Wednesday, July 27, 2016

மதுரையை மீட்ட சுதாகர பாண்டியன் தலைநகர் கண்ட படலம்

மதுரையை மீட்ட சுதாகர பாண்டியன் தலைநகர் கண்ட படலம்

(சுதாகர்-1   -  படலம்  -2)

அதிருஷ்டம் சில நேரம் சுரைக்கப்பரைக்கே சிங்கி அடிக்கவைக்கும். சில நேரத்தில் ஒரே நேரத்தில் நாலைந்து குறுநில மன்னர்கள் பெண் கொடுக்கிறேன் என்று வரும் அளவுக்கு கூரையை பிய்த்துக் கொண்டு கொட்டும்.

சுதாகர் வேலைதேடிய படலத்தில் சற்று சோர்ந்திருந்தான், 1986 ஜனவரி  அல்லது பிப்ரவரி என்று நினைக்கிறேன். நான் டெல்லிக்கு மாற்றலாகி ஐந்து ஆறு மாதம் ஆகியிருந்தது.  தில்லி குளிரும், சாலைகளும் பழகியிருந்தது. யாரவது காசு கொடுத்தாலோ, அல்லது பூரியை சாப்பிடவோ, இடது கையை உபயோகிக்கும் அளவு முன்னேறியிருந்தேன் (அது என்னமோ நம்மூரில் தான் யாரவது காசை இடது கையால் வாங்கினால் கோபம் வருகிறது )


மற்றபடி அடக்கம் கருதி என்னுடைய பிரதாபங்களை எடுக்கவில்லை. வேறு யாராவது என்னைப் பற்றி கதைக்கும் போது, பிழிந்து காயப்போடலாம், ஆடசேபனை இல்லை .

அந்தக் காலத்தில் போனும் கிடையாது, ஒரு பேங்கனும்(அதான்பா கத்திரிக் காய்)  கிடையாது . மிஞ்சிப் போனால் ஒரு இங்கிலாண்ட் லெட்டர் (எங்க பாட்டி இன்லேண்ட் க்கு அப்படித்தான் சொல்வார்கள் ). தந்தி அடித்தால் மாரடைப்பு வரும் அபாயம் இருப்பதால் முக்கால்வாசி இங்கிலாண்ட் தான்.

நீ பெயில் ஆயிட்டே என்பது போன்ற மானபங்க காட்சிகளுக்கு, சில நல்ல மனம் கொண்டவர்கள் போஸ்ட் கார்ட்  அனுப்பி சந்தி சிரிக்க வைப்பார்கள்.

சுதாகர் நல்லவன், மாரடைப்பும் கொடுக்கவில்லை, மானபங்கப் படுத்தவுமில்லை. 

எனக்கு தில்லி டிபென்ஸ் மினிஸ்ட்ரி இல் வேலை கிடைத்திருக்கிறது. இத்தானாம் தேதி  TN  எக்ஸ்பிரஸ்ல்  வருகிறேன். நீ வந்து  என்னை ரயில்வே ஸ்டேஷன் வந்து அழைத்துப் போ. எனக்கு தங்க ஒரு ஜாகையும் ஏற்பாடு செய்து வைத்திரு ( sharing basis) என்று இன்லாண்டியிருந்தான்.

(நமது சொந்த ஊரிலிருந்து) தூரதேசத்தில் இருப்பவர்களுக்கு இது போல் யாராவது வருவதாக இருந்தால் ஒரு அருமையான உணர்வு.

கடிமணம் புரியவிருக்கும் காதலி மட்டும் இல்லை .......கடியான நன்பனாயிருந்தாலும் சந்தோஷம் தான்.

வந்தது சனி..... நான் என்ன சொல்கிறேன் என்று புரிந்திருக்கும்.😜 ஆம் வெள்ளி போய் சனிக்கிழமை வந்தது. சுதாகரும் வந்தான்.

ஏற்கனவே மாருதி சுசூகி யில் வேலை பார்க்கும் என் நண்பர் வில்வநாதன் மற்றும் இரு /ஒரு நண்பர்களுடன் கூட்டுகுடும்பவாசியாக ஏற்பாடு. லோதி கலோனியில் ( நாம் தான் காலனி என்போம்)

என்னுடைய பைக்கில் தான் அழைத்துவந்தேன் என்று நினைவு. இல்லை ஆட்டோவிலா? 🤔

மொத்தத்தில் டில்லி குளிரில் உரித்த கோழியை ஐஸ் வாட்டரில் முக்கி எடுத்ததுமாதிரி ஒரு expression உடன் சுதாகர் புதுமனை புகுந்தான்.  நண்பர்கள் அறிமுகம், குளியல் முடிந்தபிறகு,  லோதி கலோனியில் ஒரு மதராஸி ஹோட்டலில் 1030 மணி brunch .


 சாப்பிட்டு விட்டு அவனுக்குத் தேவையான  Folding cot, ரஜாய், இத்யாதி வாங்கிக் கொடுத்து விட்டு நான் நீதி கேட்டு நெடிய பயணம் மேற்கொண்டேன் 25 கிமீ யில் இருக்கும் எனது வீட்டிற்கு. 

அதற்கு முன்பு தில்லி அலுவலகத்தில் செய்ய வேண்டிய அத்தியாவசிய கடமை பற்றி பேசினோம் . தில்லி மினிஸ்ட்ரியில் வேலைக்கு சேரும் எல்லோரும் joining  ரிப்போர்ட் முடித்த பிறகு எழுதும் முதல் கடிதம், சென்னைக்கு ட்ரான்ஸபெர் விண்ணப்பம் . சொல்லி வைத்தாற்போல்  எல்லோருக்கும் குடும்பத்தில் யாருக்காவது வியாதி, தாய்க்கு ஒரே மகன் என்ற பல ஆகி வந்த காரணங்களுள் ஒன்றை புனைந்து விண்ணப்பிப்பார்கள். சுதாகரும் செய்வதாக முடிவாயிற்று .

அடுத்த நாள் என் பிரம்மச்சாரி கடமைகளுள் மும்மரமானேன் ( வார துணிமணிகளை துவைப்பது, வீட்டுக்கு கடிதம் எழுதுவது etc . etc  என்பதை உங்கள் கற்பனைக்கேற்ப நிரப்பிக் கொள்ளவும் )

திங்கள் காலை அலுவலக வேலைகளில் மூழ்கினேன். officeல் இருந்து லோதி காலனி வழியாகவும் வீட்டுக்கு செல்லலாம் என்பதால் சுதாகரை பார்த்துச் செல்லலாம் என்று, வண்டியை மாலை லோதி காலனிக்கு விட்டேன்.

