Monday, September 12, 2016

மலரும் நினைவுகள் கெமிஸ்ட்ரி சீதாராமன்

முதல் செமஸ்டர். அரை ட்ராயர் பையனில் இருந்து திடீரென்று முழு பாண்ட் போட்டதனால், ஏதோ எல்லாம் தெரிந்துவிட்டது போன்ற ஒரு எண்ணம்.(+2 வில் பேண்ட்தான் என்பது வேறு சமாசாரம்).

கெமிஸ்ட்ரி சீதாராமன் வகுப்பு.  அட்மின் ப்ளாக் முதல் மாடி  கோடி வகுப்பில் பாடம். ஏதொ பாடம் பற்றிபேசிக் கொண்டிருக்க்கும்போது சீதாராமன் முதல் வரிசையில் இருந்த ஒரு மாணவனின் எவர்ஸில்வர் டிபன் பாக்ஸை தொட அதன் சூடு அவரை ஆச்சரியப்படுத்தியிருக்க வேண்டும்.

"Metals are a good conductor of electricity" என்றார்.

என் நாக்கில் அன்று(ம்) சனி.

"Sir, stainless steel is not a metal but an alloy".

என் மீது கடுப்ப்பானவராக,
" can you define how heat flows throw a body" என்று மடக்கினார்.

பட்ட பகலிலேயே ஏதோஅருந்ததி முதல் பல கோடி நட்சத்திரங்கள் ஆகாயத்தில் தெரிவதுபோல,  விண்ணை நோக்கினேன்.

1632 (தானே) ஜெய்சங்கர் எழுந்து " due to flow of electrons " என்றான்.

என்னை ஒரு ஏளனப்பார்வை பார்த்து சீதாராமன் பாடத்தைத் தொடர்ந்தார்.

மோதலில் தொடங்கி காதலில் முடிந்தது.

ஏதோ ஒரு காலகட்டத்தில் Sunday Indian expressல் " Schrödinger wave mechanics and its vedic connections" என்று ஒரு article வந்ததை காண்பித்து நல்ல பெயர் வாங்கிக்கொண்டேன்.

அவரும் என்னைப்போல் சுப்பிரமணிய புர சண்டியர் என்பதால் அடிக்கடி பார்ப்போம். கூழைக்கும்பிடு கட்டாயம் உண்டு.

என் வீட்டு மாடியில், உட்கார்ந்து மாலையில் குமுதம் முதலிய தமிழ்க்காவியங்களை படிப்பது வழக்கம். அவர் மாலை அவர் வீட்டு மொட்டைமாடியில் உலா வரும்போது, நான் படிப்பதைப் பார்த்து, அடுத்த நாள் (என்னை நல்லவன்ன்ன்ன்ன்ன்னு நம்ம்ம்பி ஏமாந்து பாராட்டினார்.

பாவம். எல்லா சீதாராமன்களும் அப்பாவிகள்தானோ.

No comments:

குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...