு )


சரி...சரி...SMS கேண்டீன் அழைத்துக் கொண்டுபோன பர்வத்துக்கு வருவோம்.

என்னப்பா treat எல்லாம் குடுக்கிறாய். அண்ணனுக்கு திருமணமா ? உனக்கு லைன் கிளியரா என கேள்விகளை அடுக்கினேன்.

பதிலுக்கு தலையில் பாறாங்கல்லை இறக்கினான். நாம் இருவரும் மதுரை பல்கலைக்கழகத்தில் MBAக்கு அப்ளை பண்ணலாம் என்றான்......சினிமாவுக்கு சேர்ந்து போகப்போகிறோம் என்று உரிமையோடு கூப்பிடுவத்தைப்போல!

சேர்ந்து அப்ளை செய்கிறோம் என்ற பெயரில்  SSC, BRSB, MSc(Agristatistics) கண்டபடி சேர்ந்து கெட்டுப்பொய்க்கொண்டிருந்தோம்.  கரகரப்பிரியாவிடம் DMTக்கு வசவு வாங்கியதை முன்னர் சொல்லியிருந்தேன்.

சரி, நாம முயற்சி பண்ணி எதுவும் கிடைச்சது இல்லை என்பதால் சரி  என்று சொல்லி MBA வையும் அந்தக் கணக்கில் சேர்த்தேன்.

அடுத்து வெண்ணையில் கத்தி சொருகுவது போல் "அப்ளிகேஷன் பீஸ் ₹35/- என்று சொருகு சொருகினான். என் கண்கள் சொருகின. (அந்த கோர்ஸ் படித்தவன் என்ற வகையில் சொல்கிறேன், அந்தக் கல்லூரிக்கு அது கொஞசம் ஓவர். 1623 போன்ற பணக்காரர்கள் மட்டும் படிக்கவேண்டும் என்ற எண்ணமோ)

அப்பா...ஆளை விடு. எங்கப்பாவிடம் கேட்கக் கூட தயக்கமாயிருக்கிறது. திடீர்னு அவ்வளவு பெரிய அமௌண்ட்க்கு அவர் எங்கே போவார் என்றேன்.

பின்னர் SMS விட்ட பல கலர் கலர் ரீல்ககளை நம்பி (உ-ம்: படிச்சு முடிச்சா அம்பானி , டாடா, L&T ஓனரெல்லாம் பொண்ணு குடுக்க ஓடோடி வருவார்கள்) தலை ஆட்டினேன்.


அன்று மாலை அப்பாவிடம் தயங்கி 
தயங்கி .....அப்பா! ஒரு விஷயம் சொல்லுவேன், உஙகளால தாங்கிக் கொள்ளமுடியுமா தெரியலை !  ஆனால் உங்க சம்மதம் இல்லாமல் நான் எதுவும் செய்ய மாட்டேன் என்று  உளறிக் கொட்டினேன். 

என்னடா சொல்ல வர்றே  என்றார்  அப்பா .

நான் கூட வேண்டான்னு சொன்னேன், என் பிரென்ட்  மீனாக்ஷி தான் ... தத்துப்பித்து  என்று பேத்தினேன் .

அப்பா ஏதேதோ கற்பனை செய்து கொண்டு டென்ஷனில் வலது மார்பை பிடித்துக் கொண்டு உட்க்கார்ந்து விட்டார். பின் நான் தான் நினைவு படுத்தினேன், அப்பா இருதயம் இடது பக்கம் இருக்கிறதென !

ஒரு வழியாக உளறாமல்  தகவலை சொன்னேன்.

ஏண்டா ! ஒழுங்கா பழங்காநத்தம் சேகர் என்று சொல்லித் தொலையவேண்டியது தானே (SMS ன்  பூர்வாசிரம பெயர் சேகர்). நான் கூட என்னவோன்னு நினைத்தேன். 

( என் உளறல் + மீனாக்ஷி பெயர் சுருக்கம் எல்லாம் சேர்த்து  எங்கப்பா *மீனாட்சி அனந்தராமகிருஷ்ணன்*  என்று பெயர்ப் பொருத்தம் வரை போயிருப்பார் என்று நினைக்கிறேன்...பாவம்)

ஏதோ தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போனதே என்ற reliefல் "சரி சரி 35 ரூபாய்க்கு ஏற்பாடு செய்கிறேன்" என்று ஒத்துக்கொண்டார்.