வீடு பூட்டி இருந்தது.

மணி ஏழு இருக்கும். நல்ல நாளிலேயே அரசுப்பணியில் வேலை இருக்காது. நம்மவர் நிச்சயம் overtime  பார்க்க மாட்டார். ஒரு வேலை வழி கிழி தெரியாம DB  ரோடு தவறி போய்ட்டானோ  என்று சற்று கவலையானேன். (DB  ரோடு பற்றி தெரியாதவர்கள் கூகிளலாம்.😍😛👯💃)

ஆதங்கத்தில், அருகில் இருக்கும் ஒரு முதியவரிடம் கேட்டேன். அவர் சொன்ன பதில் சற்று கவலை அளித்தது. அவர் சொன்னது " அந்த புது மதராஸி பையன் வந்த நாளோ அடுத்த நாளோ திடீர் என்று மதராஸ் திரும்பி விட்டான் ".
ஒண்ட வந்த பேயை ஊர் பேய்கள் ராக்கிங் செய்திருக்குமோ அச்ச  வினா !


என் நண்பர்களையும் கேட்க முடியவில்லை. யார் வீட்டிலும் போன் கிடையாது. மொபைல் கண்டுபிடிக்கப்பட்டிருக்கவில்லை. மாருதி வில்வநாதன் ஷிப்ட் வேலை செய்பவர், வர அதிகாலை ஆகிவிடும்.  கவலையோடு வீட்டுக்கு போனேன்.

அடுத்த நாள் வில்வநாதனை பாக்டரி தொலைபேசியில் கடும் முயற்சிக்கு பின் பிடித்தேன். சுதாகருக்கு வேறு வேலை மதுரையிலேயே கிடைத்ததாகவும் , டிபன்ஸ் அலுவலக வேலையில் சேராமலேயே திரும்பி விட்டதாகவும் சொன்னார்.

நான்கு நாட்களுக்கு பிறகு சுதாகரின் இங்கிலாந்து கடிதம். ஓரியண்டல் இன்சூரன்ஸ் வேலை கிடைத்ததினால் திரும்பி விட்டதாக சொன்னதாக நினைவு

ஆங்கிலத்தில் " reward for good work is more work " என்பதுபோல அவனுக்கு வாங்கிய புதுக் கட்டில், ரஜாய் போன்ற சமாச்சாரங்களை விற்று விட்டு பணம் அனுப்ப (அன்புடன்) சொன்னான்.

சொன்ன படி அவற்றையெல்லாம் விற்றேன் ஆனால் பணம் அனுப்பினேனா என்று சுதாகர் ஐயா தான் சொல்லவேண்டும்.

மொத்தத்தில் 12+36+36+12 = 96 +4  மணி வெயிட்டிங் என்று 100 மணி நேரம் பயணித்து  10 மணி நேரம் தில்லியில் வசித்தது சுதாகராகத்தான் இருக்கும் என்று நினைக்கிறேன்.

பழங் கதை முழுதும் நினைவில்லை. சுதாகர், கதையை இட்டு நிரப்பவும்.


(பின்குறிப்பு: பழிதீர்த்தபடலம் என்ற பெயரில் சுதாகர் ஏதாவது கதை சொல்லுவானோ என்று பயமாக இருக்கிறது)

கல்யாணப் பரிசு


கல்யாணப் பரிசு


1985 ஜூலை 17….. சுபயோகம் சுபதினம் கூடிய தினத்தன்று,   அன்று பிறந்த குழந்தைக்கு அன்றே கல்யாணம். 

இந்த அநியாயத்தை கேட்பார் இல்லையா ?

இருந்தோமே ...(கை) தட்டிக் கேட்க

அந்தக் குழந்தையே ரகுபதிதான் . பிறந்த நாள் அன்றே திருமண நாளும் அமையப் பெற்ற அதிருஷ்டசாலி.

எத்தனை நெருங்கிய தோழன் கல்யாணமே இருந்தாலும், மதுரையிலிருந்து அவ்வளவு தூரம் காசு செலவழித்து  மெட்ராஸுக்கு எல்லாம் கல்யாணத்துக்கு அனுப்ப மாட்டார்கள்!  காலேஜ் முடித்திருந்த நேரம், வேலையில்லா பட்டதாரி (அதுவும் இல்லை, பட்டம் தயாரிப்பில்).

ஏதோ நான் செய்த அதிருஷ்டம் மெட்ராஸில் ஒரு வேலைக்கு நேர்முகத்தேர்வு அதே வாரத்தில். எனவே மதராஸில் இருக்கும் வாய்ப்பு.

தாம்பரத்தில் இருக்கும் அக்கா வீட்டில் வாசம்.  கல்யாணம் ராயப்பேட்டை ஹேமமாலினி கல்யாண மண்டபத்தில். 

ஹேமமாலினியில் கல்யாணம் என்பதை ஒரு வாரமாக எல்லோரிடமும் பெருமையாகச் சொல்லிக்கொண்டேன். அப்படியாவது நம்மை நாலு பேர் மதிக்கட்டும் என்று.

பாருங்கள் அந்த தகவலை சொன்னேன்,  ஆனால் தபால்காரர் என்னை ஏன் ஒரு மாதிரியாக முறைத்தார்?  

தெரியவில்லை....பொறாமையாக இருக்குமோ !

கல்யாணம்னா வெறும் கையோட போக முடியுமா !  பணம்  கையிருப்பு மதுரை கல்லூரியில் reagent  shortage  போல பரிதாபமாக இருந்தது

அக்காவிடம் தான் கேட்க வேண்டும் . நான் என் வீட்டுக்கு கடைசி பையன், அக்கா முதல் குழந்தை, எங்கள் இருவருக்கும் 17 வயசு வித்தியாசம். கிட்டத்தட்ட அம்மா போல.

அக்கா போல மிரட்டல் அம்மா போல மறுப்பு என்று இரண்டும் சேர்ந்து ஒரு ஹைபிரிட். மொத்தத்தில் நம்ம பாடு திண்டாட்டம்.

கிப்ட் வாங்க என்று கேட்டால், பேசாமல் நான் ஒரு வாழ்த்து தந்தி அனுப்பி விடுகிறேன்  என்று மடக்குவார் (போஸ்ட் ஆபீஸ்  ஆச்சே ). ஆயிரம் பொய் சொல்லி ஒரு கல்யாணம் அட்டெண்ட் பண்ணுன்னு பெரியவங்க தெரியாமலா சொல்லியிருக்காங்க என்று, காரணம் புனையத்தொடங்கினேன்.

