Friday, January 29, 2021

திருமுக்கூடல் அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில்

திருமுக்கூடல் 

அலர் மேல் மங்கை சமேத அப்பன் வெங்கடேச பெருமாள் கோவில் 


சென்னைக்கு அருகில் அதிகம் பிரபலமில்லாத, ஆனால் விசேடமான தலங்கள் பல.  அவற்றில் புவியியல் முக்கியத்துவம் கலந்த ஒரு மிகப்  பழமையான ஒரு திருத்தலம் திருமுக்கூடல் வெங்கடேச பெருமாள் கோவில். மூன்று  நதிகள் (பாலாறு, செய்யாறு மற்றும் வேகவதி) இணையும் இடத்தில் அமைந்த கோவில்.


சென்னையிலிருந்து வாலாஜாபாத் (ஆற்கரச்சாலை ....சுகமான பயணம்) சென்று பழைய சீவாரம்(4 கிமீ ) வரை சென்று பாலாறு பாலத்தைக் கடந்தால் திருமுக்கூடல்.


சுமார் 1500 வருடத்திய  பழமையானது என்று கல்வெட்டுக்கள் சொல்கின்றன. ஆனால் கல்வெட்டுக்களை வைத்து கோவில் சரித்திரத்தை அளவிடுவது தவறான அளவுகோல்.  9ம் நூற்றாண்டு கல்வெட்டு சான்று உண்டு, ஆனால் எல்லா வரலாறுகளும் சான்றுடன் அமைவதில்லையே  !



மிகப் பழமையான, முக்கியத்துவம் வாய்ந்ததாக அரசு  கருதுவதால் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் இன்று.  நகரங்களுள் இல்லாத பழங்கோவில்களுக்கு தொல்லியல் துறையின் கட்டுப்பாடுகள் உதவியாகத்தான் இருக்கிறது என்பதற்கு இக்கோவில் ஒரு சான்று.



அடியேன் சென்ற நேரத்தில் கோவிலின் பல கதவுகள் மூடப்பட்டிருந்ததால் மற்றவர்களின் கட்டுரைகளிலிருந்து தகவல்களை தி(ரு )ரட்டித் தந்திருக்கிறேன். மன்னிக்கவும்.


பரந்து  விரிந்த கோவில் வளாகம். அருமையான சுற்றுப்புறம். சுகாதாரமாக வைக்கப்பட்டிருக்கும் ரம்மியான கோவில். 



நின்ற கோலத்தில் (நம்) அப்பன் வேங்கடேசன்  நின்ற கோலத்தில் காட்சி தருகிறார். பிருகு மற்றும் மார்க்கண்டேய  மஹரிஷி களுக்கு இத்தலத்தில் வேங்கடேசன் காட்சி தந்துள்ளார். அலர்மேல் மங்கை தாயார் தனிச் சந்நிதியில் காட்சி  தருகிறார்.

ராமானுஜர் இறைவனை வணங்கி தந்த  சங்கு, சக்கரம்  இக்கோவிலில் இறைவன் கையில் இங்கு . 

ஆஞ்சநேயருக்கு தேன்குழல் மாலை அணிவிக்கும் மரபு இக்கோவிலின்  தனிச்சிறப்பு .


கோவிலிற்கு செல்லும் முன்னர் கோவில் அர்ச்சகரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு செல்வது நல்லது ( 94437 78352).


திரு சரவணன் ஐயர் அவர்களின் கையேடு மிகவும் உபயோகமாயிருக்கும் (நன்றி) 

 ( http://www.dharsanam.com/2011/05/thirumukkoodal-sri-appan-prasanna.html) 

காலத்தை வென்ற பல கோவில்களில் இதுவும் ஒன்று .

ஓம் நமோ நாராயணா !



குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...