Sunday, April 16, 2017

சாதாரண மாணவர்கள் பழம் பெரும் மாணவர்களான வரலாறு

சாதாரண மாணவர்கள் பழம் பெரும் மாணவர்களான வரலாறு 


ஆகாயத்தில் சில நட்சத்திரங்களையும் கோள்களையும் பார்க்க  வாய்ப்பு கிடைத்திருந்தாலும், வியாழன் எனப்படும் குருவை பார்க்கும் வாய்ப்பு படூருக்கு வீடு மாற்றாலான கடந்த ஓரிரு மாதங்களாகவே கிடைத்து வருகிறது. அதன் காரணம் இன்றே புரிந்தது.

கடந்த சில நாட்களில் அவசரகதியாக நமது ஜுனியர் "ஆசிப் பெய்க்"கும் நானும் திட்டமிட்ட (அல்லது சரியாக திட்டமிடாத) ஏற்பாடு நமது பேராசிரியர் ஜி.ஆர்  அவர்களை  அவரது வீட்டில் மரியாதை நிமித்தமாக சந்திப்பதென்பது ! விரல் விட்டு எண்ணினால், இரண்டு விரலைத்  தாண்டவில்லை. 

பரவாயில்லை போகலாம் என்று  முடிவெடுத்தபிறகு  81-84 ~பையன்~ பையர் சிக்கினார்.  நமது batch zoochem மாணவ~ன்~  ர் சுரேஷும் கிடைக்கவே நால்வரானோம். ஆட்களுக்கு பஞ்சமான நேரத்தில்,

எம்மை பஞ்சபாண்டவராக்க, சுரேஷின் அண்ணன் ராமகிருஷ்ணனும் வந்தார். ராமகிருஷ்ணனும் வேதியியல் மாணவர். நாமெல்லாம் ஒண்ணாப்பு சேர  சிலேட்டு குச்சி எடுத்தபோது அவர் பியூரெட் பிப்பெட் எடுத்தவர்.

என் குசும்பு, அவரைகஸ்தூரிபாய் நகரில் வாகனத்தில் ஏற்றிக்கொண்டபோது ( *இந்த பாழாய்ப் போன autocorrect  ஏற்றிக்கொண்டபோது என்று தட்டச்சினால் ஏற்றிக் கொன்றபோது * என்கிறது) "நீங்க GR கிளாஸ்மேட்  ஆ என்றது. ஏதோ lift கொடுத்த காரணத்தால் கண்ணாலே மட்டும் சுட்டெரித்தார்)

பாதுகாப்பு காரணங்களால் மோதி, பிரணவ் முகர்ஜி போன்றவர்களின் பிராயணத்திட்ட்ங்கள் ரகசியமாக வைக்கப்படுவது போல், ரகுபதி சென்னை வந்த சமாசாரத்தை யாருக்கும் அவன் சொல்லவில்லை . வேறு ஏதோ காரணத்தால் அவனை போனில் அழைக்க தனது சென்னை விஜயத்தைசொல்ல, எங்களது திடடத்தை சொன்னேன் . அவனும் சேர, நாங்கள் அறுவரானோம் 

மோகன் ஒரு கால்  சென்னை வந்திருக்கலாம் என்ற ஹேஷ்யத்தில் அவனுக்கு ஒரு கால். அவனும் மோதிக்கோ ரகுபதிக்கோ சளைத்தவனில்லையாதலால் அவனது ரகசிய சென்னை வருகை அம்பலமானது . ஆனால் அடுத்த சில மணிகளில் ஓசூர் திரும்புவதால் வரமுடியாதென்றான் 

எங்கள் அறுவரையும் ஷெனாய் நகரிலிருக்கும் Prof GR ஷெனாய் ஊதாத குறையாக அன்புடன் வரவேற்றார். 34 வருடங்களுக்குப் பிறகு அவரைப் பார்ப்பது அத்தனை மகிழ்சியாக இருந்தது .



அன்று பார்த்த அதே மாதிரியாக  இருந்தார். அன்றலர்ந்த வெண்தாமரையாக வைட்&வைட் ல் இருந்தார் 

மெமரி பிளஸ் மோகனுக்கு தகுதியான வாத்தியார் என்று சொல்லும்படி அபாஆஆஆஆரமான ஞாபகசக்தி. அபாரமான நகைச்சுவைத் திறம். punch. அத்தனைக்கும் மேலே..... தன் குழந்தைகள் தோளுக்கு மேல்வளர்ந்து நன்மக்களான  ஒரு தந்தையின் மகிழ்ச்சி.