அக்கா, நான் இன்னும் ஒரு 30-40 நாள் இங்கே தான் இருக்கப்போறேன், மின்ரயிலில் மாத பாஸ் வாங்கிக் கொள்கிறேன்,. ஆனால் கொஞ்சம் பணம் குறைகிறது என்றேன்.

எவ்வளவு குறைகிறது ?

30 ரூபாய் !

ஏண்டா  தாம்பரம் பீச் பாஸ் விலையே 28 ரூபாய் தானே ! சரி சரி 30 ரூபாய் தருகிறேன், பாக்கி பணத்தை (ஹூம் 2 ரூபாய் என்பது பணமாம் !) ஊதாரித்தனமாக செலவு செய்யாமல் பத்திரமாக வைத்துக் கொள்.

என அக்கா, தான்  தாராளம் என தனக்குத் தானே ஒரு ஷொட்டு கொடுத்துக் கொண்டு ஆபிஸ் கிளம்பினாள்.

பெரிய பிள்ளை செல்லப் பிள்ளை சின்னப்பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை என்று முருகன் சொன்னது நினைவுக்கு வந்தது. வண்டு முருகன் அல்ல, வாண்டு முருகன், அப்பன் பழனி முருகன்,  திருவிளையாடலில் சொன்னது.

என்னிடம் இருந்த +அக்காவிடம் இருந்து தேற்றிய, எல்லாவற்றையும் சேர்த்ததில் கணிசமான தொகை தேறியது. அந்தக் கணிசமான தொகை ரூ 50/-.

இளம்  வயதுக்குரிய சாமுத்ரிகா லக்ஷணம் என்னவென்றால்,எல்லா வேலையையும் கடைசி நேரத்தில் செய்வது.

திங்கள் காலை 9 மணி சுமாருக்கு கல்யாணம் என்று நினைக்கிறேன்.

காலை தாம்பரத்தில் இருந்து கல்யாணத்துக்கு கிளம்பும் போது தான் நினைவுக்கு வந்தது, கிப்ட் வாங்காதது. பரவாயில்லை, மண்டபம் பக்கத்தில் ஏதாவது கடை இல்லாமலா போகும் என்று ஒரு அசட்டு தைரியம் !

அக்கா வீட்டில் இருந்து ரயிலடிக்கு ஒரு 1.5 கிமீ நடை, நடைமேடையில் ஒரு 0.5 கிமீ நடை, தாம்பரத்தில் இருந்து ரயில் மாம்பலத்துக்கு. அங்கிருந்து காரடி (அதாங்க பஸ் ஸ்டாண்ட் ) 0.5 கிமீ. அங்கிருந்து மவுண்ட் ரோடு சபைர் பஸ், அங்கிருந்து 1.0 கிமீ நடை.  தாம்பரத்தில் இருந்து நடந்து வந்திருந்தாலே சீக்கிரம் வந்திருக்கலாம் போல் .

நான் செய்த பூர்வஜென்ம புண்ணியம் மண்டபத்துக்கு 0.5 கிமீ யிலேயே ஒரு காதி பவன். நம்ம பட்ஜெட்டுக்கு அந்த இடம் தான் சரி. இது ஆண்டவன் போட்ட வரம் என்று பரிசுப் பொருள் வாங்க தயாரானேன். ஆண்கள் கடைக்குப் போனால் அரை நொடியில் சாமான் வாங்கி விடுவார்களல்லவா. பியர் வாங்குமுன்பே எந்த கம்பெனி சரக்கு, என்ன பிராண்ட் என திடடமிடல் ஆண்களின் கை வந்த கலை !

பேப்பர் மேஷில் செய்யப்பட்ட கீதோபதேசம் பொம்மை (ரகுபதிக்கும் அவன் பழைய நண்பி கீதாவை நினைவு படுத்தும் என்ற நல்ல எண்ணத்தில் ) முடிவு செய்யப்பட்டது

விலை எவ்வளவு என்றேன். 45 ரூபாய் என்றார் கடைக்காரர் உணர்ச்சியற்றவராய்.

நாஆஆஆஆற்பத்து  ஆயின்ந்தஆஆஆ ? ........... நீட்டினேன். பார்த்துச்  விலை சொல்லுங்க என பதுங்கினேன் .

ஏம்பா இது என்ன டவுன் ஹால் ரோடு வியாபாரமா ? கூட்டி குறைச்சு சொல்ல  என கடுகடுத்தார் காதி கிராப்ட் கடைக்காரர்.

நீட்டினேன் இம்முறை பணத்தை. 

கிப்ட் ராப்  இலவசமென்றதும் தாம்பரம் வரைபோன உயிர் திரும்பிவந்தது. உடலோடு உயிரை இணைத்து, கிப்ட் அடடையில்  நீநீநீநீண்ட எண்ட பெயரையும் இணைத்து  மண்டபம்  திரும்ப எத்தனித்தேன்.

கீதோபதேசம் பாண்டவரான பார்த்திபனுக்கு , அது என் MBA  நண்பன் பார்த்திபனுக்கு  மூக்கில் வியர்த்திருக்கும் போல.

ஆர்க்(இந்த அ.ரா.கி.தான்), பரிசு வாங்க மறந்து விடடேன், ரகுபதி தாலிக்கயிறோட தயாராயிட்டேன், அவனை தாளிக்க அவன் மனைவியும் தயாராயிட்டா.  நீ தான் பரிசு வாங்கிட்டயே அதுல 50% நான் தரேன், நாம சேர்ந்து கொடுக்கலாம் என வலை விரித்தான் . 

பரிசுபொருளில் ஆர்க் அண்ட் பார்த்திபன் பதிவாயிற்று . பார்த்திபன் ரொம்ப நல்லவன் அப்பாவி பாதி பணம் கரெக்ட்டா கொடுத்திடுவான்என தருமி போல மனதுக்குள் புலம்பி தேற்றிக்கொண்டேன்.  ஆனா அவன் அப்பாவி இல்லை அப் பாவி என்று  "பிரித்துப் " பார்க்க இப்போது தான் முதிர்ச்சி வந்திருக்கிறது.

பார்த்திபனிடம் சேர்ந்து இருவரானோம்

கீதோபதேசம் பார்த்திபனை இழுத்தது போல் கிருஷ்ணனின் முன்ஜென்மமான ராமனையும் தட்டி எழுப்பியது. எங்கிருந்தோ வந்தான் இன்னொரு MBA  நண்பன் ராம் குமார் . 10 மணி வகுப்புக்கு 11 மணிக்கு தலைசீவ தொடங்கும் ராம்குமார் கல்யாண வீட்டிற்கு  லேட் ஆக வந்திருப்பான் என்று நான் சொல்ல தேவையில்லை . தலையை சொரிந்தான். 50% தருகிறேன் என் பெயரை  சேர்த்துக் கொள் என்றான்.