வீட்டில் இருந்த GR ஐ ஒரு வழியாக சரிக்கட்டிவிட்டோம் . காலேஜில் இருக்கும் GR ஐ  எப்படி handle செய்வதென கவலை. Prof GR இடம் ஏன்  போகவேண்டும் என்று கேட்கிறீர்களா ? அங்கேதான்  MKU  சூட்ச்சுமம் வைத்திருந்தது. ....விண்ணப்பத்தில் துறைத்தலைவர் கையெழுத்து வேண்டுமென்று !

ARK +SMS  மந்திராலோசனையில் ஒரு பொரி  தட்டியது ,  திருவிளையாடல் முருகனைப் போல் ! கெமிஸ்ட்ரி  PROF என்றால் என்ன? மேத்ஸ் PROF என்றால் என்ன? நாம்தான் எடுப்பார் கைப்பிள்ளை ஆயிற்றே ! 

மாத்ஸ் சீதாராமனிடம் போனோம்.

Prof சீதாராமன் அப்பாவி ! அப்ளிகேஷன்  கொடுத்தவுடன் பச்சை மை பேனாவை திறந்தே விட்டார். திடீரென்று நீங்க ரெண்டு பெரும் மேத்ஸ்& பிசிக்ஸ் தானே என்கிறார். சொன்னோம். GR ஐ பாருங்கள் என்று *புலிக்கூண்டுக்கு*  பரிவோடு வழிகாட்டினார் .


முன்பு சொன்னது போல் எங்கள் இருவரையும் பார்த்தால்  அவருக்கு அப்படி ஒரு வாஞ்சை . மிக்ஸியில் போட்ட தேங்காயைப் போல் அரைத்து கரைத்துவிடுவார். SMS சடடையில் முதல் பித்தானை  அவிழ்த்து விட்டுக்கொண்டு வருவதை பல முறை "வார்னி"யிருக்கிறார்.

அதென்ன எப்பப் பார்த்தலும் ஹனிமூன் தம்பதிகள் மாதிரி சேர்ந்து சேர்ந்து போயிட்டு இருக்கிறீங்க ...இது போன்ற choicest வசனங்கள் .


பேய்க்கு வாழ்க்கைப்படடால் முருங்கை மரம் ஏறித்தானே ஆகணும் . நல்ல வேளை  இந்த ~பேய்~ prof  தரைத்தளத்தில் தான் !

இஷ்ட தேவதை, கஷ்ட தேவதை என ஒரு தெய்வம் விடாமல் பிரார்த்தனை செய்துகொண்டு காரிடாரில் H2S  நாற்றத்தையும்  பொறுத்துக்கொண்டு காத்திருந்தோம்.

"நான் தான் சொல்லியிருக்கேன் ! உங்க  ரெண்டு  பேரையும் சேர்ந்தே பார்க்ககூடாதென்று " என்று சுபாஷிதானி (நன்மொழிகள்) உதிர்த்துக்கொண்டே வந்தார். 

நாங்கள் இருவரும் அவரைப் பார்க்கத்தான்  என்பதை புரிந்துகொண்டு brake  அடித்து நின்றார்.

MBA application   என்று சொன்னதும் (மனதுக்குள் இந்த சனியன்கள் ஒழிந்தால் சரி என்றிருந்தாலும்) வெறும் வாயை மென்றவனுக்கு அவல் கிடைத்தது போல ஒரு பிடி பிடித்தார் .அன்று  எவ்வளவோ சொல்லியிருந்தாலும் நினைவில் நின்றவை இந்த  டயலாக் தான் 

"காலேஜில கிழிச்சது போதாதா , யூனிவெர்சிட்டியையும் நாறடிக்கணுமா "

"MBA  படிக்கிற ஆசையிருக்குறவன் எதுக்கு கெமிஸ்ட்ரி படிச்சு அடுத்தவனுக்கு கிடைக்கிற சீட்டையும் கெடுக்குற ! பேசாமல் ஒரு ஆர்ட்ஸ் டிகிரி படிச்சு தொலையலாமே "

விட்டது சனி என்று அப்ளிகேஷன் பார்மில் ஓட்டை விழும் அளவு அழுத்தி கையெழுத்திடடார்.

