1984 கடைசி
சில மாதங்களென நினைக்கிறேன். தேதி சரியாக நினைவில்லை.
ரகுபதி வீட்டிற்கு சென்றிருந்தேன், ஏதோ முக்கியமாக ஒரு
தகவலென்றிருந்தான்.
பக்ஷி
எங்கோ சிக்கிவிட்டது என்று என்னுள் இருந்த பட்சி சொன்னது (சுஜாதா அடிக்கடி சொல்வது.... எழுத்தாளர் சுஜாதா தானப்பா ! கற்பனை குதிரையை தட்டவேண்டாம் )
சாதாரணமாக
பேசி முடித்து (திண்ணையோடு) அனுப்புவதோடு
அந்தக்கால நண்பர்கள் சங்காத்தியம் இருந்த காலகட்டத்தில், எனக்கு ரகசியமா (கருப்பு நிற பேக்கலைட் தொலைபேசி இருக்கும்)ஒரு சிறிய அறையில்
உட்க்காரவைத்து சாப்பிட
ஏதோ கொடுத்ததும் பயம் தொற்றிக் கொண்டது.
போடிநாயக்கனுர்
பாசஞ்சரில் அண்ணன் பேசிய வசனம் வேறு ஏனோ நினைவுக்கு
வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது (வேறு என்ன வசனம்
....டேய் நாயே! )
தனியா
உட்க்கார வைத்து பேச முனைந்தாலே ஏதோ
ஒரு பயம் தொற்றிக் கொள்ளும் (என்னையும் 1614 மீனாக்ஷி
சுந்தரத்தையும் முனைவர் ஜீ ஆர் கெமிஸ்ட்ரி லேப் வாசலில்
கால் மணி நேரம் காக்கவைத்தது
பின் வந்து திட்டியதும் நினைவுக்கு வந்தது ....ஜீ ஆர் எங்களிடம்
சொன்னது ..."ஒங்க ரெண்டு பேரையும்
இனிமே நான் சேர்த்தே பார்க்கக்
கூடாது...அது என்ன எப்பப்
பார்த்தாலும் ஹனிமூன் ஜோடி மாதிரி சேர்ந்தே சுத்துறீங்க
")
ரகுபதி
சுற்றி வளைக்காமல் ஒரே வார்த்தையில் சொன்னது.
“ டேய்
எனக்கு கல்யாணம் முடிவாயிடுச்சுடா”.
நான்
கேட்க நினைத்தது, ஆனால் கேட்க பயந்தது ....
"அப்போ அந்த
திவ்யா, த்ரிஷா, நயன்தாரா அவங்க
எல்லாம்"
...மனக்கேள்வி மிடறு விழுங்கி என்னால் புதைக்கப்பட்டு மலர் வளையமும்
வைக்கப்பட்ட்து
வாழ்த்துக்கள்
என்ற சம்பிரதாய வார்ததையை
உதிர்த்தேன். உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கவேண்டுமல்லவா !. ஆம்...அவன் கொடுத்த வடையில்
உப்பு சற்று தூக்கல்.
பேரென்ன,
என்ன படிக்கிறாள், எந்த ஊர் என்று
பல கேள்விகள்.
ரகுபதி
காலேஜ் படிக்கும் போது கிரிக்கெட்டில் LEG SPIN போடுவான்.
அதனாலோ என்னவோ என் கேள்விக்கு பதில்
சொல்லாமல் ஒரு GOOGLY போட்டான்.
அம்பயருக்கு
மால் வெட்டி மாட்ச் பிக்ஸிங்கில் பேட் செய்து பழகிய
எனக்கு கூக்ளி மிரட்சி அளித்தது. ஆனாலும்
மதுரைக்காரன் வீரம் இருக்கோ இல்லையோ லுங்கியை மடிச்சு கட்டி ரௌடியின்னு பாவலா காட்டித்தானே ஆகணும்.
அவன்
போட்ட கூக்ளி இதுதான்
“எனக்கு
வரப்போகிற இல்லாள் பெயரை
ஊகித்து சொல்”
!
நான்
முடியாது என்றேன் .
பின்னே
எதுக்குடா லுங்கியை மடிச்சு கட்றேன்னு உசுப்பேத்தினான்.
ஈசன்
திருவிளையாடலையே கேட்டு பழகிப் போன நமக்கு ரகுபதியின்
வெறும்விளையாடல் போதாமல் இருந்தது.
ஆலவாய்
அண்ணல் ரகுபதி திருவாய் மலர்ந்தருளி " ஆயிரம் ரூபாய் பொற்கிழி பரிசாக கொடுக்கப்படும், உமது ஊகம் சரியாக
இருந்தால் " என்று என்னுள் இருந்த தருமியை அலாரம் வைத்து, தட்டி எழுப்பினான்.
