Thursday, December 31, 2020

மார்க்கண்டேயர் பூஜித்த கடவூர் மயானம் திருத்தல வரலாறு

 

  

 

சிவமயம் 

மார்க்கண்டேயர் பூஜித்த 

கடவூர் மயானம் 

திருத்தல வரலாறு 

(தொகுத்து அளித்தவர் : சிவஸ்ரீ M .K  கணேச குருக்கள் )

 

 

 

சிவமயம்‌

திருச்சிற்றம்பலம்‌

 

முன்னுரை

 

ஆலயம்‌ தொழுவது சாலவும்‌ நன்றுஎன்பது ஆன்றோர்‌ வாக்கு. அரிய இம்மானிடப்‌ பிறவியை இறைவன்‌ நமக்கு வழங்கியதன்‌ நோக்கமே, பிறவியாகிய பெருங்கடலை கடந்து, இறைவனை நாம்‌ அடைய வேண்டும்‌ என்பதனை வள்ளுவப்‌ பெருமகனாரும்‌ இவ்வாறு கூறுகிறார்‌.

 

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

இறைவனுடைய திருவடிகளைப்‌ பொருத்தி நினைக்கின்றவர்‌ பிறவியாகிய பெரிய கடலை கடக்க முடியும்‌. மற்றவர்‌ கடக்க முடியாது.

 

... கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்

 

 

தூய அறிவு வடிவமாக விளங்கும்‌ இறைவனின்‌ நல்ல திருவடிகளைத்‌தொழாமல்‌ இருப்பாரானால்‌ அவர்‌ கற்ற கல்வியினாலாகிய பயன்‌ என்ன 

 

இறைவன்‌ உறைகின்ற இடமாகிய ஆலய வழிபாட்டின்‌ அவசியம்‌ பற்றி இந்து மதத்தில்‌, சைவ சமயத்தில்‌ மிகவும்‌ விரிவாக சொல்லப்படுகிறது.

 

ஆலயம்‌ என்பதை *லயம்‌ என பிரித்து பொருள்‌  கொண்டால்‌, - என்பது ஆன்மாவையும்‌ லயம்‌ என்பது லயித்திருத்தலையும்‌ குறிப்பதாகும்‌. இப்படி

பிரித்து பொருள்‌ கொண்டால்‌, ஆலய வழிபாட்டின்;அவசியத்தை நன்கு அறியலாம்‌. , ஆன்மா இறைவன்பால்‌ லயித்திருக்க ஒரு கருவியாக அமையும்‌ 

இடம்‌ ஆலயம்‌ என்பதை இதனால்‌ அறியலாம்‌ . அப்படிப்பட்ட சீர்மிகு ஆலயங்களுள்‌ ஒன்று கடவூர்‌ மயானம்‌ பற்றி ஈண்டு காண்போம்‌.

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்

 

செய்வதற்கு அருமையான செயல்களைச்‌ செய்‌யவல்லவரே .பெரியோர்‌; செய்வதற்கரிய செயல்ககை செய்ய மாட்டாதவர்‌ சிறியோர்‌ என்கிறார்‌ வள்ளுவபெருந்தகை அவர்கள்‌.

 

செயற்கரிய செயல்‌ முறபிறப்பில்‌ செய்ய இயலதாயினும்‌, மானுடப்‌ பிறப்பில்‌ உணர்ந்து செய்மகிடைத்தற்கரிய கருவூலமாம்‌ - இருக்கோவிவினுஉறை சிவத்தை உணர்ந்து அவத்தை நீக்கி  உய்வு பெ  கடவூர்‌ - திருமயானம்‌ எனும்‌ திருத்‌ தலத்திலை மானுடர்கள்‌ சிந்தையிற்‌ கொண்டு, சிவத்தை அடைவதே மானுடத்தின்‌ பெருமை. கடவூர்‌ மயானம்‌ எனும்‌ திருத்தலம்‌ பற்றிய சிறிய நூல்‌ தன்னை நோக்கி, தொழுது எழுவார்க்கெல்லாம்‌ பின்னை என்னார்‌ பேரருளாளனாம்‌ பெரிய பெருமான்‌ திருவடிகளுக்கு பணிந்து சமர்ப்பிக்‌ கின்றோம்‌.

 

 

 

 

சிவமயம் 

மார்க்கண்டேயர் பூஜித்த 

கடவூர் மயானம் 

திருத்தல வரலாறு 

தென்னாடுடைய சிவனே போற்றி !

எந்நாட்டவர்க்கும்‌ இறைவா போற்றி !

