Saturday, March 23, 2024

மீனாக்ஷி திருமணம்

 மீனாக்ஷி  திருமணம் 


இன்று 24 மார்ச் 2024 பங்குனி உத்திரம். தெய்வத் திருமணங்கள் பல நடந்தேறிய மங்கள நாள்.



பங்குனி உத்திரம் என்பது சிவன் மற்றும் பார்வதி , ராமர் மற்றும் சீதை , சுப்ரஹ்மண்ய  சுவாமி - தேவசேனா , மற்றும் ரங்கநாதர்- ஆண்டாள் ஆகியோரின் திருமணங்களை நினைவுகூருவதைக் குறிக்கிறது . இது ஐயப்பனின் வெளிப்பாடாகவும் கருதப்படுகிறது.


மகாலட்சுமி ஜெயந்தியாகக் கொண்டாடப்படும் சமுத்திர மந்தனத்தின் புராணத்தின் போது லட்சுமி பாற்கடலில் இருந்து தோன்றியதாகக் கருதப்படுகிறது


கடவுள் என்ன நம்மைப் போன்ற சாமானியனா ? அவருக்கு திருமணம் உண்டா. பெண்களைப்போல் பராசக்தி பிள்ளைகளைப் பெற்றெடுத்தாளா  என்ற கேள்விகளுக்கு வாரியாரின் அற்புதமான பதில்....


பள்ளியில் மக்காக இருக்கும் மாணவனுக்கு ஆசிரியர் விரல்  விட்டு எண்ணி கணிதம் கற்றுத்தருவார். ஆசிரியருக்கு கணக்கு தெரியாது என்பதல்ல அர்த்தம். மாணவனுக்காக ஆசிரியர்  இர(ற)ங்கி வருகிறார். அதுபோல இல்லறத்தின் மேன்மையை நம்மைப்போன்ற (மக்குகளுக்கு) சாமானியர்களுக்கு தெரிவிக்கவே இந்த தெய்வத் திருமணங்கள்.


இந்நாளில் அடியேனது சிறிய பங்களிப்பு கிருபானந்த வாரியாரின்  மீனாக்ஷி  திருமணம்  பற்றிய உபன்யாசம் (காப்பிரைட் பிரச்சனைக்கு அடியேன் பொறுப்பல்ல !


அனைவருக்கும் மீனாக்ஷி சுந்தரேஸ்வரர் அருள் கிடைக்க வேண்டுகிறேன். 


Link to Audio: Click here இங்கே சொடுக்கவும் 


சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா

  முருகேசன் : மாப்பிள்ளை... பல பேரு பல விதமா சொல்ராங்ய ... இந்த வருஷம்  சனிப் பெயர்ச்சி உண்டா இல்லையா ?....நம்பலாமா நம்பக்கூடாதா ? அதுக்கு ஏ...