ஏதாவது
க்ளூ கிடைக்குமா என்றேன் . போடிநாயக்கனுர் பாசஞ்சர் வசனம் அவன் நுனி நாக்கு
வரை வந்தது . நான்
பதுங்கினேன்
ஒரு
க்ளூ கூட இல்லேன்னா எப்படி
என்ற என் வேண்டுகோளுக்கு செவி
சாய்த்தான். ஒரே
ஒரு முறை நீ கேட்டால்
ஆம் இல்லை என்ற ஒரு மொழி
ஒரே முறை பகரப்படும், அதற்கு
மேல் கேட்கக்கூடாது என்றான்
பாய்சன்
கொடுத்தாலே பாயசம் போல் சாப்பிடும் எனக்கு,
பாயசம் கிடைத்தது போல் இருந்தது (தனுஷ்
பட வசனம்)
நான்
கேட்ட ஒரே கேள்வி " பெண்ணின்
பெயர் பழைய காலத்து பெயரா?
ஆம் அல்லது இல்லை எனக்கூறு என்றேன் "
ஆம்,
இல்லை என்ற இரண்டே பதில்கள்
இருந்த போது outofsyllabus இல் இருந்து அண்ணன்
மூன்றாவது பதிலை கையில் எடுத்தார் .
"பெயர்
பழைய பெயர்தான் ஆனா மாடர்ன் ஆ
இருக்கும்" (இதுக்கு
க்ளு கொடுக்காமலே இருந்திருக்கலாம் என்று பல்லை நறநறத்தேன் !!!!
ரகுபதியின் ஏகப்படட குவாலிஃபிகேஷன்
பற்றி பெருமைப் பட்டு அவனை "வாணி மைந்தன் " என்பேன்
. (அவனது குவாலிஃபிகேஷன்ஸ் பற்றி தெரியாதவர்கள் தனியே என்னை அணுகவும் ). அவனுக்கு மாத்திரம் அருள் புரிந்த வாணியை கோபித்துக்
கொள்வேன் .
தமிழ்
காப்பியங்களில் சொல்வார்கள் புலவன் நாக்கில் சரஸ்வதி நர்த்தனம் ஆடுகிறாள் என்று, புலவர் பெருமக்களின் திறமையை பாராட்டி !
என்
நாவில் வாணி வாசம் செய்தது
இல்லையே என்று குறைப்பட்டு கொண்டிருக்கிறேன் . நாவில் மட்டுமல்ல என்னுடைய pincode லேயே வாணி வாசம்
செய்த்ததில்லை!
அன்றென்னவோ
தெரியவில்லை, மீனாக்ஷி கோவில் செல்லவிருந்த வாணி, விலாசம் மாறி , என் நாவில் ஒரு
அரைக்கால் வினாடி வாசம் செய்த்ததன் விளைவு, நான் ரகுபதியை பார்த்து
" பெண்
பெயர் சுமங்கலியா என்றேன் " (அவனது குலத்தில், எனக்குத் தெரிந்த சில பெண்களின் பெயர்களை
நினைவுபடுத்தி ......)
டேய்
நீ கள்ள ஆட்ட ஆடுறே
என்றான் . "யாரோ ஒனக்கு சொல்லிட்ட்ங்க"
"அவள்
பெயர் சுமங்களா" என்றான் . ஒரு வினாடி, வந்துவிட்டுப் போன சரஸ்வதி , வரப்போகிற
லக்ஷ்மி எல்லோரும் மனக்கண்ணில் தெரிந்தார்கள் .
ஆனால்
ஒரு கடைசி எழுத்து தப்பு . அதனால் பொற்கிழி கிடையாது என்று சொல்லி என்று சொல்லி இக்கால நக்கீரன் போல வில்லனானான் ….. என்மனக்கண்ணில்
இருந்த சரஸ்வதி-லக்ஷ்மிகளுக்கு திரையிட்டான்.
ஒரு
தப்பு தானே ! ஒரு ரூபாய் குறைத்து
999 கொடு என்றேன் . வடையை சாப்பிட்டுட்டு (தட்ட வச்சுட்டு
) கிளம்பு என்றான்
அந்த
நாள் முதல்
999 ரூபாய் கடன்
காரனாய் ரகுபதி
“ my best client but no phees” என்று
துயரத்தில் நான் லண்டன் திரைப்பட
வடிவேலனானேன்
சில
மாதங்கள் முன்னாள் கேட்டான். “டேய் என் மூன்றாவது
பேரனுக்கு பேர் வைக்கப் போறோம்,
"A "ல் தொடங்கி ஒரு பேர். என்னன்னு
சொல்லு பார்க்கலாம் .
மீண்டுமா
!!! என்று whatsapp யிலேயே அவனைப்
பொசுக்கினேன்
No comments:
Post a Comment