Edarkundram Suyambu Sri Lakshmi Narasimhar Temple
அர்ச்சனை டிக்கெட், துளசி மாலை, தேங்காய் பழம், பெயர், கோத்திரம் நக்ஷத்திரம் சொல்லி அர்ச்சனை, அரைமணி நேர க்யூ வரிசை, இடிபாடுகளுக்குப் பின் தரிசனம், உண்டியல் இவைதான் சுவாமி தரிசனத்திற்கான இலக்கணம் என்றால் மேற்படி கோவில் உங்களுக்கு செட் ஆகாது.
ஆளரவமற்ற கோவில், ஏகாந்தமான தரிசனம், கோவிலில் நானும் கடவுளும் மட்டுமே என்ற வகையில் தாங்கள் ஆசைப்பட்டால், இடர்குன்றம் போய் வாருங்கள்.
சென்னை, செங்கல்பட்டு வாசிகளுக்கு இக்கோவில் ஒரு வரப்பிரசாதம். திருப்போரூர்- செங்கல்பட்டு (100 அடி ) சாலையில் பூண்டி எனும் கிராமத்தில் இருந்து பிரிந்து 4 கிமீ பிரயாணித்ததால் பச்சை பசேல் என்ற கிராமங்களுக்கு மத்தியில் இடர்க்குன்றம் எனும் சிறிய குன்றினால் ஆன கிராமம். புதிதாக அகலப்படுத்தப்பட்ட திருப்போரூர்-செங்கல்பட்டு நெடுஞ்சாலையில் சென்றால் , பிரயாணம் மிகவும் எளிது ஆனால் கடைசி 3-4 கிமீ ஜாக்கிரதையாகச் செல்லவேண்டும். தார்ச்சாலை இருந்தாலும், வளைவுகள், பள்ளங்கள் அதிகம்.
மிகச்சிறிய கிராமங்களில் கூட இணைய இணைப்பு இருப்பதால், கூகுள் மேப் உங்களுக்கு வழிகாட்ட, நீங்கள் பாதுகாப்பாக செல்ல முடியும்.
கூகுள் மேப் உதவிக்கு: https://goo.gl/maps/g7Au8zV3LZiZDdbv7
சுமார் ஐம்பதே ஐம்பது கரடுமுரடான படிகள் ஏறினால் கோவிலை அடையலாம். குடும்பத்தவரோடு, பகலிலே பிரயாணிப்பது உசிதம். சுத்தமான காற்று மற்றும் அழகிய காட்சிகள் கூடுதல் போனஸாக இருக்கும்.
இன்று புரட்டாசி சனிக்கிழமை.....ஏகாதசி வேறு.... பெருமாள் கோவில் வேண்டாம் கூட்டமாக இருக்கும், கிராமப்புறங்களில் இருக்கும் ஏதேனும் சிவன் கோவிலுக்குப் போகலாம் என்றே அடியேனும் ஒரு நண்பரும் கிளம்பினோம்.
நாங்கள் தரிசிக்கவிருந்த சிவனே எங்களை இத்தலத்தில் பெருமாளை தரிசிக்கப் பணித்தார் என்று தோன்றுகிறது. காட்டூர் வைத்தியலிங்கேஸ்வரர் கோவில் காற்று கூட புகாத அளவு இறுக்கமாக மூடியிருக்க, வேறு ஒரு பூண்டி-மயிலை விஷ்ணு கோவிலுக்கு தேடிச் சென்ற நாங்கள் வழி தவறி இந்தக் கோவிலுக்கு வந்தடைந்தோம்.
"அவனருளாலே அவன் தாள் வணங்கி" என்பதை இறைவன் எங்களுக்கு பலமுறை காண்பித்திருக்கிறான். இன்றும் நிரூபித்த்தான். நாம் எங்கு தொழ வேண்டுமென்பது கூட அவன் சித்தம். எனவே சிவன் கோவிலுக்கு தாழ் இட்டு நரசிம்மர் தாள் பணிய எம்மைப் பணித்தான்.
இடர்குன்றத்தில் நரசிம்மர் சுயம்பு வடிவத்தில் இருக்கிறார் (உளியால் செதுக்கிய சிற்பம் அல்ல, தானாகவே உருவானவர் ). (பாத்ரபாத)புரட்டாசி சனி அன்று இங்கு செல்ல எங்களுக்கு வாய்ப்பு கிடைத்தது எங்களுக்குக் வாய்த்த ஆசீர்வாதம்.
லக்ஷ்மீ நரசிம்மர் ஸ்வயம்பு (தான்தோன்றி ).. மூலவர் மலைசுவர்களிலே தோன்றியுள்ளார். இடைக்காடர் என்ற சித்தருக்கு இங்கு தரிசனம் தந்ததால் இவ்வூருக்கு இடர்க்குன்றம் என்று ஒரு தகவல் (ஆதாரம் கேட்டால் என்னிடம் இல்லை).