கையெழுத்து வாங்கிவிட்டு பின்னங்கால் பிடரியில் பட தெறித்து ஓடினோம். சீல் தேவையாயிருந்தது , பின்னர் நளினகாந்த் (அதான் lab அசிஸ்டன்ட் , ஒருத்தர் அச்சம், ~மேடம்~ மடம் , நாணம், பயிர்ப்பு போன்ற  அங்கலக்ஷன்களோடு  இருப்பாரே)

சும்மா சொல்லக்கூடாது, அவர் இல்லையென்றால் நான் 6 செமஸ்ட்டர் ஆர்கானிக் கெமிஸ்ட்ரியில் குண்டடித்திருப்பேன். எதையும் தாங்கும் இதயமாக எந்த ரீயேஜெண்ட்டுக்கும் மசியாமல் இருந்த அந்த மர்மப்பொடி குளுக்கோஸ் என்று தடவிப்பார்த்து குறிசொன்னவர்.


இப்படியாக அப்ளிகேஷன் போட்டு, பரீடசை எழுதி, group discussion , interview தாண்டி எனக்கு சீட் கிடைத்து, ஆனால் catalyst ஆன SMS க்கு கிடைக்கவில்லை. (நாங்கள் இருவரும் சேர்ந்து ஒரு மேற்படிப்பு படிக்ககூடாதென மனதார நினைத்த ஒருவர் எண்ணம்  பலித்தது )

எனக்கு மாத்திரம் MBA  கிடைக்கவில்லையென்றால் SMS மாதிரி CA படித்து, விசாகா ஹரி போல காலட்சேபம் செய்யவோ, Lalgudi GJR  கிருஷ்ணன் போல ஒரு வயலினிஸ்ட் ஆகவோ வந்திருப்பேன் . மேற்கூறிய இருவரும் professionally qualified .

நான் MSC முதல் செமஸ்டர் படித்துக்கொண்டிருக்கும் போது MBA அட்மிஷன் கிடைத்த்து. 30 பேர் கொண்ட வகுப்பில், மூன்றாவது லிஸ்ட்டில், 30வது ஆளாக சேர்த்துக் கொள்ளப்பட்டேன் .

அங்கே போனால் ஒரு ஆள், நம்மூரு பாஷையில் சொல்வது போல், *கமுக்கமாக* ஏற்கனவே சேர்ந்திருந்தார் . ....1623, ரகுபதி. அடப்பாவி...சொல்லவே இல்லையே என்று வடிவேல் போலானேன்.


SMS க்கு ஒரே மனசலிப்பு . எந்த கோர்ஸ் ம்  வாகாக கிடைக்கவில்லை . MSc ல் நாடடமில்லை. அவனை கடுமையாக எச்சரித்திருந்தேன் , கல்யாணம் கூட பண்ணிக்கோ ஆனால்  CA  மட்டும் சேராதே என்று . என் அண்ணன்  CA சேர்ந்து எடடாண்டுத் திடடம் தீட்டியதையும், என் உறவினர் +SMS எதிர் வீட்டுக்காரர் நரசிம்மன் போன்ற பல மேற்கோள் காட்டியிருந்தேன் .


Rules are there , only to be violated என்பது போல, ஒரு நாள் என்னிடம் தயங்கி, தயங்கி பேசினான் 

"நான் ஒண்ணு சொல்லுவேன் கோபித்துக்கொள்ளக் கூடாது என்றான்"

பட்சி எங்கேயோ சிக்கீடுச்ச்சு என்ற என் முகத்தில் கரியைப் பூசி, CA சேர்ந்த கதையைச் சொன்னான். என் கண் முன்னால் உலகம் சுற்றியது . வழுக்கைத் தலையாகிப் போன SMS முகமெல்லாம் தெரிய ஆரம்பித்தது .

கடைசியில் அவன் எனக்கு வழுக்கைத் தலையை கொடுத்துவிட்டு, முதல் attempt ல் இன்டெர் , முதல் attempt ல் பைனல்  என தூள் கிளப்பி , ஆல் இந்தியா rank வாங்கினான். இன்று வரை அன்றலர்ந்த 1614ஆகவே இருக்கிறான்.


_(இதனால் நீதி: நான் சொல்லும் எந்த அறிவுரையையும் கேட்காதீர்கள்_ )

பிறகு

நீதி சொல்லிவிட்டால் அத்துடன் சுபம் தானே. !































குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...