சைவ சமயத்தில்‌ மயானம்‌ என்று அழைக்கப்படும்‌ இருத்தலங்கள்‌   ஐந்துஅவை பஞ்ச மயானம்‌ என்று அழைக்கப்படுகிறதுஅவைகள்‌ முறையே காசி மயானம்‌, கச்ச மயானம்‌, காழி மயானம்‌, நாலூர்‌ மயானம்‌, கடவூர்‌ மயானம்‌ என்று வரிசைப்படுத்தப்பட்டுள்ளது.

 அதில்‌ ஐந்தாவதாக உள்ள திருத்தலம்‌ கடவூர்‌ மயானம்‌. இத்திருத்தலம்‌ நாகை மாவட்டம்‌, தரங்கை தாலுக்காவில்‌ திருக்கடையூர்‌   ஸ்ரீ அபிராமி அம்மை உடனாகிய ஸ்ரீ அமிர்தகடேசுவரர்‌ ஆலயத்தின்‌  கீழ்பால்‌ சுமார்‌ ஒரு கிலோ மீட்டர்‌ தூரத்தில்‌  அமைந்துள்ளதுஇக்கடவூர்‌ திருமயானம்‌ குற்காலத்தில்‌ திருமெய்ஞானம்‌ என்று அழைக்கப்படுகிறது. 

இத்திருத்தலத்தில்‌ வீற்றிருந்து அருள்புரியும்‌ சிவபெருமான்‌ ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர்‌ என அழைக்கப்படுகிறார்‌. இத்திருத்தலத்தின்‌ முக்கன்னியாக வீற்றிருந்து அருள்‌ வழங்கும்‌  அம்பிகையின்‌ பெயா்‌ வாடாமுலையாள்‌.

 மயானம்‌ என்பதன்‌ பொருள்‌ சைவத்தில்‌ கீழ்க்கண்டவாறு உள்ளது என்பதை இங்கு சிந்தித்து உணர்க. ஒரு பிரம்ம கர்ப்பத்தில்‌ பலயுக முடிவில்‌ சிவபெருமான்‌ வெகுண்டு பிரம்ம தேவரை எரித்து நீராக்கி விட்டார்‌. அவ்வாறு சிவபெருமானால்‌ பிரம்மதேவர்‌ எரிக்கப்பட்ட இடங்களுக்கு மயானம்‌ என்று சிறப்புடன்‌ விளங்குகிறது. சிவபெருமானால்‌ எரிக்கப்பட்ட பிரம்ம தேவரை மீண்டும்‌ எழுப்பி கொடுக்கவேண்டி  தேவர்களெல்லாம்‌ கடவூர்‌-மயானத்தில்‌ வந்து சிவனை' நோக்கி தவம்‌ செய்தனர்‌.

 

பெருமான்‌ திருவுள்ளம்‌ இரங்கி சிவஞானத்தை போதித்து, செம்மையாக படைப்புத்‌ தொழிலை படைக்கும்‌ பொருட்டு திருவருள்‌ பாவித்தார்‌. பிரம்மன்‌ சிவஞானம்‌ உணர்ந்த இடமே இத்திருகடவூர்‌ - மயானம்‌ என்னும்‌ திருத்தலமாகும்‌.

... இத்திருத்தலம்‌ முறையே திருஞானசம்பந்தர்‌, 'திருநாவுக்கரசர்‌, சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ முதலிய மூவரால்‌ பாடல்‌ பெற்றது.


 

 

அருள்மிகு பெருமானின்‌ சிறப்பு 

 

இத்திருத்தலத்தில்‌ அருள்‌ வழங்கும்‌ பெருமானை ஆசைகீரக்‌ கொடுப்பார்‌ என திருஞானசம்பந்தரும்‌ பின்னை என்னார்‌ பெருமான்‌ என திருநாவுக்கரசரும்‌ இல்லை என்னாது அருள்‌ செய்வார்‌. பீடைதீர அடியார்க்கருளும்‌ பெருமான்‌ என்று சுந்தரர்‌ தமது தேவார பதிகங்களில்‌ பெருமானின்‌ பேரருளை போற்றியமை பற்றி அகச்சான்றினை காண்க.

 

இத்திருத்தலத்தின்‌ சிறப்பினை தெய்வ வாக்கு செல்வராம்‌ சேக்கிழார்‌ பெருமானாரும்‌ காசினும்‌மீறிய சீர்‌ மண்ணு இருக்கடையூர்‌ மயானம்‌ என்றும்‌ காசி இருத்தலத்திற்கு மேலான இருத்தலம்‌ என்று குறிப்பிடுகிறார்‌.