பரவாயில்லை என்று என்னை நானே தேற்றிக் கொண்டேன் . இவன் 50% ….அவன் 50%, நமக்குச்  செலவில்லை என புளகாங்கிதம் அடைந்தேன் .

ராம நாமம்.... ராம நாமம்.... என அடிக்கடி சொல்வார்கள் அதன் அர்த்தம் அப்போ புரியவில்லை !

ராம் குமாருடன் சேர்ந்து மூவரானோம் .

பணம் ....அது வரும் (நம்பினேன் )

அரை கிமீ நடப்பதற்குள் சென்னையில் 50 ஆட்டோ காலை சுற்றும் என்பார்கள். அது போல் மண்டபத்திற்குள் வழியில் உள்ள அரை கிமீ க்குள் என் எல்லா நண்பர்களையும் பார்த்தேன். அதெப்படி சொல்லி வைத்தாற்போல் எல்லாருக்கும் ஒரே ஐடியா . என் பெயரை சேர் ! என் பெயரை சேர் ! என ஒரே மாதிரியான  விண்ணப்பம். அவர்களை சொல்லி குற்றம் இல்லாய். அசைன்மென்ட் எழுதி வந்தவர்களாயிற்றே !

ஒரு 3 CM X  4 CM  அட்டையில்  10 பெயர், 9 AND .

ARK and Parthiban and Ramkumar Singh and Kishore Kumar and ABC and XYZ and etc and etc

ஆனால் ஒருவரும் பணம் தருவதாகத் தெரியவில்லை . வார்த்தைக்கு வார்த்தை என்னை மாப்பிள்ளை என்று பரிவோடு அழைத்தார்கள் (ஆட்டுக்கு மாலை + மஞ்சள் தண்ணீர் ஊற்றுவது போல்)

ஒன்றரை அணா பரிசுக்கு ஒன்பது பேர் ஏதோ சவப்பெட்டி தூக்குவது போல தூக்கி ரகுபதி கையில் கொடுத்தோம். அவன் சொந்தக் காரர்கள் பார்த்திருப்பார்கள். இத்தனை பேர் சேர்ந்து கொடுத்தனால் ஏதாவது லம்ப்பா இருக்கும் என்று . பாவம் அவர்கள்

பெரிய வீட்டுக் கல்யாணம் MP , MLA, அமைச்சர்கள், திரைப் படக் கலைஞர்கள் யாராவது வந்திருப்பார்கள் என்ற நினைப்பில் இருந்த எங்களுக்கு, வந்த விருந்தினர்கள் யாரோ நடிகை என்று பேசியது கேட்டது.  விடுவோமா !

ரகுவை மறந்தோம் ! டைனிங் அறைக்கு விரைந்தோம். மற்றவர்களுக்கு எந்த ஒரு நடிகையும் தட்டுப் படவில்லை . ஆனால்  எனக்கு பொறி தட்டியது.  வருபவர்களை பார்க்க ஒரு வாகான இடத்தை தேடினோம். கடைசி வரிசை, சுவரை ஒட்டி இடம் பிடித்தோம். நடிகை என் கண்களுக்கு தெரிந்தாள். மற்றவர்கள் எவருக்கும் தென்படவில்லை.
ஏமாற்றத்துடன் நண்பர்கள் கைகழுவி வெளியில் வந்தனர்.

அவர்களிடம் கேட்டேன் ...என்னப்பா ACTRESS மீனாவை பார்த்தீர்களா ? (அன்றைய காலத்தில்   பிரபல நடிகை மீனா வந்திருக்கவில்லை )

குழம்பிய நண்பர்கள், மீண்டும் உள்ளே நுழைந்தனர். தட்டுப்படவில்லையே என்றனர். நான் மீண்டும் உள்ளே நுழைந்து அவர்களுக்கு ரகுபதியின் உறவினரான நடிகை மீனா(ட்சி) வை அவர்களுக்கு காட்டினேன் .

எல்லோரும் என்னை மொத்த கை ஓங்கினார்.  அந்த நடிகை படம்








அவர் மாயாபஜார் திரைப்படத்தில் எம் எல் வசந்தகுமாரி பாடிய ( தேஷ் ராக பாடல்)  "வர்தில்லு மா தல்லி வர்த்தில்லவம்மா ! சின்னாரி சசிரேக வர்த்தில்லவம்மா"/  “வாழ்க நீ வளமுடன் வாழ்க நீ அம்மா, வத்சலா நீடூடி வாழ்க நீ அம்மா “என்ற பாட்டில் வரும் 67 கௌரவிகளுள் ஒரு கௌரவியாய் தோன்றியவர் !  மணல் கயிறு படத்தில் கூட நடித்திருந்தார்.

நடிகையை பார்க்க முடியாத ஏமாற்றத்துடன் ஒவ்வொருவராக பிய்த்துக் கொண்டனர். 

அப்போ எனக்கு வரவேண்டிய பணம் ? பணமா !?!?!?   என் நெற்றியின் அகலம் பற்றித்தான் உங்களுக்கு தெரியுமே !

சரி. ஒருத்தனும் பணம் தர தயாராக இல்லை, ஆபத்பாந்தவனாக மாப்பிள்ளை ரகுபதியிடமே முறையிடலாம் என தோன்றியது.

பிறகுதான் நினைவு வந்தது, அவனே 999 ரூபாய் கடன்காரன் என்று !

பாக்கி பணத்தை இன்று கேட்கலாம் என்றால்…………

ஒருவன் இந்த உலகத்திலேயே இல்லை.

ஒருவன்  IAS , customs ல் கலெக்டர், ஏதாவது கஞ்சா கேஸ்ல உள்ள போட்ருவான்,  
இன்னொருவன்  IPS , ஆந்திரா டிஜிபி ஆக இருக்கிறான், எப்போ பார்த்தாலும் அரை ஞாண் கயிற்றில் ரிவால்வரை கட்டிக்கொண்டு, எனகொண்டெர் என்ற வார்த்தை ஏதோ "வந்தே மாதரம்" என்ற தாரக மந்திரம் போல சொல்லிக் கொண்டு  அலைகிறான். 

இவர்களிடம் இருந்து நான் வசூலித்து !!!  ஹூஹூஹூம்ம் ம்  ம்!!!!














Tuesday, July 26, 2016

God, Incarnations and Fate



When Lord takes the human form he conforms to the rules and regulations applicable to the humans of that period. He is no exception to worldly troubles.

He is the one who defines the rules and being a stickler to rules of the game, he does not want to exempt himself.