சுமார் 1500 வருடங்களாக மக்கள் வழிபட்டு வருவதாக அறிகிறோம். ஸ்வயம்பு லக்ஷ்மீ நரசிம்மரை தவிர சிலாரூபத்தில் ஒரு மூர்த்தியையும், உற்சவரையும் காண்கிறோம்.
நரசிம்மரே உக்ர ஸ்வரூபி.... இங்கு இருக்கும் நரசிம்மர் இன்னும் உக்கிரமாக காட்சியளிக்கிறார். மஹாலக்ஷ்மி தாயார் அருகிலிருப்பதால் இறைவனும் இறைவியும் பக்தர்களுக்கு தந்தை தாயாராக அருள் பாலிக்கிறார்கள் .
மூலவரை புகைப்படம் எடுப்பது முறையன்று ....எனவே அடியேன் எடுக்கவில்லை. வேறு ஒரு பக்தர் ஆர்வத்தினால் எடுத்ததை கீழே தந்திருக்கிறேன்.
அர்ச்சகர் வழக்கமாக காலை 10 மணிக்கு வருவார் என்று அறிகிறோம் .
அரசின் சமுதாயக்காட்டின் ஒரு பகுதியாதால் நம் முன்னோர்கள் (குரங்குகள்) அதிகம். நம் கையில் சாப்பிடக்கூடிய பொருட்கள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். நம் கையில் இருக்கும் பூக்களைக் கூட பழங்கள் என்று தவறாக நினைத்து, அவர்கள் நம்மைக் கைகுலுக்கவருவார்கள் ...எச்சரிக்கை .
இந்த இடம் மிகவும் தனிமையாக இருப்பதால், (ஆஜானுபாகுவான ) குடும்ப உறுப்பினர்கள் உடன் வந்தால் மனம் சஞ்சலப்படாமல் தரிசனம் செய்யலாம். தனியே செல்லுவதைத் தவிர்க்கவும். இரவு பயணம் தவிர்க்கப்பட வேண்டும்.
பக்தர்கள் தங்கள் கவலைகளையும் , பிரச்சினைகளையும் மாத்திரம் கடவுளிடம் விட்டுச் சென்றால் போதுமானது. ஆனால் நம்மில் சிலர் பிளாஸ்டிக் பாட்டில்கள், பாலிதீன் பைகள் , பிஸ்கட் கவர்களையம் விட்டுச்செல்வது கவலைக்குரியது. அது சுத்தமான இந்த கோவிலுக்கு நாம் செய்யும் அநீதி.
கோவிலுக்கு என்று வருமானமின்மை, துப்புரவு ஊழியர்கள் இல்லாமை காரணத்தால் சில பக்தர்கள் படிகளை சுத்தம் செய்வதைக் காண முடிந்தது, அவர்களது செயலுக்கு நன்றி .
குடும்பத்தார் சகிதமாக பகல்ப் பொழுதில் சென்று பெருமாளின் அனுக்கிரத்தைப் பெறுங்கள்.
யூடியூப் : https://youtu.be/4rI4rE-2W7Y
ஓம் நமோ நாராயணா !
‘ஓம் வஜ்ரநாகாய வித்மஹே
தீட்சண தன்ஷ்ட்ராய தீமஹி
தந்நோ நரஸிம்ஹாய ப்ரசோதயாத்’
A small temple on a hillock, in a
non-descript village away from the noisy city life.
A good place for Chennai & Chingleput
residents.
With the availability of the newly widened
Thiruporur- Chingleput highway, your drive is pretty simple but for the last
3-4 kms.
With internet connectivity even in the tiniest of villages
and Google map to guide you, you can be safe.
Last three kms will be through winding
& narrow roads but there is no need
to worry. Villagers can be helpful if you are anxious about the route.
A temple on a hillock, with fifty rough
steps and minimal devotees will be the blessing of your weekend. Clean air and
beautiful scenery will be an added bonus.
Lord Narasimha is in a Swayambhu form ( not
chiselled but self created). Our blessing that we had the opportunity to go
here on a Bhadrapada-Purattasi Sanivara.
Priest is
normally available at 10 am.
Many monkies to give you company, but
we should be careful if we have eatables
in our hand. Even flowers in our hand can be mistaken for fruits and we might
receive a handshake from them.
There were villagers at the foothill when
we went.
As this place is very lonely it is better
to go in the company of able family members. Night travel to be avoided.
Plastic bottles and sachets left behind as
souvenirs are an eye sore at this otherwise clean temple.
Some of the devotees could be seen cleaning
up the steps and we can't resist thanking them for their gesture.
Om
Vajranakhaya Vidhmahe
Tiksnadamstraya Dheemahi
Tanno Narasimha Prachothayat
No comments:
Post a Comment