 

அருள்மிகு அம்பிகையின்‌ சிறப்பு

 

இத்திருத்தலத்தின்‌ அம்பாள்‌, சுவாமி சன்னதிக்கு எதிர்புறம்‌ கிழக்கு நோக்கு தனிக்கோயில்‌ கொண்டு வீற்றிருக்கறொள்‌.அம்பிகையின்‌பெயா்‌ அம்மலக்குஜ நாயகி என்றும்‌ வாடாமுலையாள்‌  தன்னோடு மகிழ்ந்து என்று சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌  குறிப்பிடுகிறார்‌. அம்பிகையின்‌ திருக்கரங்களில்‌ தாமரை மலர்கள்‌ கொண்டுள்ளதால்‌    சரஸ்வதியும்‌, இலக்குமியும்‌, பார்வதியும்‌ இவளேதான்‌ என்று தேவாரத்தில்‌ குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்‌ சிறப்பம்சத்தை ஒருவாறு  உணரலாம்‌. நாடி சோதிடத்திலும்‌, அம்பிகையின்‌ அருள்‌ இடம்‌ பெற்றுள்ளது. திருமணத்தடை ஏற்படுபவர்கள்‌ வழிபட்டால்‌ திருமணத்தடை நிவர்த்தியாகி விரைவில்‌ திருமணம்‌. நடைபெறும்‌ என நாடி சோதிடம்‌ கூறுகிறது. 

அருள்மிகு சிங்காரவவேலவர்‌

 

இத்திருத்தலத்தில்‌ அமர்ந்திருக்கும்‌ முருகப்‌பெருமானுக்கு சிங்காரவேலவர்‌ என்று பெயர்‌. இவர்‌ சுவாமி சன்னதியின்௧ண்‌ வடபுரத்தில்‌ தென்‌ முகமாக அமர்ந்திருக்கறார்‌. பெருமானின்‌ கையில்‌ வில்லும்‌ வேலும்‌ கொண்டு, பாதக்குறடு அணிந்து 

ஸ்ரீ சிங்காரவேலவர்‌ என்னும்‌ திருநாமம்‌ கொண்டு ஸ்ரீ வள்ளி - தெய்வானையுடன்‌ நாளும்‌ வரும்‌ அடியார்களுக்கு காட்சியளிப்பது தனிச்சிறப்பாகும்‌.

 

ஸ்ரீ சிங்காரவவேலவனின்‌ அற்புதச்‌ செயல்கள்‌

 

மெளரியர்கள்‌ ஆட்சி காலத்தில்‌ அந்த வம்சத்தில்‌ வந்த பாகுலேயா்‌ என்ற மன்னன்‌ தன்‌எதிரிப்படையுடன்‌ போரிட நேர்ந்தபோது, தன்‌ படை பலமிழந்து, வேறு புகலிடமின்றி, இவ்வூர்‌ ஸ்ரீ சிங்கார வேலவர்‌ சன்னதியை அடைந்து முருகப்‌ பெருமான்‌ இருவடியில்‌ சரணடைந்தார்கள்‌. போர்களத்தில்‌ முருகப்‌ பெருமான்‌ எழுந்தருளி, படைத்தளபதி தலைமை ஏற்று போர்புரிய, எதிரிபடை. வீழ்ச்சியுற்றது.

 பெருமானின்‌ அசரீர்‌ வாக்குப்படி “நீ இழந்த நாடு தகரம்‌ மக்களை மீட்டுத்‌ தந்தோம்‌” என்று கூறியும்‌, நீபோய்‌ மீட்ட நாட்டை மீண்டும்‌ அரசோச்சுக? என்றும்‌ “இனி உனக்கு எந்த பயமும்‌ இல்லை" என்று அருளினார்‌.

அந்த அசரீர்‌ வாக்கை கேட்ட மன்னன்‌, எல்லையில்லா மகழ்ச்சயுற்று பெருமானின்‌ அற்புத நிகழ்ச்சியை வியந்து போற்றினார்‌. பின்னர்‌ மன்னர்‌,

ஸ்ரீ சங்காரவேலவ பெருமானுக்கு காணிக்கையாக 53 ஏக்கர்‌ பரப்புடைய நஞ்சை நிலம்‌ வழங்‌, அந்த நிலத்திற்கு *சிங்காரவேலி” என்ற பெயரும்‌ வைத்தார்‌

அந்த நிலத்திற்கு சிங்காரவேலி என்ற பெயா்‌ இன்றும்‌ வழங்கப்படுகிறது.

 

அருள்மிகு ஸ்ரீ  துர்க்கை

 

இவ்வாலயத்இன்‌ உள்‌ பிரகாரத்தின்‌ வடபுறத்தில்‌ வடக்கு முகமாக ஸ்ரீ தூர்க்கா. பரமேஸ்வரி வீற்றிருந்து அருள்‌ வழங்குகிறாள்‌.

 

அருள்மிகு சூரியன்‌

 

இவ்வாலயத்தின்‌ உள்‌ பிரகாரத்தின்‌ ஈழ்ப்புறத்தில்‌ வடக்கு நவக்கிரக நாயகர்களில்‌ முதல்‌ நாயகராம்‌ அருள்மிகு சூரிய பகவான்‌ மேற்கு முகமாக வீற்றிருந்து அருள்‌ வழங்குகிறார்‌.