It is said that on completing the Krishna Avathara he asked a question to the Rishis around him.

" I am the custodian of this world and by that logic when i knew about Kuchela's( sudama)sufferings, instead of trying to spontaneously help him, asked him what he  has brought for me and I was not satisfied until Kuchela gave him the bag of Pound-rice.?"

To this the Rishis explained ..

having been born a human ( however enlightened one could be) you are not exempt from the attitudes and peculiarities of a human.

You were born in the star of Rohini in the Rishabha rasi which is the Exaltation sign of Moon. Hence moonly characteristics will be dominant. As you know Moon draws its light from Sun, you will be naturally inclined to take from others. That is one reason why instantaneously you sought something from Kuchela before your super-divine qualities took over and you eventually helped him.

The same trait drove you to ask Karna to donate the net result of all his Good-deeds (Punya) before he breathes his last.

Bottomline is..no one is exempt from the troubles of a human birth, not even God.

Skanda, Vinayaka, Mango and Mathematics


Episode 2


Religion and Mathematics   

The popular story of Lord Murugha (Subramanya/ Skanda) in direct competition with his brother Lord Ganesha, seeking the Divine Mango from his parents Siva and Parvathi  and the parents directing the children to circumambulate the world is well known to most of us. 

The Prize for going around the world first is the Divine Mango, declares Lord Shiva. Lord Skanda uses his divine vehicle (Peacock ) and jets across the world, thinking that it will be a cake-walk for him, as his big-made brother in a tinier vehicle Mouse(Mooshika) is going to take years to go around the world.

Ganesha, the writer (not author) of Mahabharatha, is not new to twists in stories and decides to place a “twist” in this episode. Ganesha goes around the parents and claims that Parents are synonymous with “The World), hence, he is the winner and claims the Divine Mango. 

Siva pretends an innocent face.

Skanda cries foul and alleges match-fixing, ably supported by die-hard Skanda devotees like “yours sincerely”.

Is this verdict right?

Mathematics has the answer.

A bit of introduction to astronomy , to start with.

Our Solar system and the milky way in which our solar system is placed are  tiny drops in the the Universe.

Distances between cities are measured in kilometres, between two nearby planets in light years ( One light year = 9.4607×(10 raised to ^ 12 km)), distant stars by Astronomical units (AU)

……and when the distances involve celestial objects beyond easy comprehension, they simply switch over to “Angular Distances” OR “Angular Separation”. 

 In layman terms very vast distances are measured in Angles .

Let us now come back to our “Mango Story”.

What is the distance covered by Skanda to circumbulate the Universe??

…..trillions of light years and distances beyond comprehension.

 In other words 360 degrees.

What is the distance covered by Ganesh to circumbulate his parents?

                ……may be 50 metres.

No….No…No… when we are talking in comparative terms, we should be using the same yardstick, applicable to both the routes.
                ……correction ….360 degrees.

Does it not go to prove that Skanda and Ganesha covered the same distance?

……………….Yes

Does Ganesha not deserve the Divine Mango ? 

………….Yes…Yes…Yes

(two lone voices are heard in the background

…………One that of a die-hard Murugha fan: This is not Not acceptable

………..Another voice that of Lord Murugha…..I am Off to Palani…… Elder son is always pet to the parents, last child is ever an orphan in the hands of a Passerby…. 

(பெரிய பிள்ளை செல்லப் பிள்ளை .....சின்னப் பிள்ளை எடுப்பார் கைப்பிள்ளை)

Thank Lord Shiva, that in the bargain he taught us a simple mathematics principle that the sum of all angles in a circle is 360, irrespective of the size (radius) of the circle 

Sanskit and Natural Numbers



Sanskrit and Mathematics


ஓம் பூர்ணமத: பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணமுதச்யதே
பூர்ணஸ்ய பூர்ணமாதாய பூர்ணமேவாவசிஷ்யதே
ஓம். அது முழுமை (பூர்ணம்). இதுவும் முழுமை. முழுமையிருந்து முழுமை தோன்றியுள்ளது. முழுமை யிலிருந்து முழுமையை எடுத்தும் முழுமையே எஞ்சி நிற்கிறது.
An interesting explanation to this Sloka was given the HoD of Mathematics (PG) Department Prof Ramakrishnan of Madura College.

We, the final year students of Mathematics& Chemistry had assembled for our Farewell function. One of the students (Late) Sankara Subramanian rose up and recited the above sloka. Once he was done, Prof Ramakrishnan asked the student whether he knows the meaning. I am not sure about the response from the student. Prof Ramakrishnan said this sloka is nothing but an epitome of the Infinite Numbers and series. He elaborated:

  •           What is the sum of all natural numbers: 1+2+3….+…. ?

    •                      Answer: Infinity

  •           What is the sum of the series of odd numbers 1+3+5+7…..+….?

    •                      Answer : Infinity

  •          From the series of natural numbers take out all odd numbers What are you left with? 

    •                      We are left with 2+4+6+8……..

  •        What is the sum of this series?

    •                     Answer: Infinity

That means from Infinity (POORNA) you take out Infinity (POORNA) you are left with Infinity ( POORNA)

Does this not communicate the meaning of the Sloka, he asked?

Needless to say, we were dumbstruck




நேர்முகத்தேர்வில் மானபங்கப்பட்ட படலம்

சாரி(Chari ) ஐயா ! நீங்க சொன்னது சரியய்யா !

சுதாகர்  - 1           படலம் -1


வைகைல தண்ணி ஓடுதோ இல்லையோ, மதுரக்கராங்யளுக்குள்ள ஒரு  குசும்பு ஓடும். அப்படிப்பட்ட குசும்பு பிடிச்ச ஆளு தான் நம்ம சுதாகர்(1626). என்ன பேசுறான்னு யாருக்கும் தெரியாது ஆனா பேசக்கூடாததை மட்டும் பேசுவான்.  நெருங்கிப் பழகின சுப்பிரமணியபுரம் சண்டியர்களுக்கு மாத்திரம் தெரியும்.

அவனைப் பத்தி ஒரு சிறுகதை இருக்கிறது. பல வருடம் கழித்து நண்பர்கள் சேர்ந்து இருக்கிறோமே, அவனை கேட்காமல்  எழுதினா சபை மரியாதையாக இருக்காதே என்று பார்த்தேன்.  அவனை ஆடு ஆக்குகிறோமே, ஆடு தலையை ஆட்டும் 'பொறவு' வெட்டலாம் என்று காத்திருந்தால், ஆடு ஜோக் "forward " செய்கிறது ஆனால் தலையை ஆடடமாட்டேன் என்கிறது.

