Saturday, October 1, 2022

பொன்னியின் செல்வன் - பெருங்கதையை திரைப்படமாக்கிய முயற்சி


பொன்னியின் செல்வன் என்ற காவியத்தை  தொடர்கதையாகவும் / புத்தகமாகவும்  படிக்கும்  பெரும்பாக்கியம் பெற்ற நம் தலைமுறைக்கு , இன்று  வந்திருக்கும் திரைப்படம்  என்பது  பூனைக்கு சூடுபோட்டு புலியாக மாற்றும் முயற்சி. 

பூனைக்கு சூடு போட்ட பாவம் மட்டுமே விஞ்சும், என்பது எளியேனின்  கணிப்பு. 

அருண்மொழி வர்மன் என்ற ராஜராஜனின் மிகப் பெரிய பங்களிப்பு தஞ்சைக்கோவிலை  அமைத்ததும் , சிதம்பரத்தில் கேட்ப்பாரற்றுக் கிடந்த தேவார / திருமுறை ஓலைகளை கரையான் உலகிலிருந்து மீது  மீட்டு பக்தி உலகிற்கு சேர்த்ததுமாகும். 

தவிர, கல்கி எழுதிய பொன்னியின் செல்வனிலும்  சைவ-வைணவ பக்தி ரயில் தண்டவாளங்கள் போல தொடர்ந்தே சென்று கொண்டிருக்கும்.   வைணவபக்தர் ஆழ்வார்க்கடியானும் , திருவாரூர் பிரதம சிவாச்சாரியார் தியாகராஜனும் உடன்பிறந்த சகோதரர்கள் என்பதிலிருந்து அந்தக் காலத்தில்  ஒரே குடும்பத்தில் பிறந்திருந்தாலும் முற்றிலும் மாறுபட்ட பக்தி முறைகளை  பின்பற்றலாம் என்பதும் புலனாகும். 

ஆம்பூர் பிரியாணி  ஸ்பெஷலிஸ்ட் ஜமாலுத்தீன்  பாயிடம் அகார அடிசலும் , புளியோதரையும் செய்யச்சொன்னது போன்றது  போயும் போயும் மணிரத்னத்திடம் பக்தி  தோய்ந்த சோழர் வரலாறை  திரைப்படமாக புனையச்சொன்னது. !

நான் கேட்டறிந்தது  வரை இந்தத் திரைப்படத்தில் தேவாரமோ, மற்ற திருமுறை கீதமோ வராமல் இயக்குனர் பார்த்துக் கொண்டிருக்கிறார்.   ராஜராஜனுக்கு மணிரத்தினம்  காட்டும் நன்றிக்கடன் அப்படி ! 

திரைப்படம் வெற்றியாகலாம், தயாரிப்பாளர் பணம் பார்க்கலாம், ஆனால் ஆத்மா சாந்தியடைந்த  கல்கி கிருஷ்ணமூர்த்தி  ஒரு முறையாவது  கல்லறையில் புரண்டு படுத்திருப்பார் என்பது நிச்சயம் !

திரைப்படம் பார்ப்பதோ, பார்க்காமலிருப்பதோ தங்கள் இஷ்டம். ஆனால் யாரோ செய்த பாவத்திற்கு பிராயச்சித்தமாக  அடியேன் மூல நூலை அனுப்புகிறேன்.  புத்தகத்தை படித்து, புரண்டு படுத்த கல்கியின்  ஆன்மாவை சாந்தியடைய செய்யுங்கள். 


திருச்சிற்றம்பலம் !..... ஓம் நமோ நாராயணா !


ஐந்து பாகங்களும் சேர்ந்து: 


பாகம் -1 

பாகம் -2

பாகம் -3

பாகம் -4 

பாகம் -5



குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...