Tuesday, July 26, 2016

சேஷ கதை


"சேஷ" கதை


பி. எஸ்சி  முதல் வருடப் படிப்பின் துவக்கத்தில் 1604 முரளி சங்கீதம் படித்துக் கொண்டிருந்ததும், அவருடைய குரு சேஷகோபாலன் என்பதும் கேள்விப் பட்டிருந்தோம். எதிலுமே கேலிப்பேச்சாக இருந்த என்னைப் போல இருந்த ஞான சூன்யங்கள் (மற்ற ஞான சூன்யங்கள் மன்னிக்கவும்) சந்தர்ப்பம் தேடிக் கொண்டிருந்தோம், நக்கல் பண்ண....

முதலில் முரளியை  சேஷ முரளியாக  பட்டம் சூட்டி அரியணை ஏற்றினோம் .

மதுரகவி, செந்தமிழ் புலவர், வார்த்தை சித்தர், கடியரசன், கலியுக பாணினி 1616 பிரபாகர், மற்றோரு இசையரசர் 1606 மோகனுக்கு திடீரென "சேஷ" மோஹன் என்று பட்டமளித்தார். 

அன்று முதல் இந்த "சேஷ" படாத பாடு பட்டுக்கொண்டிருக்கிறது (33 வருடங்களாக .....மேன்மேலும் படப்போகிறது) .

இதோ இப்படித்தான் ....

மோகனிடம் பேசும் எல்லோரையும் நோட்டமிட தொடங்கினோம் . முரளியை நோட்டமிட்டு பலனில்லை. ரஜினிகாந்த் மாதிரி எப்போ வருவான்னு யாருக்கும் தெரியாது. ஆனால் வரவேண்டிய நேரத்திலையும் வர மாட்டான்

முதலில் மாட்டியது... ரகுபதி...

……………………(கரகரப்ரியா) Prof  மீனாக்ஷி சுந்தரம் குரலில் இருந்து வரும் தம்புரா போன்ற நாதம், எத்தனை கட்டை ஸ்ருதி, 
……………………ஆஹா இன்ப நிலவினிலே பாடல் மோஹனமா, ரகுபதிப்பிரிய என்ற ராகமா,

……………………..M .Sc பிசிக்ஸ் வகுப்பில் எத்தனை பெண்கள் பெயர் ப்ரியா என்று முடியும் என்பன  போன்ற பலத்த சங்கீத ஆராய்ச்சியில் ஈடு பட்டிருந்ததால்  அன்று முதல் மூவரான "சேஷ" கௌரவர்கள் , நால்வரானார்கள்.


சேஷ ரகுபதி

நல்லாத்தான் இருக்கு.தொடருவோம்

ஒரு நாள் கெமிஸ்ட்ரி லேபில், யாரோ ஒருவர் பிப்பெட்டால் உறிஞ்சிக் கொண்டிருந்தார் .....அதில் இருந்து ஒரு நாதவினோதினி சங்கீதமாக சப்தமிட, அன்று முதல், உறிஞ்சுவதற்கு பெயர் "சேஷ சக்ஷன் "

....இதுவும் நல்லாத்தான் இருக்கு. (பெயர் உபயம் ARK  and  SMS )

சமஸ்க்ருத ஆசிரியர் பண்டாரகர் ஜெகதீசன் நடக்கும் போது தலையை உயர்த்தி ஆட்டிக் கொண்டே செல்வார். மனதிற்குள் பாடுவாரா என்பது தெரியாது, ஆனால் அதை பற்றி நமக்கு என்ன கவலை.  காலம் கனிந்து வரும் என்று காத்திருந்தோம். அவர் BSc (P & C ) மாணவன் ஒருவனை வித்யாசமாக  அழைப்பார். Seshadri  என்ற பெயரை Seshadhray என்பார் . அதனால் அன்று முதல் அவர் 

சேஷாத்dhre

ஒரு நாள் நடந்து கொண்டிருந்த போது ஒரு நாயை பார்த்தோம். நம் மத்தியில் இருக்கும் சங்கீத மாமேதைகள் கவனித்திருக்கலாம் .. நாய் போருக்கு (ஊளை போருக்குத்தான்) போகும் முன்பு, தம்புரா மற்றும் தந்தி வாத்தியங்கள் ஸ்ருதி சேர்ப்பது போல், நீண்ட ஊளையிட்டு குரலை சோதித்துக் கொள்ளும் ...

அதுவே சற்று சங்கீத மாக இருந்ததால் அந்த நாய்க்கு நாங்கள் செய்த நாமகரணம் (பெயர் சூட்டு விழா ) அல்சேஷன் . ஒரு சாதாரண தெரு நாயை “அல்சேஷன்” என்று அழைத்ததால் அந்த நாயின் சந்ததியே என்னை இன்றுவரை நன்றியுடன் பார்த்தது வருகிறது .

இப்படி தொடங்கிய நாமகரணம், மாநகராட்சி குப்பை லாரி எட்டுத்திக்கிலும் குப்பையை சிதற விட்டுக்கொண்டே செல்வது போல் , கண்டவனுக்கெல்லாம் ஒரு "சேஷ " டைட்டில் ...

சங்கீதத்திற்கும் எங்களுக்கும் காத தூரம் என்பதாலும்  தன்னடக்கம் காரணமாகவும்,  நாங்கள் எங்களுக்கு சேஷ பட்டம் வழங்கி கொள்வதை தவிர்த்தோம்!!

1622 நாராயணன் அடிக்கடி சினிமா பாட்டு படிப்பது வழக்கம் ( ஏன் பாட்டு படிப்பது என்று சொல்கிறேன் என்று புரிந்திருக்கும் ). அன்று முதல் சேஷ நாராயணன்.

ஒரு நாள் தொலைக்காட்சியில் கூந்தலுக்கான சவர்க்கார விளம்பரம். பெண் பாட்டுப் பாடிக்கொண்டே கூந்தலுக்கு சவர்க்காரம் இடுகிறாள். விடுவோமா ....அந்த விளம்பர பொருளுக்கு அன்றுமுதல் பெயர் 

"சேஷ ஷாம்பூ "

இப்பொழுது வருகிறது கிளைமாக்ஸ் ...

நானும் SMS ம்  ZB1/ZB2 அருகில் செல்லும் போது ஒரு தாவரவியல் ஆசிரியர் பாட்டு பாடிக்கொண்டே சென்று கொண்டிருந்தார். அவரை எனக்கு பள்ளி நாட்களில் இருந்தே தெரியும். பாடிக் கொண்டிருந்ததால் அவருக்கும் ஒரு "சேஷ" பார்ஸல் ...

பெயர் வைத்தததும் எங்களிருவருக்கும் பெருமை தாங்கவில்லை .. இப்படி ஒரு பெயர்ப் பொருத்தம் அமையவே அமையாது என்று எங்களுக்கே நாங்களே பாராட்டு பத்திரம் வாசித்தோம்.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
அவர் பெயர் கோபாலன் .

சேஷ+கோபாலன் ரொம்ப அருமை.

அப்போது தான் உரைத்தது

அடப்பாவி ...இந்த சேஷ விளையாட்டு சேஷ கோபாலனில் இருந்து தானே தொடங்கியது . அங்கேயே வந்து நிற்கிறோமே


மீண்டும் சேஷ கோபாலனா

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...