தலையை ஆடடாவிட்டாலென்ன  நாமே மஞ்சள்தண்ணீர் ஊற்றி தலையை ஆடடவைத்து வெட்டுவதில்லையா  என்று சமாதானம் செய்துகொண்டு இந்த கதையை  வெட்டுகிறேன் ......எழுதுகிறேன் (violence  அதிகமாகிக்கொண்டு போகிறதோ ?) போவோம் !

புதிதாக வந்திருக்கும் நண்பர்களுக்கு ஒரு flash  back .


1981 மூன்றாவது செமெஸ்டர்……..
நமக்கு கிடைத்திருந்த Prof .சாரி ஒரு அற்புதமான ஆசிரியர். 

சுஜாதா, ஓம்  பூரி பற்றி  சொல்வது போல “உணர்ச்சியை காட்டாத ஒரு இந்திய மனிதர்”. அவர் சிரித்து நான் பார்த்ததில்லை ...கோபப்பட்டும் பார்த்ததில்லை.

தன்னம்பிக்கையின் உச்ச கட்டம் அவர்.

 "நான் சொல்லிகுடுக்கற கணக்குத்தான் யூனிவர்சிட்டி பரிக்‌ஷைல வரும், தேவையில்லாமல் எல்லாத்தயும் படிச்சு நேரத்த வீணடிக்காதே " என்பார்.

 நம் கல்லூரியில் ஆறு வருடம் முன் படித்த என் அண்ணன் கூட இதே வசனத்தை அவரிடம் இருந்து கேட்டதாகச் சொல்லுவார்.

அவர் ஒரு நாள் புள்ளியியல் வகுப்பு அசைன்மென்ட் விடைத்தாட்களோடு வந்தார்.

 (உடனே நான் போன கதையில் சொன்ன inorganic  கெமிஸ்ட்ரி S நடராஜனைப் பற்றி நினைக்கவேண்டாம். புள்ளி வைக்கத் தெரிந்தவரெல்லாம் புள்ளியியல் வாத்தியார் இல்லை. வேலைக்கார முனியம்மா கூட புள்ளி வைத்து கோலம் போடுகிறாள்  நடராஜன்  புள்ளியியல் இல்லை (அலங்)கோலவியல் )


சிரிப்போ கோபமோ இல்லாமல் ஓம் பூரி (அதாவது Prof  )……….. "ஏம்பா அசைன்மெண்ட்ன்னாலே காப்பி  அடிக்கிறதுதான் , தெரியும் ...ஆன இங்க ஒருத்தன்  roll  நம்பர்ஐயும் சேத்து் காப்பி அடிச்சுருக்கான் , நான் யாருக்குன்னு மார்க் போடுவேன்" என்று அங்கலாய்த்துக் கொண்டார்.  

நம்முள் யாரோ ஒருவர் அசடு வழிந்தார். அவரது அதிர்ஷ்டம் யாரென்று என் நினைவுக்கு வரவில்லை (சே ! ஒரு ஆடு தப்பித்து விட்டதே !)

இப்போ fast  forward .....1983, ஆறாவது செமெஸ்டர் முடிந்தது. நாமெல்லாம் வேலை (வெட்டி) இல்லா படடதாரிகள்.

சுப்ரமணியபுரத்தில் எங்கள் வீட்டில் இருந்தபடி நான் கப்பலூரில் இருந்த ஒரு கெமிக்கல் கம்பெனிக்கு  வேலைக்கு மனுக்கொட்டிக்கொண்டிருந்தேன் (அதாம்பா மெனக்கெடுவது போல )..........  ....எனக்குத் தெரிந்த சைதாப்பேட்டை வண்ணாந்துறை இங்கிலீஷில் ....

இப்போ தான் ஹீரோ என்ட்ரி ....சுதாகர் வருகை.  

Ph .D  முடித்த்துவிட்டு தான் ஓய்வேன் என்றபடி நான் பில்டப் கொடுத்திருந்த காலம். அவன் தலையை பார்த்ததும் வேலைக்கான விண்ணப்பத்தை மறைத்தேன் .

ஹாஸ்டெல் மாணவர்கள் ரூமுக்குப் போனால் நம்மவர்கள் கண் முன்னாள் இருக்கும் "மாரிசன் & பாய்ட் " புத்தகத்தை விட்டுவிட்டு பரண் மேல் ஒளிந்திருக்கும் சரோஜா தேவி புத்தகத்தை சரியாக கண்டெடுத்து போல், என் வேலை மனுவை கண்டுபிடித்து விட்டான் (அவனுக்கு மோப்ப சக்தி அதிகம், ரொம்ப நன்றியுள்ளவன் )

நான் என்ன சொல்ல வருகிறேன் என்று புரிந்திருக்குமே  (கரெக்ட் உங்களுக்கும் மோப்ப சக்தி அதிகம் தான்)

டேய், எனக்கும் அந்த வேலைக்கு அப்ளை பண்ணனும் நீயே எழுதிக் கொடுத்து விடு என்றான் .

தன்னுடைய ஆங்கிலப் புலமை அதிகமில்லை என்றான் . என் ஆங்கிலம் ஷேக்ஸ்பியருக்கு நிகரானது என்று என்னை தூக்கவும், பாழாய் போன அந்த புகழ்ச்சியிலே நான் கொஞ்சம் கீழே இறங்கிவந்தேன் .

 “போனால் போகிறது, என் அப்பிளிகேஷனைப் பார்த்தது எழுதிக் கொள்” என்று சொல்லி சற்று கருணா ரசம் ஊற்றினேன்.

சுதாகர் நில் ! நில்!.. எழுதுவதற்கு முன் அந்த ஓம் புரியை நினைவுபடுத்திக்கொள் (அதாம்பா Prof  சாரி) . அந்த வகுப்புல யாரோ செய்தது போல் உன் மனுவில்  என் பெயரை எழுதிவிடாதே என்றேன். …………..

ஹாஸ்ய ரசம் ஊற்றிய எனக்கு குனிந்து தான் "பாத"ரசத்தை காண்பித்தான் !

 கொஞ்சம் இடம் குடுத்தா மடத்தப் பிடிப்பீங்களே, நான் என்ன அவ்வளவு மாங்காமடையனா, என்று கடுப்படித்தான்.


ஊர் மேய வந்த இடத்திலே, என் வீட்டு பேப்பர் வாங்கி ( நானே எங்கக்கா உபயத்துல கலக்டர் ஆபிஸ்ல சுட்டது ), என் பேனாவை வாங்கி, என் மனுவைக் காப்பி அடிச்சு, தான் விண்ணப்பம் போட்ட சாதனையை, தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயில்ல unreserved பெட்டில, துண்டு போட்டு இடம் பிடிச்சவன் சாதனை மாதிரி தலை ஆகாயத்தை பார்க்க, பெருமையுடன்கிளம்பிப் போனான்.