அருள்மிகு சண்டேஸ்வரர்‌

ஆலயத்தின்‌ உள்பிரகாரத்தின்‌ கீழ்ப்புறத்தில்‌ ஸ்ரீசண்டேஸ்வர பெருமானுக்கு தனிக்கோவில்‌ கொண்டு பக்தர்களுக்கு அருள்‌ வழங்குகிறார்‌.

ஸ்ரீ தட்ஷிணாமூர்த்தி

நவக்கிரக நாயகர்களில்‌ இராஜா என்று சோதிடத்தில்‌ அழைக்கப்படும்‌ அருள்மிகு ஆலமர்‌ கடவுள்‌ தென்முகம்‌ நோக்கி வீற்றிருந்து அருள்  வழங்கிவருகிறார்‌. ஸ்ரீ குருபகவானின்‌ இருமருங்கிலுமாக ஆறு -சனகாதா முனிவர்கள்‌ இருந்து உபதேசம்‌ அருளும்‌ காட்சி - மிக அற்புத காட்சியாகும்‌. இதை

“இத்தி தன்னின்‌ கீழிரு  மூவர்க்‌

கத்திக்‌ கருளிய அரசே போற்றி”

என்று திருவாசக போற்றித்திரு அகவலில்‌ குறிப்பிடப்‌ படுவதை காண்க.

அருள்மிகு பெருமாள்‌

இவ்வாலயத்தின்‌ மேற்கு பிரகாரத்தின்‌ தென்‌ புறத்தில்‌ சங்கு சக்கரத்துடன்‌ அருள்மிகு பிள்ளைபெருமாள் ‌ என்னும்‌ நாமம்‌ கொண்டு, பெருமாள்‌ நின்ற திருக்கோலத்தில்‌ கிழக்கு முகமாக காட்சியளித்து, வருவோர்க்கு அருளும்‌ - பொருளும்‌ வழங்கி வருகிறார்‌.

 

  குலம்தரும்‌ செல்வம்‌. தந்திடும்‌.

அடியார்படும்‌ துயர்‌ ஆயின்‌

எல்லாம்‌ நிலம்‌ தரம்‌ செய்யும்‌

நீள்விசும்பு அருளும்‌ - திவ்யபிரபந்தம்‌

 

அருள்‌ பாலித்து அரியும்‌ சிவனும்‌ ஒன்றே என்ற த்துவத்தை விளக்குவதாக அமைந்துள்ள காட்சி சிறப்பிற்குரியது.

அருள்மிகு மகாலட்சுமி

 

ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமிக்கு இடதுபுறம்‌. கிழக்கு நோக்கி, அருள்மிகு ஸ்ரீ கஜலெட்சுமி வீற்றிருந்து அருள்‌ வழங்குகிறார்‌.

தீர்த்தச்‌ சிறப்பு

 

இவ்வாலயத்திற்கு தென்புறத்தில்‌ பிரம்ம புரீஸ்வரருக்கு தீர்த்தம்‌ வேண்டி தேவர்களெல்லாம்‌ ஒன்று கூடி இருக்குளம்‌ வெட்டினார்கள்‌. அத்திருக்‌குளத்திற்கு பிரம்ம தீர்த்தம்‌ என்று பெயர்‌.

 

அசுபதி தீர்த்தச்‌ சிறப்பு

 

மார்க்கண்டேயருக்காக நாள்தோறும்‌ சிவபூஜை செய்வதற்காக காசிகங்கா தீர்த்தத்தை திருக்கடவூர்‌ மயானத்து பெரிய பெருமான்‌ திருமயானத்தில்‌ வரவழைத்து கொடுத்து அருளினார்‌. அத்தீர்த்தம்‌ வந்த நாள்‌ பங்குனிமாதம்‌ அமாவாசை கழித்த மூன்றாம்‌ நாள்‌ வளர்பிறை அசுபதி நட்சத்திரம்‌ ஆகும்‌. இப்புனித தீர்த்தம்‌ அன்று முதல்‌ இன்று வரை  இருக்கடையூர்‌

மயானம்‌ ஸ்ரீ அபிராமி சமேத அமிர்தகடேஸ்வரருக்கு நாளும்‌ அபிஷேகம்‌ செய்யும்‌ பொருட்டு எடுத்து செல்லப்படுகிறது. காசி கங்காதீர்த்தம்‌ வந்த நன்னாளில்‌ வருடம்‌ தோறும்‌ திருக்கடவூர்‌ மயானம்‌ ஸ்ரீ வாடாமுலையாள்‌ உடனுறை பெரிய பெருமானுக்கும்‌ அம்பிகைக்கும்‌ மற்றும்‌ 

பரிவாரங்‌களுக்கும்‌ சிறப்பு அபிஷேகம்‌ நடைபெற்று வருகிறது.