அந்தநாட்கள் பற்றிய எங்களது உரையாடலுக்கு புள்ளிவிவரங்களோடு பதில் சொன்னார். 

உதாரணத்துக்கு சில'....

மோகனைப்பற்றி  பேசும்போது, அவன் MSc நம் கல்லூரியில் படித்தது, பி.எச்டி , postdoctoral அமெரிக்காவில் படித்தது எல்லாவற்றையும் நினைவு வைத்திருந்தார்.  நல்லது மட்டும் நினைவிருந்தால்  பரவாயில்லை. வேறு ஒன்றும் சொன்னார். மோகனோட அப்பா தன்னிடம் கணக்கு ஆசிரியரான தன் மகனுக்கு maths -கெமிஸ்ட்ரி முதலில் தராதது ஏன் என்று கேள்வி கேடடதையும் சொன்னார். எங்களில் யாரோ ஒருவர் GR இடம் "ஓ , சண்டை போட்டு maths -கெமிஸ்ட்ரி வாங்கிடடாரா என்றதும்" அவருக்கான trademark குத்தலுடன் சொன்னார் "சண்டை போட்டா தர்றது என் குணம் இல்லையே"

ரகுபதி பற்று பேச்சு வந்தது. அப்பா எப்படி இருக்கார் (அவருக்கு GR intermediate வாத்தியாராம்), சபாபதி எப்படி இருக்கான் என்றார் . நான் ஏதோ பேச எத்தனித்ததும் , என்னை அடக்கி நான் என்ன கதை சொல்ல நினைத்தேனோ, அதே கதையை சொல்லி எங்களை ஆச்சரியப்படுத்தினார்.

அந்தக் கதை முன்பே சொல்லியிருக்கிறேன் ...ரகுபதி மதியம் 2-3 வகுப்பில் marksheet ஐ வைத்து வீசிக்கொண்டிருப்பதை பார்த்து "RSPathy ல சொல்லி ஒரு நாலு fan  வாங்கிப்போடச்  சொல்லு" என்று சொல்லி அவனை மேலும் வியர்க்க வைத்த கதை.

நான் சொல்லவந்த கதையை அவர் சொல்லிவிட்ட்தால் குப்புற விழுந்த நான், மீசையில் மண் ஒடடவில்லை என்று முழுக்கதையையும் சொல்லி முடித்தேன்

கதை முடிவில் அவர் சொன்ன ஒரு கருத்து மனத்தைத் தொட்ட்து. "நம்ம காலேஜ் ஒரு typical lower-middle-class காலேஜ். படிப்பு என்ற அத்தியாவசியத்தை'தவிர பல விஷயங்களை தர வசதி இடம் தரவில்லை. 1990க்கு பிறகுதான் எங்களால் எல்லா வகுப்புக்கும் fanம்  கரெண்ட் பில்லுக்கு வகையும்  செய்ய முடிந்தது "

திருவேங்கடம்  இன்று மதியம் உணவுக்கு     அழைத்துசென்ற விஷயத்தை சொன்னபோது யாரோ கேட்டார்கள் "யாரு...அந்த NCCmaster திருவேங்கடமா?" அவரது பதில் "இல்லைப்பா நம்ம கெமிஸ்ட்ரி திருவேங்கடம்."

கண்ணடித்துக்கொண்டே தொடர்ந்தது " கெமிஸ்ட்ரி டிபார்ட்மென்ட்ல இருந்தால் என்.சி.சி எல்லாம் இருக்க முடியாது இல்லையா!" என்று அவர் சொன்னதும் என்னை அறியாமல் கைதட்டினேன்.

 NCC ஐப்  பார்த்தாலே ஒரு வெறுப்பு...அந்த சாக்கு வச்சு, லேட்டா வருவாங்க என்று அவரது கருத்துக்கு நியாமும் கற்பித்தார் 

நாம் அவரை எல்லாம் ஒரு பெரிய ego உள்ள மனிதர் என்று தான் நினைத்துக் கொண்டிருந்தோம். அவர் தன சக ஆசிரியர்களை பற்றி பலவாறாகப் புகழ்ந்தார் . LRG பற்றி பேச்சு வந்தது. அவரைப் போல ஒரு ஞானியைப் பார்க்கமுடியாது என்று சொல்ல வந்தவர், குடுகுடு என்று உள்ளே போய் LRG சமீபத்தில் எழுதிய , சப்தகிரி புத்தகத்தில் வந்த திருப்பதி ஏழு மலைகளை பற்றிய பாடலைக் கொண்டுவந்து காண்பித்தார் (இணைக்கப்பட்டுள்ளது). LRGanesan கால் தூசிக்கு கூட நானெல்லாம் வரமாட்டேன் என்றார்.