போறதுக்கு முன்னாடி ஸ்டாம்ப் ஒட்டி தபால் பெட்டில போடுறதை பத்தியும் பேசியிருந்தோம்.

அந்த கம்பெனிக்கு போதாத வேளை எங்கள் இருவரையும் நேர்முகத்தேர்வுக்கு அழைத்தார்கள். .

 நாங்களும் நேரான முகத்தோடு போனோம்.    விளக்குத்தூண் பக்கத்தில் ஒரு கல்லு சந்து . மொத்த அலுவலகமே 300 சதுரஅடிதான். எங்களை போல் ஒரு 10 பேர் வந்திருந்தார்கள். நாங்களெல்லோரும் வெயிட்டிங் ரூமில் காத்திருந்தோம் (கல்லு சந்துதான்  )

சுதாகர் சொன்னான் “உன்னை கூப்பிட்டது ஆச்சரியம் இல்லடா . என்னை கூப்பிட்டது தான் ஆச்சரியம்”  என்று என் ஈகோவில் அக்மார்க் நெய் ஊற்றினான்.

எங்களிருவரையும் கூப்பிட்டது ஆச்சரியம் இல்லை "ஆப்பு சரித்திரம் " என்பது விரைவில் விளங்கியது

நான் செய்த பூர்வ ஜென்ம புண்ணியம் என்னை முதலில் கூப்பிட்டனுப்பினார்கள். போனேன். கேள்வி கேட்டார்கள் பதில் சொன்னேன்.  இன்டெர்வியூ முடிந்தபிறகு தான் புரிந்தது, நான் சொன்ன எல்லா சரியான பதில்களுக்கும் அவர்கள் தவறான கேள்வி கேட்டிருக்கிறார்கள் என்று .

(திருவள்ளுவர் என்று நான் பதில் சொன்ன கேள்வியை தவறாக கம்ப ராமாயணம் எழுதியது யார் என்று கேட்டிருந்தார்கள். திருக்குறள் எழுதியவர் யார் என்று சரியாகக் கேட்டிருக்க வேண்டாமோ?)

  கூடவே கொசுறாக “ சுதாகர் யார்?” என்றார்கள்.  எனக்குள் ஏதோ நெருடியது .

 அடுத்து சுதாகரை அழைத்தார்கள்

சுதாகரிடம் பல கேள்விகள் கேட்டார்கள். அவற்றுள்  இரண்டு கேள்விகளுடன் இந்தக் கதையை முடிக்கிறேன். கேள்விக்கு பதில் உங்களுக்கும் தெரிந்திருக்கும்.  பதில் தெரியவில்லையென்றால் நீங்களும் பெயில் !

1)  வேலைக்கு மனுப் போட்டால் "On IGS " (இந்திய அரச பணிக்கு மாத்திரம் ) என்ற தபால்தலையை உபயோகப் படுத்தக் கூடாது என்று உங்களுக்குத் தெரியாதா ? (அவர்களுக்கு சுமார் 3 ரூபாய் தண்டம் )

2)   உங்களுக்கும் உங்களுக்கு முன்னாள் வந்த அ.ரா. கி.க்கும் எப்படி ஒரே "DateofBirth " நீங்கள் இருவரும் இரட்டைப் பிறவிகளா?

அறிவினா, அறியா வினா , ஐய வினா, கொளல்  வினா , கொடை வினா ஏவல்  வினா என்ற ஆறு வகைவினாக்களில் அடங்காமல் இது  (வேலை) கொடா வினா என்று மாத்திரம் புரிந்தது


ஐயா Prof. வேங்கடாச்சாரி!  தாங்கள் ஒரு தீர்க்கதரிசி ஐயா !

999 ரூபாய் பந்தம்




1984 கடைசி சில மாதங்களென நினைக்கிறேன். தேதி சரியாக நினைவில்லை. ரகுபதி வீட்டிற்கு சென்றிருந்தேன், ஏதோ முக்கியமாக ஒரு தகவலென்றிருந்தான்.

பக்ஷி எங்கோ சிக்கிவிட்டது என்று என்னுள் இருந்த பட்சி சொன்னது (சுஜாதா அடிக்கடி சொல்வது.... எழுத்தாளர் சுஜாதா தானப்பா ! கற்பனை குதிரையை தட்டவேண்டாம் )

சாதாரணமாக பேசி முடித்து (திண்ணையோடுஅனுப்புவதோடு அந்தக்கால நண்பர்கள் சங்காத்தியம் இருந்த காலகட்டத்தில், எனக்கு ரகசியமா (கருப்பு நிற பேக்கலைட் தொலைபேசி இருக்கும்)ஒரு சிறிய அறையில் உட்க்காரவைத்து  சாப்பிட ஏதோ கொடுத்ததும் பயம் தொற்றிக் கொண்டது.

போடிநாயக்கனுர் பாசஞ்சரில் அண்ணன் பேசிய வசனம் வேறு ஏனோ நினைவுக்கு வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தது (வேறு என்ன வசனம் ....டேய் நாயே! )

தனியா உட்க்கார வைத்து பேச முனைந்தாலே ஏதோ ஒரு பயம் தொற்றிக் கொள்ளும் (என்னையும் 1614 மீனாக்ஷி சுந்தரத்தையும் முனைவர் ஜீ ஆர் கெமிஸ்ட்ரி  லேப்  வாசலில் கால் மணி நேரம் காக்கவைத்தது பின் வந்து திட்டியதும் நினைவுக்கு வந்தது ....ஜீ ஆர் எங்களிடம் சொன்னது ..."ஒங்க ரெண்டு பேரையும் இனிமே நான் சேர்த்தே பார்க்கக் கூடாது...அது என்ன எப்பப் பார்த்தாலும் ஹனிமூன் ஜோடி மாதிரி சேர்ந்தே  சுத்துறீங்க ")

ரகுபதி சுற்றி வளைக்காமல் ஒரே வார்த்தையில் சொன்னது.
டேய் எனக்கு கல்யாணம் முடிவாயிடுச்சுடா.

நான் கேட்க நினைத்தது, ஆனால் கேட்க பயந்தது ....

