Thursday, July 1, 2021

குசேலர் புராணம் - கிருபானந்த வாரியாரின் உபன்யாசம்


குசேலரை  ஒரு கேலிச்சித்திரமாகவும், நகைச்சுவைக்கு ஒரு கைத்தடியாகவுமே நம் திரைப்படங்கள்  நமக்குத் தந்திருக்கின்றன. வாரியார் சுவாமிகளின் இந்த உபன்யாசம் குசேலரை மேன்மையாகச்  சித்தரிப்பதுவுமன்றி, நம்மைப் போன்ற சாமானியர்களுக்கு மனதில் எழும் பல கேள்விகளுக்கு விடை தருகின்றது.


உதாரணத்திற்கு......


குசேலருக்கு 27 குழந்தைகள் என்றால் முதல் குழந்தைக்கு குறைந்தது 27 வயது இருக்குமே,  18 வயதுக்கு மேற்பட்ட வேலை செய்து சம்பாதிக்கத் தகுதியான மக்கள் குறைந்தது அவருக்கு 10 பேர் இருக்கவேண்டுமே ! அப்படியிருக்க குசேலரைத் தவிர பத்து பேர் வேலை செய்து சம்பாதித்தித்தால் வறுமை ஒழிந்திருக்குமே  .....ஏன்  அப்படி இல்லை !


இக்கேள்விக்கு இந்த உபன்யாசத்தில் விடை கிடைக்கிறது !


வாரியாரின் மற்றொரு சிறப்பு,  கதை சம்பந்தப்படாத பல நீதிகள், நிகழ்வுகள், உண்மைகளை அழகாகக்  கோர்த்து  நகைச்சுவையுடன் தருவார்.


பொருட்களை ஏலம்  விடும்போது ஏன்  மூன்று முறை விடுகிறார்கள்,.... டவாலி  நீதிமன்றத்தில் ஏன்  குற்றவாளிகளையும், சாட்சிகளையும் மூன்று முறை அழைக்கிறார். ஏன்  4,5 முறை அழைப்பதில்லை 


மாண்டு போகவிருக்கும் கரப்பான் பூச்சி ஏன்  குப்புற விழுந்து பின் சாகிறது என்பதற்கு புராணங்களிலிருந்து  மேற்கோள்கள் .....


பத்து புத்தகங்களில் கிடைக்கும் தகவல்களை அரை மணி நேர உபன்யாசத்தில் கொடுத்து விடுவார்.


கீழே கொடுக்கப்பட்டுள்ள குசேலர் கதை உங்களை பல இடங்களில் மகிழவும், சில இடங்களில்  நெகிழவும்  வைக்கும் .   இணைய தளத்தில் இல்லாத இந்த உபன்யாசங்களை ஒலி  வடிவாக்கிக் கொடுத்தது  அடியேனுக்கு கிடைத்த பாக்கியம் ( அடியேனுக்கு காப்பிரைட் நோட்டீஸ் வராமலிக்கருக்க அவரும், அடியேனும் வணங்கும் முருகனை வேண்டிக்கொள்கிறேன்  😀😀😀 ) 

பாகம் 1:  






பாகம் 2: 




பின்குறிப்பு: ஒரு சில மொபைல்  ஃபோன்களில்  இந்த ஒலிப்பதிவுகள்  சரியாக வருவதில்லை என அறிகிறேன். அவர்களுக்காக MP3 லிங்க் கீழே தரப்பட்டுள்ளது 
























குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...