 மக்கள்‌ அனைவரும்‌ அசுபதி புனித நீராடி, புண்ணிய பேறு எய்இி-வருகின்றனர்‌. இவ்வசபதி புனிதநீர்‌ நீராடும்‌ விழா இத்திருக்கோயிலில்‌ பெரும்‌ இருவிழாவாக ஆண்டுதோறும்‌ நடைபெற்று வருகிறது.

 

கோவிலின்‌ தலவிருட்ச சிறப்பு

ஆலயத்தின்‌ சிறப்பு தலவிருட்சம்‌ கொன்றை மரம்‌, மருவார்‌ கொன்றை மதிசூடி மாணிக்கத்தின்‌  மலைபோல வருவாய்‌ என சுந்தரமூர்த்தி சுவாமிகள்‌ குறிப்பிடுவதை காண்க. இன்றும்‌ கொன்றை மரம்‌ ஆலயத்தின்‌ வடபுற நுழைவாயிலின்‌ அருகில்‌ உள்ளது.

அவ்வூரின்‌ சிறப்பு பெயர்கள்‌

 

பிரம்மபுரி, வில்வராண்யம்‌, கடவூர்‌ மயானம்‌, பிரம்மபுரம்‌ என்றும்‌, சிவவேதபுரி என்றும்‌, இருமுறை அகச்சான்றில்‌ இருமெய்ஞானம்‌ எனவும்‌ இடம்‌பெற்றுள்ளது.

 

 

 

திருக்கோவிலில்‌ நடைபெறும்‌ திருவிழாக்கள்‌

 

வைகாசி விசாகப்‌ பெருவிழா, புரட்டாசி ராத்திரி விழா, ஐப்பசி கந்தர்‌ சஷ்டி, சூரசம்ஹார விழா, கார்த்தகை அண்ணாமலை ,தீபவிழா, மார்கழி திருவாதிரை விழா, தை தைபூச விழா, மாசிவராத்திரி விழா, பங்குனி அசுபதி புனித நீர்‌பெருவிழா முதலிய விழாக்கள்‌ இத்திருத்தலத்தில்‌ மிகச்‌சிறப்பாக நடைபெற்று வருகிறது

 

திருக்கோயில்‌ தேவாரச்‌ சிறப்பு

 

சிவ திருத்தலங்கள்‌ 274 ஆகும்‌. அதில்‌ மூவர்‌ பாடல்‌ பெத்ற தலங்கள்‌ 44.  அஇல்‌ ஒரு திருத்தலம்‌ இத்திருத்தலமாகும்‌. தில்லை ஈசனார்‌, சிவாலய முனிவருக்கு கூறிய வாக்குப்படி அகத்திய முனிவரால்‌ தொகுத்து கொடுக்கப்பட்ட இருபத்தி ஐந்து திருத்தலங்களில்‌ ஒன்றானதும்‌, மிகபுண்ணியமானதும்‌ ஆனது திருக்கடவூர்‌ மயானம்‌ என்று உணர்க. மேற்கு பார்த்த சிவ இருத்தலங்கள்‌ 40ல்‌ திருக்கடவூர்‌ மயானமும்‌ ஒன்றாகும்‌.

 

கல்வவட்டுகள்‌

 

கோயிலின்‌ உள்‌ மற்றும்‌ வெளிப்புற சுவர்களில்‌ ஏராளமான கல்வெட்டுகள்‌ உள்ளன. இக்கல்வெட்டுஆராய்ச்சியாளர்களின்‌ கூற்றுபடி பழங்காலத்து மன்னர்களால்‌, பலமுறை திருக்குடமுழுக்கு விழா தடைபெற்றுள்ளது எனவும்‌, சரிய முறையில்‌ நிர்வாகம்‌ நடைபெற்று உள்ளதாகவும்‌ இக்கல்வெட்டுக்கள்‌ மேலும்‌ தெரிவிக்கின்றன. இத்திருக்கோயிலுக்கு பிரம்மபுரி என்றும்‌ சவபெருமானை பெரிய பெருமான்‌ அடிகள்‌ என்றும்‌ அம்பிகையை பார்வதி தேவியார்‌ என்றும்‌ இக்கல்வெட்டுக்களில்‌ குறிப்பிடப்‌பட்டுள்ளது.

 

இருபதாம்‌ நூற்றாண்டில்‌ 1928 ஆம்‌ விபவ அண்டு ஆவணித்‌ இங்கள்‌ 25ஆம்‌ நாள்‌ (ஆ) ஞாயிறு வார நன்னாளின்‌ கடைசி முறையாக திருக்குடமுழுக்குவிழா நடைபெற்றுள்ளது.

