Friday, November 12, 2021

குருபெயர்ச்சி உங்களுக்கு சாதகமாக ...

இன்று 13 நவம்பர் 2021 குருபெயர்ச்சி . குருவருள் இருந்தால் பெயர்ச்சி எந்தக் கெடுபலனும் இன்றி  நற்பலனை மாத்திரம் தரும். 

லோக குரு  தக்ஷிணாமூர்த்தி  (தென்முகக்கடவுள்)என அறியப்படும் சிவபெருமான். அப்பேற்பட்ட சிவபெருமான் குருவாக ஏற்ற ஒரே கடவுள் சிவகுமாரனான  சுப்ரமணியசுவாமி. லோககுருவும் அவரது குருவும் ஒன்று சேர்ந்த ஸ்தலமென்றால் பக்தர்களுக்கு குருவருள் நிச்சியமல்லவா !!

(ஒரு நல்ல தகவலை பக்தர்களிடம் சேர்க்க குருபெயர்ச்சி அப்படி இப்படி என்று Build -up  செய்தால் தான் மக்கள் படிக்கிறேன் என்கிறார்கள் )



 குருவருள் பெற சகல தோஷங்களும் நீங்க இத்தலத்தை நினையுங்கள். இறைவனைத் துதியுங்கள்.  பன்னிரண்டு ராசிகளுக்கும் நற்பலன் தருவார்.  நாளும் கோளும்  நம்மை அண்டாது.

நாளென் செயும்வினை தானென் செயுமெனை நாடிவந்த
   கோளென் செயுங்கொடுங் கூற்றென் செயுங்கும ரேசரிரு
      தாளுஞ் சிலம்புஞ் சதங்கையும் தண்டையுஞ் சண்முகமுந்
         தோளுங் கடம்பு மெனக்குமுன் னேவந்து தோன்றிடினே.

தெய்வானையை முருகப்பெருமான் மணந்த  தலம்  திருப்பரங்குன்றம் என்பது நம்மில் பலருக்குத் தெரியும். 


திருமணம் என்று இருந்தால் நிச்சயதார்த்தம் என்று ஒன்று இருக்கவேண்டும் என்பது  தெய்வத்திருமணத்தில் இருந்து வந்த ஒரு வழக்கம். அது சரி, தெய்வயானை திருமணம் எங்கு நிச்சயம் ஆயிற்று.


சூரபத்மனை ஆட்கொள்ளுமுன்  அவன் மகனும் சிறந்த தபஸ்வியும், சிவபக்தனுமான ஹிரண்யாசுரனை முருகப்பெருமான் வதம் செய்தார். ப்ரம்ஹ  ஞானம் பெற்ற  ஒருவனைக் கொன்ற பிரம்மஹத்தி தோஷம் நீங்க இறைவனை வணங்கினார் சுப்ரமண்யர்.  அவரது பிரார்த்தனையை ஏற்றுக்கொண்ட சிவபெருமான்,  நானென்றால் அது நீயும் நானும், நீ வேறு நான் வேறல்ல எனவே தோஷம் உன்னைச்சேராது என்று மகனை வாழ்த்தி தன்னருகே சமமாக அமர்த்திக்கொண்டார். 



ஒரே சந்நிதியில் சிவனும், மகனும் ஒன்றே அமர்ந்த அபூர்வ ஸ்தலம் திருவிடைக்கழி என்று இன்று அறியப்படும் திருக்குராவடி. குரா மரத்தின் கீழ் அமர்ந்து இறைவனைத் துதித்தால் காரணப்பெயர்.

திருமாலின் கண் நீர்த்துளியில் தோன்றி முருகனைத்திருமணம் செய்ய தவமிருந்த அமுதவல்லி, இந்திரன் மகளாக பிறப்பெடுத்து வளர, சூரபத்மனை சேவலும் மயிலுமாகக் கொண்ட பிறகு (சூரனை முருகன் கொல்லவில்லை, சேவலும் மயிலுமாக ஆட்கொண்டார் என்பது அறிஞர்கள் வாக்கு) இந்திரன் தன வளர்ப்பு மகளை  முருகனுக்கு மணம்  பேச இருவீட்டார் பரங்குன்றத்தில் திருமணம் செய்ய விழைந்து  நிச்சயம்  செய்த இடம் திருவிடைக்கழி.


இதைக்குறிக்கும் வண்ணம்  சிவபெருமானும் முருகனும் ஒரு புரம்  நிற்க, நேர் எதிரில் தெய்வானை சன்னதி  கொள்ளும்படி அமைந்த திருத்தலம் இது.



இங்கு நிச்சயம் ஆன பின்பே திருப்பரங்குன்றத்தில் திருமணம் ஆனது என்பது நம்பிக்கை.

மாயவரம், திருக்கடையூர், திருநள்ளாறு  போன்ற தலங்களுக்கு அருகில்.  அருணகிரிநாதர்  திருப்புகழால்  போற்றிய திருத்தலம்.





கூகுள் வரைபட உதவி:  https://goo.gl/maps/VUcyLDPAfphLarFJ9

யூடியூப் வீடியோ : https://youtu.be/eNzT9E1Dfqk

இத்தலத்தில் அருணகிரியார் இயற்றிய ஒரு திருப்புகழ் ,.....


அனலப் பரிபுக் ககுணத் ரயம்வைத் தடர்பொய்க் குருதிக் ...... குடில்பேணா அவலக் கவலைச் சவலைக் கலைகற் றதனிற் பொருள்சற் ...... றறியாதே குனகித் தனகிக் கனலொத் துருகிக் குலவிக் கலவிக் ...... கொடியார்தங் கொடுமைக் கடுமைக் குவளைக் கடையிற் குலைபட் டலையக் ...... கடவேனோ தினைவித் தினநற் புனமுற் றகுறத் திருவைப் புணர்பொற் ...... புயவீரா

தெளியத் தெளியப் பவளச் சடிலச்

சிவனுக் கொருசொற் ...... பகர்வோனே கனகச் சிகரக் குலவெற் புருவக் கறுவிப் பொருகைக் ...... கதிர்வேலா கழியைக் கிழியக் கயல்தத் துமிடைக் கழியிற் குமரப் ...... பெருமாளே.


குரங்கணில்முட்டம், இறையவளை உடனுறை வாலீஸ்வரர் கோவில்

தொண்டைநாட்டு தேவாரப்  பாடல் பெற்ற  தலங்களுள் ஆறாவது தலமாக அறியப்படும் குரங்கணில்முட்டம் (TNT 006), காஞ்சிபுரத்திற்கு அருகில், ஓரிக்கை, தூசி ...