Wednesday, March 24, 2021

கோடரிக்காரன் கதை -2021

 


கோடரியை குளத்தில் தவறவிட்டு, கடவுள் அருளால் (தங்க, வெள்ளி, மற்றும் மரத்தாலான) மூன்று கோடரியையும் பெற்றவனின் கதையின் இக்கால திரிபு பல வருடங்களிற்குப் பிறகு மீண்டும் படிக்க நேர்ந்தது. புதுக்கதை படித்திராதவர்களுக்கு ....இதோ >>> ஒரு திருவிழாவிற்கு சென்ற, மனைவி மீது பாசம் கொண்ட ஒரு ஏழை, கூட்டத்தில் மனைவியை தொலைத்துவிட்டான். கடவுளிடம் முறையிட, கடவுள் தோன்றினார். பழைய கதையைப்போல சோதிக்க எண்ணிய இறைவன், முதலில் ஹேமமாலினியைக் காட்டினார். நம் நண்பர் உடனே இந்த கனவுக்கன்னியே என் மனைவி என்றார். கடவுள் அவனது பேராசையைக் கடிந்து, சபிக்க, ஏழை பணிந்து கடவுளிடம் " நான் செய்ததற்கு காரணம் உண்டு. முதலில் நீ ஹேமமாலினியைக் காட்டுவாய், நான் இல்லையென்பேன் ! பின்பு ஸ்ரீதேவியைக் காட்டுவாய் நான் இல்லையென்பேன் ! கடைசியாக என் மனைவியைக் காட்டுவாய், நான் ஆம் என்பேன் நீ உச்சி குளிர்ந்து என் நேர்மையை மெச்சி மூன்று பெண்களையும் என்னிடம் விட்டுவிட்டு மறைந்து விடுவாய் ! ஏழை நான் என்ன செய்வேன் ! கோடரிக்காரன் கதை தெரிந்தவனாயிற்றே நான் "
கோடரியை குளத்தில் தவறவிட்டு, கடவுள் அருளால் (தங்க, வெள்ளி, மற்றும் மரத்தாலான) மூன்று கோடரியையும் பெற்றவனின் கதையின் இக்கால திரிபு பல வருடங்களிற்குப் பிறகு மீண்டும் படிக்க நேர்ந்தது. புதுக்கதை படித்திராதவர்களுக்கு ....இதோ >>>

ஒரு திருவிழாவிற்கு சென்ற, மனைவி மீது பாசம் கொண்ட ஒரு ஏழை, கூட்டத்தில் மனைவியை தொலைத்துவிட்டான். கடவுளிடம் முறையிட, கடவுள் தோன்றினார். பழைய கதையைப்போல சோதிக்க எண்ணிய இறைவன், முதலில் ஹேமமாலினியைக் காட்டினார். நம் நண்பர் உடனே இந்த கனவுக்கன்னியே என் மனைவி என்றார். கடவுள் அவனது பேராசையைக் கடிந்து, சபிக்க, ஏழை பணிந்து கடவுளிடம் " நான் செய்ததற்கு காரணம் உண்டு.

முதலில் நீ ஹேமமாலினியைக் காட்டுவாய், நான் இல்லையென்பேன் ! பின்பு ஸ்ரீதேவியைக் காட்டுவாய் நான் இல்லையென்பேன் ! கடைசியாக என் மனைவியைக் காட்டுவாய், நான் ஆம் என்பேன் நீ உச்சி குளிர்ந்து என் நேர்மையை மெச்சி மூன்று பெண்களையும் என்னிடம் விட்டுவிட்டு மறைந்து விடுவாய் ! ஏழை நான் என்ன செய்வேன் ! கோடரிக்காரன் கதை தெரிந்தவனாயிற்றே நான் "

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...