 

புழுவாய்ப் பிறக்கினும் புண்ணியா வுன்னடி யென்மனத்தே

வழுவா திருக்க வரந்தர வேண்டும் 

 

 

என்னும்‌ திருநாவுக்கரசரின்‌ 'இருவாக்கிற்கணெங்க மெய்யன்பர்களும்‌ பக்தர்களும்‌ வாய்ப்பு ஏற்படும்‌ காலத்திலும்‌ மற்றும்‌ திருவிழாக்‌ காலங்களிலும்‌இத்திருக்கோவிலின்க௧ண்‌ வந்து தாங்கள்‌ இங்குள்ள எல்லாம்‌ வல்ல எம்பெருமானையும்‌, பெருமாட்டி யையும்‌ வந்து தரிசித்து பெருமான்‌ இருவருள்‌ பெருவீராக.

 

சிவமயம் 

ஸ்ரீ திருஞானசம்பந்த சுவாமிகள் அருளிச் செய்த திருப்பதிகம் 

திருச்சிற்றம்பலம் 

பண் : காந்தாரம்

வரிய மறையார் பிறையார்

  மலையோர் சிலையா வணக்கி

எரிய மதில்கள் எய்தார்

  எறியு முசலம் உடையார்

கரிய மிடறும் உடையார்

  கடவூர் மயானம் அமர்ந்தார்

பெரிய விடைமேல் வருவார்

  அவரெம் பெருமான் அடிகளே.  1 

 

 

மங்கைமணந்த மார்பர் மழுவாள்

  வலனொன்றேந்திக்

கங்கைசடையிற் கரந்தார்

  கடவூர்மயானம் அமர்ந்தார்

செங்கண்வெள்ளே றேறிச்

  செல்வஞ்செய்யா வருவார்

அங்கையேறிய மறியார்

  அவரெம் பெருமான் அடிகளே.  2 

 

 

ஈடல்இடபம் இசைய

  ஏறிமழுவொன் றேந்திக்

காடதிடமா வுடையார்

  கடவூர்மயானம் அமர்ந்தார்

பாடலிசைகொள் கருவி

  படுதம்பலவும் பயில்வார்

ஆடல்அரவம் உடையார்

  அவரெம் பெருமான் அடிகளே.  3 

 

 

இறைநின்றிலங்கு வளையாள்

  இளையாளொருபா லுடையார்

மறைநின்றிலங்கு மொழியார்

  மலையார்மனத்தின் மிசையார்

கறைநின்றிலங்கு பொழில்சூழ்

  கடவூர்மயானம் அமர்ந்தார்

பிறைநின்றிலங்கு சடையார்

  அவரெம் பெருமான் அடிகளே.  4 

 

 

வெள்ளையெருத்தின் மிசையார்

  விரிதோடொருகா திலங்கத்

துள்ளும்இளமான் மறியார்

  சுடர்பொற்சடைகள் துளங்கக்

கள்ளநகுவெண் டலையார்

  கடவூர்மயானம் அமர்ந்தார்

பிள்ளைமதியம் உடையார்

  அவரெம் பெருமான் அடிகளே.  5 

 

 

பொன்றாதுதிரு மணங்கொள்

  புனைபூங்கொன்றை புனைந்தார்

ஒன்றாவெள்ளே றுயர்த்த

  துடையாரதுவே யூர்வார்

கன்றாவினஞ்சூழ் புறவிற்

  கடவூர் மயானம் அமர்ந்தார்

பின்தாழ் சடையார் ஒருவர்

  அவரெம் பெருமான் அடிகளே.  6 

 

 

பாசமான களைவார்

  பரிவார்க்கமுதம் அனையார்

ஆசைதீரக் கொடுப்பார்

  அலங்கல்விடைமேல் வருவார்

காசைமலர்போல் மிடற்றார்

  கடவூர்மயானம் அமர்ந்தார்

பேசவருவார் ஒருவர் அவரெம்

  பெருமான் அடிகளே.  7 

 

 

செற்றஅரக்கன் அலறத்

  திகழ்சேவடிமெல் விரலாற்

கற்குன்றடர்த்த பெருமான்

  கடவூர் மயானம் அமர்ந்தார்

மற்றொன்றிணையில் வலிய

  மாசில்வெள்ளி மலைபோல்

பெற்றொன்றேறி வருவார்

  அவரெம் பெருமான் அடிகளே.  8 

 

 

வருமாகரியின் உரியார்

  வளர்புன்சடையார் விடையார்

கருமான்உரிதோல் உடையார்

  கடவூர்மயானம் அமர்ந்தார்

திருமாலொடுநான் முகனுந்

  தேர்ந்துங்காணமுன் ணொண்ணாப்

பெருமானெனவும் வருவார்

  அவரெம் பெருமான் அடிகளே.  9 

 

