Sunday, March 22, 2020

கொரோனா கீதம்


(குறையொன்றும் இல்லை மறை மூர்த்தி கண்ணா  மெட்டில்  பாடவும்) 





பல்லவி (ராகம்: சிவரஞ்சனி)

குறை ஒன்று உண்டு மறைந்திருந்து கெடுத்தாய்

குறை ஒன்று உண்டு கொரோனா... குறை ஒன்று உண்டு கொரோனா





அனுபல்லவி (ராகம்: சிவரஞ்சனி ) 

கண்ணுக்குத் தெரியாமல் நிற்கின்றாய் கொரோனா

கண்ணுக்குத் தெரியாமல் நின்றாலும் எனக்கு

சுகமின்மை குறையாது  தந்தாயே கொரோனா



குறை ஒன்று உண்டு மறைந்திருந்து கெடுத்தாய்

குறை ஒன்று உண்டு கொரோனா... குறை ஒன்று உண்டு கொரோனா



சரணம்1 (ராகம்: காபி)



திரையின்பின் நிற்கின்றாய் கொரோனா

கரோனா  திரையின்பின் நிற்கின்றாய் கொரோனா  - உன்னை

நுண்ணோக்கி ஞானியர் மட்டுமே காண்பார்

திரையின்பின் நிற்கின்றாய் கொரோனா - உன்னை

நுண்ணோக்கி  ஞானியர் மட்டுமே காண்பார்

என்றாலும் குறை ஒன்று எனக்குண்டு  கொரோனா

என்றாலும் குறை ஒன்று எனக்குண்டு  கொரோனா



கையின்  மேல் அழுக்காகி     நிற்கின்ற கொரோனா

அழுக்கின்  மேல் மலமாகி   நிற்கின்ற கொரோனா

குறை ஒன்று எனக்குண்டு  கொரோனா

குறை ஒன்று உலகுக்குண்டு   கொரோனா

கொரோனா , கொடூரா,  கொலைகாரா  படுபாவி

படுபாவி படுபாவி

கொடூரா  கொடூரா



சரணம் 2 (ராகம்: சிந்துபைரவி)




சீனனுக்கிரங்கி தொண்டையில் இறங்கி

நுரையீரலிலே  நிற்கின்றாய் கொரோனா


சீனனுக்கிரங்கி தொண்டையில் இறங்கி

நுரையீரலிலே  நிற்கின்றாய் கொரோனா



குறை ஒன்று எனக்குண்டு  கொரோனா

குறை ஒன்று உலகுக்குண்டு   கொரோனா



தேடாமலே வந்திட நோய் நொடிகள் காத்திருக்க

ஓடி ஓடி (ஓடோடி) வந்தாயே சத்ருவாக கொரோனா


கொரோனா , கொடூரா,  கொலைகாரா  படுபாவி

படுபாவி படுபாவி



யாரும் அழைக்காத சுமையப்பா

 யாரும் அழைக்காத சுமையப்பா என் வாழ்வில்

யாரும் தாராத  அச்சம் தந்த வள்ளலே

ஊஹான் விட்டு மறைந்தாலும் என்

ஊருக்குள்ளே திரிகிறாயா !



படுபாவி  சீனா விட்டாயப்பா

படுபாவி  சீனா விட்டாயப்பா

படுபாவி  சீனா விட்டு

அப்பாவி இந்தியா கொண்டு

கொலைவெறியாக அலைகிறாயே



கொரோனா , கொடூரா,  கொலைகாரா  படுபாவி 

படுபாவி படுபாவி

கொடூரா  கொடூரா 




(அமரர்கள் ராஜாஜி மற்றும் எம்.எஸ் சுப்புலக்ஷ்மி  மன்னிக்கவும்)

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...