Wednesday, June 21, 2017

காரகோ பாவ நாஷய - Kaarako Bhaava Naashaya


காரகோ பாவ நாஷய (நாஸ்தி)
(ஆதாரம் : ஜாதக சிந்தாமணி)

காரகர்கள் தங்களின் காரக ஸ்தானத்தில்  நின்றிருந்தால் அந்த ஸ்தானம் சார்ந்த நற்பலன்கள் எல்லாம் கெடும்.

1)      ஒவ்வொரு செயலுக்கும் (காரகம்) ஒரு கிரகம் விதிக்கப்பட்டுள்ளது.  உதாரணம் குழந்தைச் செல்வத்துக்கு குரு, களத்திரத்திற்கு (மனைவி/ கணவன்) சுக்கிரன், தந்தைக்கு சூரியன், தாய்க்கு சந்திரன் .....
2)      அதே போல் ஒவ்வொரு வீட்டிற்கும் (பாவத்திற்கும் – Bhava என்றே உச்சரிக்கவும்). ஒரு செயல் விதிக்கப்பட்டுள்ளது. உதாரணம் குழந்தைச் செல்வத்துக்கு 5ம் வீடு, களத்திரத்திற்கு (மனைவி/ கணவன்) 7ம் வீடு, தந்தைக்கு 9ம் வீடு, தாய்க்கு 4ம் வீடு .....
1ம் பத்தியில் சொல்லப்பட்டுள்ள கிரகம், இரண்டாவ்து பத்தியில் சொல்லப்பட்டுள்ள வீட்டில் (முறையே) இருந்தால் அந்த காரகம்  கெட்டுவிடும் என்பது பொருள்.

உதாரணம் : தந்தைக்கு உரிய காரகன் சூரியன், தந்தைக்கு உரிய பாவமான 9ல் நிற்பதையும்
சந்திரன் 4ல் நிற்பதையும்
குரு 2ல் நிற்பதையும் பாவ நாசம் என்று சொல்வார்கள்.
(எல்லா விதிகளுக்கும் விலக்கு உண்டென்பதை நினைவு கொள்க. ஆயுள் காரகன் சனி, ஆயுள் பாவமான 8ல் நின்றால் விதிவிலக்கு. 8ல் சனி நிற்க ஆயுள் விருத்தி)

அதே போல சம்பந்தப்பட்ட கோள்கள், ஆட்சி உச்சம் பெற்றால், பலன் மாறும். பாவ நாசம் ஆகாது.

இந்த விதி சில காரகங்களுக்கு மட்டுமே. ஒரு வீட்டிற்கு பல பாவங்கள் இருப்பது போல, ஒரு கிரகத்திற்கு பல காரகங்கள் உண்டு. எல்லா பாவங்களும் கெட்டுவிடாது என்பதை நினைவு கொண்டு பலன் சொல்லவேண்டும்.

கல்வி காரகனாகிய புதன், கல்வி ஸ்தானமாகிய 2ம் வீட்டில், வித்தை ஸதானமான 4ம் வீட்டில் இருப்பதையோ பாவ நாஸ்தி என்று சொல்லக்கூடாது.

வாகன காரனாகிய சுக்கிரன் வாகன ஸ்தானமான 4ல் நிற்பது, காரக நாஸம் அல்ல, மாறாக, வாகன யோகம்.

மொத்தத்தில் காரகபாவ நாசம் என்ற சூத்திரத்தை சரியாக ஆராய்ந்து உபயோகிக்கவும்.


 If the Karakas(Lords of events)  are placed in the Bhavas designated for the event , all the good things will be destroyed.

1) For each action (Karaka - Signifactor) a planet is designated. Example :  Guru (Jupiter)  for begetting children,  Venus for the spouse (wife / husband), the sun for father , Moon for the mother, etc etc .....

2) Similarly to each house (pronounced as Bhava - Rasi) an action is designated. For example, 5th house for children, 7th house for spouse, 9th house for father, 4th  house for mother etc etc .....

If the Karaka mentioned in the first paragraph sits in the respective house/ Bhava mentioned in the second paragraph, it results in the Karaka event getting destroyed

Example: If Sun the signifactor for Father stands in the 9th house (the Bhava that designates Father) this results in spoiling the aspects relating to the native’s father.
Similarly  Moon  in 4th Bhava
Guru the lord of Wealth standing in the 2nd Bhava

……………..all spoil the respective events

Remember that all laws have exemptions….If Saturn the Karaka for Longevity positions himself in the Bhava for longevity viz., 8th house, it is an exception. The native will actually have a long life

Similarly  planets ruling or exaltation will offer different results.

The main point to be noted is that each Bhava has innumerable events attached to it. The rule should not be applied blindly to all the events of that Bhava.

 For example,
Mercury the Lord of Education , does not spoil education if he  is in the  house of education, , and  in 4th  the  house of skills.

The Karaka Lord for vehicles (Venus ) positioned in the 4th house (of Conveyances) does not spoil the event, but on the contrary gives a Vahana Yoga.

Read the exceptions as much as you read the rules, before making interpretations

1 comment:

Anbazhagan P said...

பாலினம்: ஆண். தனுசு லக்கினம். கார்த்திகை, பாதம் 3. ரிஷபம் ராசி. லக்கினத்திற்கு ஆறாமிடத்தில் சுக்,சூ, பு, சந் உள்ளது. லக்கினத்தில் சனி. குரு தனித்து லக்கினத்திற்கு ஐந்தில் உள்ளது. லக்கினத்திற்கு ஒன்பதாமிடத்தில் கேது தனித்து உள்ளது. லக்கினத்திற்கு மூன்றாமிடத்தில் ராகு, செவ்வாய் இணைந்துள்ளது. திருமண வாழ்க்கை மற்றும் குழந்தைபிறப்பு பற்றி கூறமுடியுமா? 12.06.1988,இரவு 7:30,நாமக்கல். நன்றி.

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...