 

தூயவிடைமேல் வருவார்

  துன்னாருடைய மதில்கள்

காயவேவச் செற்றார்

  கடவூர்மயானம் அமர்ந்தார்

தீயகருமஞ் சொல்லுஞ்

  சிறுபுன்தேரர் அமணர்

பேய்பேயென்ன வருவார்

  அவரெம் பெருமான் அடிகளே.  10 

 

 

மரவம் பொழில்சூழ் கடவூர்

  மன்னுமயானம் அமர்ந்த

அரவம் அசைத்த பெருமான்

  அகலம்அறிய லாகப்

பரவுமுறையே பயிலும்

  பந்தன்செஞ்சொல் மாலை

இரவும்பகலும் பரவி நினைவார்

  வினைகள் இலரே.

 

சிவமயம் 

ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த 

திருக்குறுந்தொகை 

 

குழைகொள் காதினர்

  கோவண ஆடையர்

உழையர் தாங்கட

  வூரின் மயானத்தார்

பழைய தம்மடி

  யார்செயும் பாவமும்

பிழையுந் தீர்ப்பர்

  பெருமா னடிகளே.  1 

 

 

உன்னி வானவர்

  ஓதிய சிந்தையிற்

கன்னல் தேன்கட

  வூரின் மயானத்தார்

தன்னை நோக்கித்

  தொழுதெழு வார்க்கெலாம்

பின்னை என்னார்

  பெருமா னடிகளே.  2 

 

 

சூல மேந்துவர்

  தோலுடை ஆடையர்

ஆல முண்டமு

  தேமிகத் தேக்குவர்

கால காலர்

  கடவூர் மயானத்தார்

மாலை மார்பர்

  பெருமா னடிகளே.  3 

 

 

இறைவ னாரிமை

  யோர்தொழு பைங்கழல்

மறவ னார்கட

  வூரின் மயானத்தார்

அறவ னாரடி

  யாரடி யார்தங்கள்

பிறவி தீர்ப்பர்

  பெருமா னடிகளே.  4 

 

 

கத்து காளி

  கதந்தணி வித்தவர்

மத்தர் தாங்கட

  வூரின் மயானத்தார்

ஒத்தொவ் வாதன

  செய்துழல் வாரொரு

பித்தர் காணும்

  பெருமா னடிகளே.  5 

 

 

எரிகொள் மேனி

  இளம்பிறை வைத்தவர்

கரியர் தாங்கட

  வூரின் மயானத்தார்

அரியர் அண்டத்து

  ளோரயன் மாலுக்கும்

பெரியர் காணும்

  பெருமா னடிகளே.  6 

 

 

அணங்கு பாகத்தர்

  ஆரண நான்மறை

கணங்கள் சேர்கட

  வூரின் மயானத்தார்

வணங்கு வாரிடர்

  தீர்ப்பர் மயக்குறும்

பிணங்கொள் காடர்

  பெருமா னடிகளே.  7 

 

 

அரவு கையினர்

  ஆதி புராணனார்

மரவு சேர்கட

  வூரின் மயானத்தார்

பரவு வாரிடர்

  தீர்ப்பர் பணிகொள்வர்

பிரமன் மாற்கும்

  பெருமா னடிகளே.  8 

 

 

இப்பதிகத்தில் 9-ம் செய்யுள் சிதைந்து போயிற்று.  9 

 

சிவமயம் 

ஸ்ரீ சுந்தரமூர்த்தி  சுவாமிகள் அருளிச் செய்த 

திருப்பதிகம் 

 பண் : பழம்பஞ்சுரம்

 

மருவார் கொன்றை மதிசூடி

  மாணிக் கத்தின் மலைபோல

வருவார் விடைமேல் மாதோடு

  மகிழ்ந்து பூதப் படைசூழத்

திருமால் பிரமன் இந்திரற்குந்

  தேவர் நாகர் தானவர்க்கும்

பெருமான் கடவூர் மயானத்துப்

  பெரிய பெருமா னடிகளே.  1 

 

 

விண்ணோர் தலைவர் வெண்புரிநூல்

  மார்பர் வேத கீதத்தர்

கண்ணார் நுதலர் நகுதலையர்

  கால காலர் கடவூரர்

எண்ணார் புரமூன் றெரிசெய்த

  இறைவ ருமையோ ரொருபாகம்

பெண்ணா ணாவர் மயானத்துப்

  பெரிய பெருமா னடிகளே.  2 

 

 