"அப்போ  அந்த திவ்யா, த்ரிஷா, நயன்தாரா   அவங்க எல்லாம்

...மனக்கேள்வி மிடறு விழுங்கி என்னால் புதைக்கப்பட்டு மலர் வளையமும்  வைக்கப்பட்ட்து

வாழ்த்துக்கள் என்ற சம்பிரதாய  வார்ததையை உதிர்த்தேன். உப்பிட்டவரை உள்ளளவும் நினைக்கவேண்டுமல்லவா !. ஆம்...அவன் கொடுத்த வடையில் உப்பு சற்று தூக்கல்.

பேரென்ன, என்ன படிக்கிறாள், எந்த ஊர் என்று பல கேள்விகள்.

ரகுபதி காலேஜ் படிக்கும் போது கிரிக்கெட்டில் LEG  SPIN போடுவான். அதனாலோ என்னவோ என் கேள்விக்கு பதில் சொல்லாமல் ஒரு GOOGLY போட்டான்.

அம்பயருக்கு மால் வெட்டி மாட்ச் பிக்ஸிங்கில் பேட் செய்து பழகிய எனக்கு கூக்ளி மிரட்சி அளித்ததுஆனாலும் மதுரைக்காரன் வீரம் இருக்கோ இல்லையோ லுங்கியை மடிச்சு கட்டி ரௌடியின்னு பாவலா காட்டித்தானே ஆகணும்.

அவன் போட்ட கூக்ளி இதுதான்

எனக்கு வரப்போகிற  இல்லாள்  பெயரை ஊகித்து சொல் !

நான் முடியாது என்றேன் .

பின்னே எதுக்குடா லுங்கியை மடிச்சு கட்றேன்னு உசுப்பேத்தினான்.

ஈசன் திருவிளையாடலையே கேட்டு பழகிப் போன நமக்கு ரகுபதியின் வெறும்விளையாடல் போதாமல் இருந்தது.

ஆலவாய் அண்ணல் ரகுபதி திருவாய் மலர்ந்தருளி " ஆயிரம் ரூபாய் பொற்கிழி பரிசாக கொடுக்கப்படும், உமது ஊகம் சரியாக இருந்தால் " என்று என்னுள் இருந்த தருமியை அலாரம் வைத்து, தட்டி எழுப்பினான்.

ஏதாவது க்ளூ கிடைக்குமா என்றேன் . போடிநாயக்கனுர் பாசஞ்சர் வசனம் அவன் நுனி நாக்கு வரை வந்ததுநான் பதுங்கினேன்

ஒரு க்ளூ கூட இல்லேன்னா எப்படி என்ற என் வேண்டுகோளுக்கு செவி சாய்த்தான்ஒரே ஒரு முறை நீ கேட்டால் ஆம் இல்லை என்ற ஒரு மொழி ஒரே முறை பகரப்படும், அதற்கு மேல் கேட்கக்கூடாது என்றான்

பாய்சன் கொடுத்தாலே பாயசம் போல் சாப்பிடும் எனக்கு, பாயசம் கிடைத்தது போல் இருந்தது (தனுஷ் பட வசனம்)

நான் கேட்ட ஒரே கேள்வி " பெண்ணின் பெயர் பழைய காலத்து பெயரா? ஆம் அல்லது இல்லை எனக்கூறு என்றேன் "

ஆம், இல்லை என்ற இரண்டே பதில்கள் இருந்த போது outofsyllabus இல் இருந்து அண்ணன் மூன்றாவது பதிலை கையில் எடுத்தார் .

"பெயர் பழைய பெயர்தான் ஆனா மாடர்ன் இருக்கும்"  (இதுக்கு க்ளு கொடுக்காமலே இருந்திருக்கலாம் என்று பல்லை நறநறத்தேன் !!!!

ரகுபதியின்  ஏகப்படட  குவாலிஃபிகேஷன் பற்றி பெருமைப் பட்டு அவனை "வாணி மைந்தன் " என்பேன் . (அவனது குவாலிஃபிகேஷன்ஸ் பற்றி தெரியாதவர்கள் தனியே என்னை அணுகவும் ). அவனுக்கு மாத்திரம் அருள் புரிந்த வாணியை   கோபித்துக் கொள்வேன் .

தமிழ் காப்பியங்களில் சொல்வார்கள் புலவன் நாக்கில் சரஸ்வதி நர்த்தனம் ஆடுகிறாள் என்று, புலவர் பெருமக்களின் திறமையை பாராட்டி !

என் நாவில் வாணி வாசம் செய்தது இல்லையே என்று குறைப்பட்டு கொண்டிருக்கிறேன் . நாவில் மட்டுமல்ல என்னுடைய pincode லேயே வாணி வாசம் செய்த்ததில்லை!

அன்றென்னவோ தெரியவில்லை, மீனாக்ஷி கோவில் செல்லவிருந்த வாணி, விலாசம் மாறி , என் நாவில் ஒரு அரைக்கால் வினாடி வாசம் செய்த்ததன் விளைவு, நான் ரகுபதியை பார்த்து

" பெண் பெயர் சுமங்கலியா என்றேன் " (அவனது குலத்தில், எனக்குத் தெரிந்த சில பெண்களின் பெயர்களை நினைவுபடுத்தி ......)

டேய் நீ கள்ள ஆட்ட ஆடுறே என்றான் . "யாரோ ஒனக்கு சொல்லிட்ட்ங்க"

"அவள் பெயர் சுமங்களா" என்றான் . ஒரு வினாடிவந்துவிட்டுப் போன சரஸ்வதி , வரப்போகிற லக்ஷ்மி எல்லோரும் மனக்கண்ணில் தெரிந்தார்கள் .

ஆனால் ஒரு கடைசி எழுத்து தப்பு . அதனால் பொற்கிழி கிடையாது என்று சொல்லி என்று சொல்லி இக்கால நக்கீரன் போல வில்லனானான் ….. என்மனக்கண்ணில் இருந்த  சரஸ்வதி-லக்ஷ்மிகளுக்கு திரையிட்டான்.

ஒரு தப்பு தானே ! ஒரு ரூபாய் குறைத்து 999 கொடு என்றேன் . வடையை சாப்பிட்டுட்டு (தட்ட வச்சுட்டு  ) கிளம்பு என்றான்

அந்த நாள்  முதல் 999 ரூபாய்  கடன் காரனாய் ரகுபதி

my best client but no phees”  என்று துயரத்தில் நான் லண்டன் திரைப்பட வடிவேலனானேன்

சில மாதங்கள் முன்னாள் கேட்டான். “டேய் என் மூன்றாவது பேரனுக்கு பேர் வைக்கப் போறோம், "A "ல் தொடங்கி ஒரு பேர். என்னன்னு சொல்லு பார்க்கலாம் .


மீண்டுமா !!! என்று whatsapp யிலேயே  அவனைப் பொசுக்கினேன்

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...