தானும் ஆங்கில பேராசிரியர் KRNarayanan ம் வைட்& வைட் அணிந்த பெருமையையும், KRNarayanan வேஷ்ட்டிக்கு மாறிய கதையையும் சொன்னார். Maths lecturer சிவசுப்பிரமணியன் பற்றியும் பேசினோம்



எஸ் . மீனாடசிசுந்தரம் பற்றி சொன்னபோது, எம்மில் யாரோ, அந்த டென்னிஸ்  எல்ல்லாம் விளையாடுவாரே அந்த மீனாடசிசுந்தரமா என்று குழப்பியதற்கு, *கரகரப்ரியா இல்லை* நான் சொன்னது சீனியர் மீ.சு.என்று  ஜோக்கடித்து, எங்களை வியப்பில் ஆழ்த்தினார்.

GR க்கு கை கால்கள் சற்று வெடவெடக்கின்றன. வயது காரணம்.நடப்பது சற்று சிரமமாக இருக்கிறது என்றார் .LRG walker உதவியுடன் நடப்பதாக update கொடுத்தார்

சந்திப்பை அரை/முக்கால் மணியில் முடித்து ரகுபதி ரிசப்ஷன் ஒன்று போவதாக சொல்லியிருந்தான். அவர் பாசத்தால் கட்டுண்டு பேசிக்கொண்டிருந்த நாங்கள் ஒண்ணரை மணி நேரத்தைக் கடந்திருந்தோம் (ரகுபதி காதில் ஆபாசமாக கிசுகிசுத்தேன், *நீ ரிசப்ஷன் பார்க்க போகமுடியாது, first-night தான் பார்க்கப்போறே*  )

ஒரு வழியாக கிளம்பிய எங்களிடம் ஒரு அன்புக்கடடளை இட்டார் . "நாமெல்லாம் family ஆக சந்திப்போம். எல்லா பசங்களையும் கூப்பிடுங்க, வெளியிலே சாப்பிடலாம், நான் தான் செலவு பண்ணுவேன்" என்றார்

என் தந்தை நினைவுக்கு  வந்தார்.வயது ஆக ஆக நண்பர்கள் உறவினர்கள் எப்போதும் அருகிலேயே இருக்கவேண்டும் என்று தோன்று கிறது என்பார். GR மனநிலையும் அப்படித்தான் இருக்கும் என்று ரகுபதி காரில் திரும்பும்போது சொன்னான்.

எங்கள் எல்லோருக்கும் ஒரு புத்தம் புது நூறு ரூபாய், ஒரு ஆப்பிள் பழம் . எனக்கு autograph உடன் .


பிரியாவிடை பெற்று 2ம் மாடியில் இருந்து இறங்கி வந்து  சாலையைக் கடந்து எங்கள் வாகனமேற தயாரானோம்.

நடக்க கஷ்டப்படுகிறேன் என்ற GR , இரண்டு மாடி இறங்கி, கேட் அருகில் நின்றிருந்தார்.  அவர் பார்வையில் தன்மக்களைக்கண்ட வாஞ்சை தெரிந்தது


அப்பொழுதுதான், அந்த பாழாய்ப்போன கடி ஜோக் நினைவுக்கு வந்தது. "நாமெல்லாம் இனி சாதா மாணவர்கள் அல்ல, பழம் பெரும் மாணவர்கள். எல்லோரும் இடிச்சிரிப்பு சிரித்தோம். சாலைக்கு அந்தப் பக்கம் இருந்த GR என்ன சமாசாரம் என்றார் . இடிக்கவந்த பைக்கை மறந்து, சாலையைக் கடந்து போய்'அந்த ஜோக்கை சொல்லிவிட்டு வந்தேன். சிரித்தார். கதைக்கு தலைப்பு எப்படி வந்ததென உங்களுக்கு புரிந்திருக்கும்

மனநிறைவுடன் திரும்பினோம்

கண்கள் பனிக்கவில்லை ! இதயம் மட்டும் இனித்தது 





குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...