காயும் புலியின் அதளுடையர்

  கண்டர் எண்டோட் கடவூரர்

தாயுந் தந்தை பல்லுயிர்க்குந்

  தாமே யாய தலைவனார்

பாயும் விடையொன் றதுவேறிப்

  பலிதேர்ந் துண்ணும் பரமேட்டி

பேய்கள் வாழும் மயானத்துப்

  பெரிய பெருமா னடிகளே.  3 

 

 

நறைசேர் மலரைங் கணையானை

  நயனத் தீயாற் பொடிசெய்த

இறையா ராவர் எல்லார்க்கும்

  இல்லை யென்னா தருள்செய்வார்

பறையார் முழவம் பாட்டோடு

  பயிலுந் தொண்டர் பயில்கடவூர்ப்

பிறையார் சடையார் மயானத்துப்

  பெரிய பெருமா னடிகளே.  4 

 

 

கொத்தார் கொன்றை மதிசூடிக்

  கோள்நா கங்கள் பூணாக

மத்த யானை உரிபோர்த்து

  மருப்பும் ஆமைத் தாலியார்

பத்தி செய்து பாரிடங்கள்

  பாடி ஆடப் பலிகொள்ளும்

பித்தர் கடவூர் மயானத்துப்

  பெரிய பெருமா னடிகளே.  5 

 

 

துணிவார் கீளுங் கோவணமுந்

  துதைந்து சுடலைப் பொடியணிந்து

பணிமே லிட்ட பாசுபதர்

  பஞ்ச வடிமார் பினர்கடவூர்த்

திணிவார் குழையார் புரமூன்றுந்

  தீவாய்ப் படுத்த சேவகனார்

பிணிவார் சடையார் மயானத்துப்

  பெரிய பெருமா னடிகளே.  6 

 

 

காரார் கடலின் நஞ்சுண்ட

  கண்டர் கடவூர் உறைவாணர்

தேரார் அரக்கன் போய்வீழ்ந்து

  சிதைய விரலா லூன்றினார்

ஊர்தான் ஆவ துலகேழும்

  உடையார்க் கொற்றி யூராரூர்

பேரா யிரவர் மயானத்துப்

  பெரிய பெருமா னடிகளே.  7 

 

 

வாடா முலையாள் தன்னோடும்

  மகிழ்ந்து கானில் வேடுவனாய்க்

கோடார் கேழற் பின்சென்று

  குறுகி விசயன் தவமழித்து

நாடா வண்ணஞ் செருச்செய்து

  ஆவ நாழி நிலையருள்செய்

பீடார் சடையார் மயானத்துப்

  பெரிய பெருமா னடிகளே.  8 

 

 

வேழம் உரிப்பர் மழுவாளர்

  வேள்வி அழிப்பர் சிரமறுப்பர்

ஆழி அளிப்பர் அரிதனக்கன்

  றானஞ் சுகப்பர் அறமுரைப்பர்

ஏழைத் தலைவர் கடவூரில்

  இறைவர் சிறுமான் மறிக்கையர்

பேழைச் சடையர் மயானத்துப்

  பெரிய பெருமா னடிகளே.  9 

 

 

மாட மல்கு கடவூரில்

  மறையோ ரேத்தும் மயானத்துப்

பீடை தீர அடியாருக்

  கருளும் பெருமா னடிகள்சீர்

நாடி நாவ லாரூரன்

  நம்பி சொன்ன நற்றமிழ்கள்

பாடு மடியார் கேட்பார்மேற்

  பாவ மான பறையுமே.  10 

  

 

திருச்சிற்றம்பலம்

 

சிவமயம் 

ஸ்ரீ திருநாவுக்கரசு சுவாமிகள் அருளிச் செய்த 

தீபத்தின் சிறப்பு 

 

 

நாளும்‌ நல்‌எண்ணெய்‌ தீபம்‌ இட்டு

ஏற்றுகின்றவருக்கு இல்லையாம்‌ பிறப்பு

வரும்‌ சகல செல்வ யோகமிக்க பெருவாழ்வு

எய்யக்கான்கி ன்றீர்‌, என்றும்‌

விளக்கினால் பெற்ற இன்பம்‌

மெழுகினால் பதிற்றாகும் 

துளக்கினன்‌ நன்‌. மலா்‌ தொடுத்தால்‌

தூய வின்னேரலாகும்‌

விளக்கிட்டார்‌ பேறு சொல்லி

மெய்நெறி ஞான மாகும்‌

அலப்பில்‌ கீ தம்‌ சொன்னார்க்கு

அடிகள்‌ தாம்‌ அருளுமாறே   -  திருநாவுக்கரசு 

 

இவ்வாலயத்தில் தீபம்  போடுவது மிக மிக

சிறப்பானது என்று நாடி  சோதிடத்தில்‌ வருகின்றது.

 

(No commerical   use OR copyright infringement intended.  Book published by Sri MK Ganesa Gurukkal is scripted for easy readability and use)

 

 

 

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...